பாடகி ராஜலட்சுமியின் பெரிய ரசிகை நான் – ‘அயலி’ அபி நட்சத்திரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாடகி ராஜலட்சுமி செந்தில் முதன்முறையாக நாயகியாக நடித்துள்ள படம் ‘லைசென்ஸ்’.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை அபி நட்சத்திரா பேசும்போது…

“நான் நடித்த அயலி வெப் சீரிஸ்க்கு முன்பாகவே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டேன். ராஜலட்சுமி அக்காவின் மிகப்பெரிய ரசிகை நான். அயலிக்கு கொடுத்த ஆதரவு போல இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவு வேண்டும்” என்றார்.

படத்தொகுப்பாளர் வெரோனிகா பிரசாத் பேசும்போது, “எடிட்டர் ஆண்டனியை குருவாக ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் படத்தொகுப்பை கற்றுக்கொண்டேன். இந்தப் படம் தமிழ் சினிமாவில் எனக்கான ஒரு லைசென்ஸ் ஆக இருக்கும்” என்றார்.

இயக்குனரும் சினிமா விமர்சகருமான கேபிள் சங்கர் பேசும்போது..

“இருப்பதிலேயே சின்ன படம் பண்ணுவது தான் கஷ்டமான விஷயம். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல், நல்ல கதை வைத்திருக்கிறேன் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்.

அந்த நம்பிக்கைக்கு கிடைத்த முதல் பரிசாக தான் இந்த படத்தின் இசை உரிமையை எம் ஆர் டி நிறுவனம் வாங்கியிருக்கின்றனர். இது ஒரு பாசிட்டிவ்வான படம்” என்று கூறினார்.

எடிட்டர் ஆண்டனி பேசும்போது…

“இந்த படம் சின்ன படம் என்று சொன்னார்கள். ஆனால் இதை பார்க்கும்போது கொஞ்சம் பெரிய படமாகவே தெரிகிறது. முதன் முதலில் ஒரு பெண், சினிமாவில் படத்தொகுப்பாளராக வருவது பெருமையாக இருக்கிறது” என்று கூறினார்.

துரிதம் பட நாயகன் ஜெகன் பேசும்போது…

“தயாரிப்பாளர் ஜீவானந்தம் எனக்கு நல்ல நண்பர். ஆனால் இப்படி ஒரு படம் தயாரிக்கிறேன் என அவர் சொன்ன போது இயக்குனர் கணபதி பாலமுருகன் மீது எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இரண்டு படங்களில் நடித்து அனுபவப்பட்டதால் அந்த சந்தேகம் வந்தது.

ஆனால் போகப்போக அவரது திறமையும் கதை மீது தயாரிப்பாளர் வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிந்து கொண்டேன்” என்று கூறினார்.

ayali abi natchatra says I am a big fan of singer Rajalakshmi

ரசிகனின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காமல் உருவான ‘போர் தொழில்’.. – விக்னேஷ் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்துள்ள படம் ‘போர் தொழில்’.

இந்த படம் ஜூன் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் ராஜா பேசுகையில்…

‘ இயக்குநராக இருந்தாலும் எந்த விமர்சனத்தையும் சாதகமாகவே எடுத்துக் கொள்வேன். ‘போர் தொழில்’ போன்றதொரு படத்தை உருவாக்குவதற்கு தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரின் ஒத்துழைப்பும் இல்லை என்றால் சாத்தியமாகி இருக்காது.

நான் இந்த படத்தை நினைத்த மாதிரி சுதந்திரமாக உருவாக்கி இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் ஒத்துழைப்பு வழங்கியவர்களை நன்றி தெரிவிக்க வேண்டும் என ஒரு பட்டியலை தயாரித்தேன் அது மிக நீண்டதாக இருந்தது.

அதனால் அனைவருக்கும் இந்த தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தின் இயக்குநர் என என்னுடைய பெயர் இடம் பெற்றிருந்தாலும், இதன் பின்னணியில் பலரின் கூட்டு முயற்சி இருந்திருக்கிறது. நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. இருப்பினும் அனைவரும் பல விதங்களில்.. பல விசயங்களில்.. கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் – புலனாய்வு பாணிலான திரில்லர் திரைப்படம். படம் பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தந்த ஐந்து நிமிடத்திற்கு பின் புத்திசாலித்தனமாகவும், உணர்வுபூர்வமாகவும் இப்படத்தின் கதை அமைந்திருப்பதை உணர்வீர்கள் என வாக்குறுதி அளிக்கிறேன்.

பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை அவமதிக்காமல் இப்படத்தில் திரைக்கதையை அடர்த்தியுடன் உருவாக்கி இருக்கிறோம்.

படத்தைப் பார்த்த பிறகு கதையை விவரிக்காமல், விமர்சனம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமூக வலைதளத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் இது சாத்தியமா? என தெரியவில்லை.

