இளவயது அம்பேத்கர், பாரதியார், பெரியார் வேடங்களில் நடிக்க ஆசையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர், பாரதியார் முதல் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படங்களை பார்த்திருக்கிறோம்.

தற்போது அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை படம் ஒன்று உருவாகவுள்ளது.

RUN HORSE MEDIA என்ற நிறுவனம் பாபா சாகேப் என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்கிறது.

இத்திரைப்படம் பற்றி இயக்குநரும் தயாரிப்பாளருமான அஜய் குமார் கூறியதாவது…

“இது சாதி தலைவரின் படம் அல்ல. ஒரு உன்னத தேசத்தலைவரின் படம்.

ஹாலிவுட்டில் அட்டன்பிரோ என்றவர் காந்தியின் வாழ்கையை படமாக எடுத்தார்.

எனவே, ஒரு தமிழனாகிய நான் நமது அம்பேத்கரின் படத்தை உருவாக்க உள்ளேன். ஆனால், அம்பேத்கர் உருவத்தில் நடிக்க எவரும் எளிதாக சிக்கவில்லை.
சுமார் 10,000 பேர்க்கு மேல் தேர்வு நடத்தினோம்.

இறுதியாக ஆய்வுக்கூடம் படத்தின் நாயகன் ராஜகணபதியை தேர்வு செய்தோம்,

இவர் மட்டுமில்லாமல் அம்பேத்கரின் குழந்தை மற்றும் இளமைவயது தோற்றத்திற்கும் பாரதியார், பெரியார் போன்ற தலைவர்களின் வேடங்களுக்கும் நடிகர்கள் தேவை.

அன்னல் அம்பேத்கரின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டமும், நடிகர்களுக்கான தேர்வும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.

தேர்வு நடைபெறும் நாள் மற்றும் முகவரி விவரங்கள்…

நாள் :19/06/2016
இடம்:வள்ளுவன் வாசுகி மண்டபம், அஜய் விளையாட்டு அரங்கம் அருகில்,
ஜெக ஜீவானந்தம் சிலை சாலை, முருகப்பா கல்லூரி பஸ் ஸ்டாப், ஆவடி,
சென்னை -54

தொடர்புக்கு… 80569 46323,70929 51113.

MAIL: ajaays2015@gmail .com

‘ஒரு ஒளியால் மற்றொரு ஒளியை ஏற்றும் முயற்சி இது.’ சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை கௌரவித்து வருகிறார் நடிகர் சிவகுமார்.

கடந்த 36 வருடங்களாக இந்த சேவையை தனது அறக்கட்டளை மூலம் செய்து வரும் இவர்.

தற்போது சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’ தனது 37ஆம் ஆண்டிற்கான நிகழ்வை நடத்தியது.

இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது…

“இங்கே பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரும் சிறப்பான முறையில் கல்வி கற்று நல்ல மதிப்பெண்ணை பெற்று இருக்கிறார்கள்.

இவர்களை பாராட்டி கௌரவிக்கும் இந்த விழா ஒரு குடும்ப விழா போன்றது.

அப்பா நடத்திய இந்த நல்ல காரியங்களை பார்க்கும்போது எங்களுக்கும் இதை தொடர ஆசை வந்தது.

1300 க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்லூரிக் கனவை பலரின் உதவியோடு நனவாக்கி இருக்கிறோம்.

தொழிற்கல்விக்கு முன்னுரிமை தரும் வகையில் கடந்தாண்டு முதல், 40 மாணவர்களுக்கு தொழிற்கல்வி பயிற்சி கொடுக்கிறோம்.

ஒரு ஒளியைக் கொண்டு மற்றொரு ஒளியை ஏற்றும் முயற்சி இது. அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்க வேண்டும்” என்று பேசினார் சூர்யா.

விஜய்-லைகா கூட்டணியில் தெறி இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

தற்காலிகமாக ‘விஜய் 60’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடக்கிறது.

நாகிரெட்டியின் விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போதே தனது அடுத்த படத்தை விஜய் முடிவு செய்துவிடுவார்.

எனவே இவரின் அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தொடங்கியுள்ளது.

