மீனாவுக்கு நூல் விட்ட ‘காத்தாடி’ ஹீரோ அவிஷேக்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி தன்ஷிகாவுடன் புதுமுக நாயகன் அவிஷேக் நடித்துள்ள படம் ‘காத்தாடி’.

இவர்களுடன் சம்பத், ஜான் விஜய், மனோபாலா, கோட்டா சீனிவாசராவ், வி.எஸ்.ராகவன், காளி வெங்கட், சுமார் மூஞ்சி குமார் டேனியல், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ் கல்யாண் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பிரபல பாடகி சுசீலா, நடிகை மீனா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், நடிகர்கள் ஆரி, கயல் சந்திரன், அஸ்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாடல்களை சுசீலா வெளியிட்டார். அதன்பின்னர் நாயகன் அவிஷேக் பேசியதாவது….

“இந்த விழாவுக்கு சுசீலா அம்மா வந்துள்ளது பெருமையாக உள்ளது. பெரும்பாலும் எந்த விழாவிலும் அவர் கலந்து கொள்ளமாட்டார். அவரது ஆசி எனக்கு கிடைத்துள்ளது பெருமை.

என் அக்கா மகேஸ்வரியின் தோழி மீனா வந்துள்ளார். சின்ன வயதில் தில்லானா தில்லானா பாடல் பார்த்த போதே ரசிகனாகி விட்டேன்.

லேட்டா பிறந்துவிட்டேன். இல்லையென்றால் மீனாவுடன் நடிக்க எனக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.” என்று பேசினார் அவிஷேக்.

தளபதி 60 அப்டேட்ஸ்: விஜய்-கீர்த்தி செம கெமிஸ்ட்ரியாமே…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஜீன் 2 முதல் 25 வரை பரதன் இயக்கும் விஜய் 60 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதன் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்கியது.

இதற்கு முன்பு நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களை படமாக்கினார்களாம்.

ஒன்று விஜய்யின் ஓப்பனிங் பாடலாக அமைந்துள்ளதாம்.

மற்றொன்று நாயகி கீர்த்தி சுரேஷை ஒரு திருமண விழாவில் சந்திக்கிறார் விஜய். அப்போது கீர்த்தியின் அழகில் மயங்கி இவர் பாடுவது போன்ற ஒரு பாடலாம்.

இதில் இருவரும் நடிக்கும்போது அவர்களுக்குள் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி இருந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அருண் விஜய்யுடன் இணையும் ஏஆர் முருகதாஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல படங்களில் நாயகனாக அறியப்பட்டாலும் என்னை அறிந்தால் படத்தின் வில்லன் கேரக்டரே அருண் விஜய்க்கு திருப்புமுனையை கொடுத்தது.

இதனையடுத்து தற்போது குற்றம் 23 படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடைய ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

ராஜேஷ் குமாரின் நாவலை தழுவிக் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிவழகன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

இதை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.

மெடிக்கல் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை அருண் விஜய்யே தன் சொந்த ஐஸ் பேனரில் தயாரித்துள்ளார். இசை விஷால் சந்திரசேகர்.

இளையராஜா-மணிரத்னம்… பிறப்பிலும் இணைந்த நாள் இன்று..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அன்னக்கிளியில் தொடங்கி இன்று ஆயிரம் படங்களை கடந்தும் இசையுலகில் தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் இசைஞானி இளையராஜா.

இன்று அவர் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்து. தன் வாரிசுகளையும் இசைக்காகவே தாரை வார்த்தவர் இவர்.

முன்பெல்லாம் தூர்தர்ஷன் சேனல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது.

இந்திப்பாடல்கள் மட்டுமே அதில் ஒளிப்பரப்பாகும். அந்தப் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த தமிழனை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் நம் இளையராஜா.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இசையமைத்துள்ளார்.

ஒரு சிலருக்கு பாடல்கள் மட்டும்தான் கைகொடுக்கும். ஆனால் பின்னணி இசையில் கைத்தேர்ந்தவர் இசைஞானி.

பின்னணி இசைக்காகவே தேசிய விருதுகளை வென்றவர் இவர்.