ஏனெனில் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் போது கிடைக்கும் பரவச உணர்வு… ஐந்து நாட்களுக்குப் பிறகு படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.” என்றார்.

Director Vignesh Raja talks about Audience reaction

டீச்சர் துப்பாக்கி லைசென்ஸ் கேட்கிறார்.; மாணவர்களின் ஒழுங்கீனம் பற்றி பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாடகி ராஜலட்சுமி செந்தில் முதன்முறையாக நாயகியாக நடித்துள்ள படம் ‘லைசென்ஸ்’.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் பேரரசு பேசும்போது…

“இந்த படத்தின் இயக்குனர் கணபதி பாலமுருகனை பார்க்கும்போது திருமணம் ஆகி பத்து வருடம் இருக்கும் என நினைக்கிறேன். அப்படிப்பட்டவரை அவரது மாமனாரே மேடை ஏறி பாராட்டுகிறார் என்கிறபோது உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளார்.

அதேபோன்று இவரது படமும் வெற்றி பெறும். பொழுதுபோக்கு படம் எடுப்பவர்கள் பொறுப்பாக படம் எடுப்பவர்கள் என இரண்டு பிரிவு உண்டு. அப்படி சமூகத்திற்காக படம் எடுப்பது தான் ஒரு பொறுப்பான டைரக்டரில் வேலை. அதைத்தான் இந்த படத்தின் இயக்குனர் செய்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு விழாவில் கலந்துகொண்டபோது ராஜலட்சுமியை பாடகியாக சந்தித்தேன். இன்று ஒரு நடிகையாக சந்திக்கிறேன். அடுத்த தடவை அவரை சந்திக்கும்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் மிகப்பெரிய நடிகையாக சந்திக்க விரும்புகிறேன்.

இதற்கு முன் ஆசிரியராக பல நடிகைகள் நடித்துள்ளனர். ஆனால் அவர்கள் எல்லாம் திரையில் பார்க்கும்போது நடிகைகளாக தான் தெரிந்தார்கள். இந்த படத்தில் ராஜலட்சுமி அந்த கதாபாத்திரமாகவே மாறி, நாம் பள்ளியில் படித்தபோது நமக்கு பாடம் நடத்திய ஆசிரியை போல எதார்த்தமாக தெரிகிறார். இந்த கதைக்கே அவர்தான் சரியாக சாய்ஸ்.

ஒரு டீச்சர் துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று எதற்காக கேட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இன்றைக்கு சூழல் அப்படித்தான் இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் ஒழுங்கீனமாக, சுயமரியாதை இல்லாமல், அராஜகமாக நடந்து கொள்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு வரை ஆசிரியர்களின் கையில் பிரம்பு இருந்தது. மாணவர்களும் ஒழுக்கமாக இருந்தனர். அந்த பிரம்பை பிடுங்கி கீழே போட்டது யார் ? அந்த பிரம்பு கீழே விழுந்ததும் மாணவர்களிடம் இருந்து ஒழுக்கமும் போய்விட்டது.

அதனால் ஆசிரியர்கள் கையில் மீண்டும் பிரம்பை கொடுக்க வேண்டும்.பள்ளிப் பருவத்தில் வராத ஒழுக்கம் கடைசி வரை வராது. மாணவர்கள் பிரச்சனையில் எப்போதுமே ஆசிரியர் பக்கம்தான் அரசு நிற்க வேண்டும். இப்போது ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கண்டிக்கும் ஆசிரியர்களை பற்றி பெற்றோர்களிடம் புகார் கூறி அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் மாணவர்களுக்கு டிசியை கொடுத்து அனுப்ப வேண்டும்.

ஆசிரியர்களிடம் இருந்து பிரம்பை எப்படி பிடுங்கிப் போட்டார்களோ, அதேபோல மக்களிடம் பக்தியையும் பிடுங்கி போட முயற்சிக்கிறார்கள். பக்தி இருக்கும் வரை தான் தார்மீக பயம் இருக்கும். அதை விடுங்க அனுமதிக்க கூடாது. இது சமூக சிந்தனை கொண்ட நல்ல படம். மாணவர்கள் அனைவரும் இந்த படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்த படத்திற்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்க வேண்டும்” என்று ஒரு கோரிக்கையை வைத்து பேசினார் இயக்குனர் பேரரசு.

இந்த நிகழ்வில் இந்தப்படத்தின் இசை மற்றும் டிரைலரை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட, சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்திருந்த தயாரிப்பாளர் ஜீவானந்தத்தின் பால்ய கால நண்பர்கள் அதை பெற்றுக்கொண்டனர்..

Director Perarasu talks about Teacher and Students

எளிமையான பின்னணியில் வந்த வலிமையான பெண் ராஜலட்சுமி – டி. சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘லைசென்ஸ்’. கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி செந்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக அறிமுகம் ஆகிறார்.

மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். படத்தின் மூன்று பாடல்களையும் ஏ.இரமணிகாந்தன் எழுதியுள்ளார். கலை – சிவா. எடிட்டர் ஆண்டனியின் சிஷ்யையான வெரோனிகா பிரசாத் இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் T.சிவா, இயக்குனர் பேரரசு, எடிட்டர் ஆண்டனி, ‘சண்டியர்’ ஜெகன், ரிவர்ஸ் உமன் ஆர்கனைசேஷன் மது சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதுமட்டுமல்ல தயாரிப்பாளர் ஜீவானந்தத்தின் பள்ளி நண்பர்களாக ஒன்றாக படித்து இன்று பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பொறுப்புக்கள் வகிக்கும் அவரது 40 நண்பர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தயாரிப்பாளர் T.சிவா பேசும்போது…

“இந்த நிகழ்வை பார்க்கும் போது இசை வெளியீட்டு விழா போல தெரியவில்லை. முன்னாள் நண்பர்கள் ஒன்று சேரும் விழா போல தான் தெரிகிறது.

இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறி உள்ள ஜீவானந்தம் இனி தயாரிப்பாளர் என்கிற அடையாளம் பெற்ற ஒரு ‘லைசென்ஸ்’ ஹோல்டர் தான்.

பெரிய நடிகர்கள் மற்றும் ஓடிடிக்கு பின்னாடி ஒரு ரேஸ் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படி ஒரு படம் எடுக்க இவருக்கு வந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன். இந்த மேடையிலேயே தயாரிப்பாளரிடம் பாராட்டு வாங்கிய இந்த இயக்குனர் தான் புதிதாக சினிமாவிற்கு வரும் இயக்குனர்களுக்கு ரோல் மாடல்.

ராஜலட்சுமியை என் பேரன்பு மிக்க மகள் என்றே சொல்வேன். எளிமையான பின்னணியில் இருந்து வந்த வலிமையான பெண். அத்தனை திறமைகளையும் ஒன்றாக பெற்றவர்.

இதுவரை தனது பாடல்கள் மூலமாக பார்வையாளர்களின் மனதை வென்றவர், இனி இந்த படம் மூலம் ஒரு நடிகையாக திரையுலக ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிப்பார்” என்று வாழ்த்தினார்.

Producer T Siva talks about singer Rajalakshmi growth

150 படங்களில் 40ல் போலீஸ்தான்.. ஆனாலும் ‘போர் தொழில்’ பேசும்.; சரத்குமார் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்துள்ள படம் ‘போர் தொழில்’.

இந்த படம் ஜூன் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் ஆர்.. சரத்குமார் பேசுகையில்…

” இயக்குநர் விக்னேஷ் என்னை சந்தித்து கதை சொல்லும் போது ஒரு சிறிய அளவிலான ஸ்பீக்கரை டேபிளில் வைத்தார். அதிலிருந்து இசை ஒலிக்க.. பின்னணி இசையுடன் ஒரு கதையை முழுவதுமாக விவரித்தார்.

இப்படத்தின் கதையை நேர்த்தியாக விவரிக்க, முழுமையாக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டமிடல் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் கூட படப்பிடிப்பின் போது வேறு ஏதேனும் கதைகள் இருக்கிறதா? என்று கேட்டபோது, ‘இருக்கிறது. முதலில் இதை நான் நிறைவு செய்கிறேன்’ என உறுதிப்பட தெரிவித்தார். இதில் அவர் ஒரு முழுமையான கலைஞர் என்பதை உணர முடிந்தது.

இதுவரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாகிவிட்டது. 40க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்தாகிவிட்டது.

இதில் என்ன வித்தியாசம்? என்றால், மூத்த அதிகாரியாக பணியாற்றுவதுடன் மட்டுமல்லாமல், புதிதாக பயிற்சிக்கு வரும் இளம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன்.

எலியும், பூனையுமாக இருக்கும் இரண்டு கதாபாத்திரங்கள், எப்படி உச்சகட்ட காட்சியில் ஒன்றிணைந்து குற்றவாளியை கண்டறிகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தை காவல்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் காண வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் குற்றவாளியின் மூளைக்குள் ஊடுருவி அவன் ஏன்? இந்த குற்றத்தை செய்தான் என்பதை கண்டறிய வேண்டும் என்பதை மிக விரிவாக இப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பு தரப்பினர் பல அதிரடியான திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இருப்பினும் நல்ல முறையில் இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

இந்த திரைப்படம், ஒரு சீரியஸான படமல்ல. அசோக் செல்வன் ஆங்காங்கே சில நடிப்பையும், வசனங்களையும் பேசுவார். அது சிரிப்பை வரவழைக்கும்.