விஜய் 61 படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக செய்தியை நம் தளத்தில் படித்திருப்பீர்கள்.

இப்படத்தை அட்லி இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் கத்திக்கு பிறகு லைகாவும், தெறிக்கு பிறகு அட்லியும் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி விலகியதால் படையெடுக்கும் சிபிராஜ்-சிவா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்து, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கபாலி வருகிற ஜூலை 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

எனவே இப்படத்தின் வருகையால் பல படங்கள் தள்ளி வைக்கப்பட்டன.

ஆனால் தற்போது கபாலி தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், மற்ற படங்கள் வரிசைக் கட்ட ஆரம்பித்து விட்டன.

எனவே அன்றைய தினத்தில் ‘ஜாக்சன் துரை’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பர்மா’ படத்தை தொடர்ந்து தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதனைத் தொடர்ந்து திரைவண்ணன் இயக்கியுள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ என்ற படமும் ஜூலை-1ல் ரிலீஸ் ஆகிறது.

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன், நைனா சர்வார், சென்ட்ராயன், அருண் பாலாஜி, சிங்கமுத்து, மன்சூர் அலிகான், டிபி.கஜேந்திரன், மதுமிதா, ராஜ்கபூர், செல்வபாரதி உட்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

அஜித் சொன்னப்படி காகித கப்பலில் சிவபாலன் அறிமுகம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறு சிறு கேரக்டர்களில் நடித்தாலும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் அப்புக்குட்டி.

‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் நாயகனாக நடித்து சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றவர் இவர்.

இதனிடையில் வேதாளம் படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் இவரது கெட்டப்பை மாற்றி நிறைய புகைப்படங்களை எடுத்தார்.

அப்போது அப்புக்குட்டியின் நிஜப்பெயரான சிவபாலன் என்ற பெயரிலேயே நடிக்க சொன்னார் அஜித்.

அதன்படி தற்போது ‘காகித கப்பல்’ என்ற படத்தில் சிவபாலன் என்ற பெயரில் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக தில்லிஜா என்பவர் நடிக்கிறார்.

இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன், பரோட்டா முருகேசன், எலி ராஜன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிரசன்னா இசையமைக்க, வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்.

எஸ்.சிவராமன் இயக்குகும் இப்படத்தை எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல் சார்பில் வி.ஏ.துரை தயாரிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் கூறியதாவது…

“குப்பை பொறுக்கிற வேலையாக இருந்தாலும், அதை மக்களுக்கு செய்யும் சேவையாகவும் நினைக்கிறான் நாயகன்.

இவரது நல்ல குணத்தை அறிந்த நாயகி இவரையே காதலித்து மணந்து கொள்கிறாள்.

ஆனால் திருமணத்துக்கு பிறகு நாயகிக்கு ஏற்பட்ட ஆசையால் நாயகனின் வாழ்க்கை காகித கப்பலாக மாறுகிறது. அது எப்படி? என்பதை சுவாரஸ்யமாக கூறியிருக்கிறோம்” என்றார்

 

‘நல்லதையே எங்கள் பெற்றோர் செய்து காட்டினார்கள்’ – கார்த்தி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை பாராட்டி தனது அறக்கட்டளை மூலம் கவுரவித்து வருகிறார் சிவகுமார்.

1979 முதல் அதாவது கடந்த 36 வருடங்களாக இந்த சேவையை இவர் செய்து வருகிறார்.

தற்போது சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டிற்கான ‘சிவகுமார் கல்வி அறக்கட்டளை’யின் 37-ஆம் ஆண்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 20 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கார்த்தி தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது….

“இதை எங்கள் குடும்ப விழா என்றே சொல்வேன். எங்கள் அப்பாவும் அம்மாவும் அட்வைஸ் மட்டும் செய்யாமல் நல்ல காரியங்களில் ஈடுப்படுவதை எங்கள் கண் முன்னே செய்து காட்டினார்கள்.

நன்றாக படிக்கும் மாணவர்கள் அவர்களின் படிப்பை சமூகத்திற்கு பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று பேசினார்.

More Articles
Follows