பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜூன் ரெட்டி’.

இதன் தமிழ் ரீமேக்கை பிரபல இயக்குனர் பாலா இயக்குகிறார்.

இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலா இயக்கவுள்ள இப்படத்திற்கு ‘வர்மா’ என பெயரிட்டுள்ளதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை முன்பே வெளியிடவிருந்த விக்ரம், ஒளிப்பதிவாளர் பிரியன் மரணமடைந்துவிட்டதால் தள்ளி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bala directorial Arjun reddy tamil remake titled Varma

மோடி திட்டத்திற்கு எதிர்ப்பு பாடல்; சிம்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வருடம் 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு ரூ. 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி.

இவரின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சாமானிய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

எனவே இதனை முன்னிட்டு இந்த வருடம் நவம்பர் 8ல், தட்றோம் தூக்றோம் என்ற படத்தில் உள்ள ஒரு பாடல் இணையத்தில் வெளியானது.

டிமாண்டிசேஷன் ஆந்தம் என்ற பெயரில் இப்பாடல் வெளியானது.

கபிலன் வைரமுத்து எழுதிய இப்பாடலை சிம்பு பாடியிருந்தார்.

இந்த பாட்டில்…

காந்தி நோட்டு ரெண்டு அம்பேலாகி போயாச்சு….
பேங்க ஏடிஎம்மில் அஸ்க்கு புஸ்க்கு ஆயாச்சு…
சோக்கா சொக்கா மாட்டி நடுத்தெருவுக்கு வந்தாச்சு….
காத்து கிடந்த ஜனம் காக்கா கூட்டம் போலாச்சு….

என்ற வரிகளோடு பாடல் தொடங்குகிறது.

மல மலயா மோசம் செஞ்ச மூதேவிங்க பாரின் போயாச்சு (மல்லையா கார்டூன் வருகிறது)

இதனையடுத்து NO CASH NO CASH என்ற கோரஸ் வருகிறது.
ஏழைகள் வீட்டில் இருப்பது எல்லாம் சிவப்பு பணமடா….
குருவி போல சேர்த்த காசு கள்ளம் இல்லடா…
நாட்ட மாத்த வேனுமின்னு நீங்க நினைச்சா?…
கோட்டு போட்ட குண்டர்களின் சங்க புடிங்கடா? என்ற வரிகள் வருகிறது.

(இந்த வரிகள் வரும்போது பிரதமர் மோடி படம் காட்டப்படுகிறது)

எனவே, இப்பாடலுக்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பாடலை பாடிய சிம்பு வீட்டை முற்றுகையிட போவதாக செய்திகள் வந்தன.

இதனையடுத்து சிம்பு வீட்டிற்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Police protection at Simbu house due to Demonetization Anthem issue

For Song click here

https://www.filmistreet.com/video/thatrom-thookrom/

19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ள படம் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார்

இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி’ .

அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்.

சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது.

மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார்.

தென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும்.

தமிழ் சினிமாவை ஆண்டனி அடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

Teaser Link :

Katrin Kadhal Lyric Video Link :

பதுங்கி பாயனும் தல பட சிங்கிள் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் “பதுங்கி பாயனும் தல”.

மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி, சிங்கம்புலி, M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின்பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார்.

இந்த பாடலின் SINGLE TRACK – ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

இதுகுறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது. இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்க எம்ஜிஆர் நடிக்க ஆரம்பித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு, ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்குகிறார்.

‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ், இந்தப் படத்திற்கும் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

எம்.ஜி.ஆராக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிளாக் பாண்டி, சிங்கம்புலி, முத்துராமன், செளந்தர ராஜா ஆகியோர் நடிக்கின்றனர்.

வி.என்.ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரிர் கேரக்டரில் நடிக்க உருவ ஒற்றுமை கொண்ட நடிகைகளைத் தேடி வருகின்றனர்.

இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் வேணுகோபால், கே.பாண்டியராஜன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் ஜூலி சினிமாவில் நாயகியாக நடிக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கு பெற்றார் ஜூலி.

இதனையடுத்து தற்போது கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகவும் மாறியுள்ளார்.

இந்நிலையில் பிரபல விளம்பர பட இயக்குனர் பாபா பகுர்தீன் இயக்கியுள்ள ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இது ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக எடுக்கப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து பாபா பகுர்தீன் இயக்கள்ள ஒரு திரைப்படத்தில் ஜூலி இரண்டாவது நாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.

Bigg boss fame Julie going to act in movie

More Articles
Follows