இன்று மக்கள் திரையரங்கிற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிப்பது குறைந்து வருகிறது. ஒரு மாதம் காத்திருந்தால் ஓ டி டி யில் பார்த்து விடலாம் என எண்ணுகிறார்கள்‌.

ஆனால் இந்தப் ‘போர் தொழில்’ திரைப்படம் திரையரங்கிற்கு சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம் அதனால் ஜூன் ஒன்பதாம் தேதியன்று வெளியாகும் ‘போர் தொழில்’ படத்திற்கு திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

Sarathkumar talks about How Port Thozil police role will be different from other movies

போலீஸுன்னா மீசை இருக்கனுமா.? ‘தெகிடி’க்கு பிறகு இதான் – அசோக் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்துள்ள படம் ‘போர் தொழில்’.

இந்த படம் ஜூன் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் நடிகர் அசோக் செல்வன் பேசுகையில்…

” எனக்கும் மிகவும் பிடித்த திரைக்கதை இது. 2015 ஆம் ஆண்டில்.. இப்படத்தில் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குநர் விக்னேசும் விவாதித்திருக்கிறோம். இயக்குநருடன் கல்லூரி காலகட்டத்திலிருந்து ஏராளமான குறும் படங்களிலும்.. விளம்பர படங்களிலும்.. பணியாற்றிருக்கிறேன்.

மிகத் திறமையான படைப்பாளி. கடும் உழைப்பாளி. விக்னேஷ் ஒரு கதையை சொன்னால் நன்றாக இருக்கும். அதுவும் இந்த திரைக்கதை வித்தியாசமாக இருந்தது. இதுவரை ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. மர்டர் மிஸ்டரி ஜானரிலான திரைப்படங்களும் வெளியாகியிருக்கிறது.

ஆனால் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் தோன்றும் காவல் துறை உயரதிகாரி போல் மீசையை வைத்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காவலர் என்றால் மீசை இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி, மீசை இல்லாத காவலராக நடித்திருக்கிறேன்.

இதற்கு நேர் எதிராக கரடு முரடான தோற்றத்தில் மூத்த காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை.

இயக்குநரின் கற்பனையை எப்படி சாத்தியப்படுத்தப்போகிறோம் என எண்ணினேன். என்னுடன் அனுபவம் மிக்க சரத்குமார் இணைந்து நடிக்கும் பொழுது அது எளிதாக இருந்தது.

சரத்குமாருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இதற்கு முன்னர் அனுபவமிக்க நாசர் அவர்களுடனும் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்திலும் அவருடைய பழகும் விதத்தை கண்டு வியந்திருக்கிறேன்.

அவரை சந்திக்க சினிமா, அரசியல்.. என பல்வேறு துறைகளை சார்ந்த நபர்கள் வருகை தந்து கொண்டிருப்பர். அவர் எப்போதுமே பரபரப்பாகவே இருப்பார்.

இந்த வயதிலும் மதிய உணவாக சூப்பை அருந்துகிறார். அதன் பிறகு சத்தான உணவுகளை சாப்பிடுவார். இது, அவரைப் போல் இருக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் உருவாக்கியது. அவருடன் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. குறிப்பாக ‘போர் தொழில் 2’ வில் நடிக்க விருப்பம்.

நடிகை நிகிலா விமலுடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க இயலாத அனுபவம். அவர் இந்த படத்தின் திரைக்கதையில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

எனக்கு காதலியாக நடிக்கவில்லை. அதில் சின்ன வருத்தம் இருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமையானவர்கள்.

என்னுடைய சொந்த கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்றால், இயக்குநர் விக்னேஷ் ராஜா எதிர்காலத்தில் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக உயர்வார். இதை நான் நண்பர் என்பதால் மிகைப்படுத்தி சொல்லவில்லை. அவருடைய திறமையை இந்த ‘போர் தொழில்’ படம் வெளிப்படுத்தும்.

இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரைப் பாருங்கள். பிடித்திருந்தால் திரையரங்கத்திற்கு வருகை தந்து படத்தை பார்த்து ஆதரவளியுங்கள். ஏனெனில் இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கும் போது, ரசிகர்களுக்கு சிறப்பான உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக தொழில்நுட்ப கலைஞர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் காட்சி அமைப்பு.. ஒலி.. சிறப்பு சப்தங்கள்.. அனைத்தும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அமெரிக்காவிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணியாற்றியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருக்க வேண்டாம். ஜூன் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘தெகிடி’ படத்திற்குப் பிறகு எனக்கு கிடைத்த அற்புதமான திரைக்கதை இந்த ‘போர் தொழில்’ படம். திரில்லர் ஜானரிலான படத்தை பார்த்து ரசிப்பவர்களுக்கு இந்த ‘போர் தொழில்’ படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.

After Thegidi Por Thozhil is best screenplay for me says Ashok Selvan

More Articles
Follows