சமீபத்தில் கூட தாரை தப்பட்டை படத்தின் பின்னணி இசைக்காகத்தான் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் வெறும் பின்னணி இசைக்கு மட்டும் என்னால் இந்த விருதை பெறமுடியாது என வாங்க மறுத்துவிட்டார்.

 

 

யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ, ஜானகி, சித்ரா உள்ளிட்ட குரல்களை நம் செவிகளுக்கு தேனாக பாய்ச்சியவர்.

உலகத்திலுள்ள டாப் 10 பாடல்களில் இளையராஜா இசையமைத்த ‘தளபதி’ பட பாடல் “ராக்கம்மா கையதட்டு” இடம் பெற்றிருந்தது. நான்கு முறை சிறந்த பாடலுக்கான இந்திய தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

‘தளபதி’ என்றால் அது மணிரத்னம் இல்லாமல் சாத்தியமாகுமா? ஆம்.. இன்று இளையராஜாவின் பிறந்தநாள் மட்டுமல்ல மணிரத்னத்தின் பிறந்தநாளும் கூட…

பகல் நிலவு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர். அதன்பின்னர் ‘இதயகோயில்’, ‘மௌனராகம்’, ‘நாயகன்’ என தன் முத்திரையை பதித்தவர்.

கமலுடன் கைகோர்த்த நாயகன் படம் இன்றும் உலக அளவில் சிறந்த 100 படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

 

 

அதன்பின்னர் இவர் இயக்கிய ‘இதயத்தை திருடாதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ போன்ற படத்தின் காட்சிகளும் பாடல்களும் இன்று வரை கவிதை சொல்லும்.

இதில் அஞ்சலி படம் இளையராஜாவின் 500வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் ரஜினி-மம்மூட்டி என இரு சூப்பர் ஸ்டார்களை ‘தளபதி’ படத்தில் இணையவைத்து தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கியவர் மணிரத்னம்.

‘மாஸ்’ ஹீரோவான ரஜினியை ‘க்ளாஸ்’ ஹீரோவாக காட்டியவர் மணி. இளையராஜா-மணிரத்னம் இணைந்து பணியாற்றிய கடைசி படம் ‘தளபதி’தான்.

அதன்பின்னர் இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை.

இனி இளையராஜா, மணிரத்னம் எப்போது இணைவார்கள் என்கிற கேள்வி ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் எழாமல் இல்லை.

இவர்கள் நிழல் உலகில் இணையாமல் போனாலும் நிஜ உலகில் தங்கள் பிறப்பால் இணைந்தே இருக்கின்றனர். இது தெய்வத்தின் செயல்.

இந்த இரு துருவங்களையும் ஃப்லிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்தி மகிழ்கிறோம்.

ஜூன் 17ஆம் தேதிக்காக காத்திருக்கும் தனுஷ் ரசிகர்கள்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஹிட் நடிகர் மட்டுமல்ல, மெகா ஹிட் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தனுஷ்.

தேசிய விருதுகளை வென்ற காக்கா முட்டை, விசாரணை ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது இவரது தயாரிப்பில் அம்மா கணக்கு படம் விரைவில் வெளியாகிறது.

இதனிடையில் வெளியான நானும் ரெடிளதான் படமும் கமர்ஷியல் ரீதியாக பெரும் வெற்றிப்பெற்றது.

இந்நிலையில் இளையராஜா இசையில் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள அம்மா கணக்கு வருகிற ஜூன் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறதாம்.

இதில், அமலாபால், ரேவதி, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இது ‘நில் பேட்டே சனாட்டா’ என்ற இந்தி படத்தின் ரீமேக் ஆகும். தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய்தான் இப்படத்தின் இந்தியில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப்போகும் கபாலி ரிலீஸ்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள ரஜினியின் கபாலி வருகிற ஜுலை 1ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலாய் மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

மலேசியாவில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியதால் இது மலாய் மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

ஜுலை 1ஆம் தேதி, இஸ்லாமியர்களின் நோன்பு காலம் என்பதால், சம்பந்தப்பட்ட மதத்தினர் தியேட்டர்களுக்கு வரப்போவதில்லை.

அவர்களின் நோன்பு காலம் ஜுலை 5ம் தேதி தான் முடிவடைகிறதாம்.

எனவே, இப்படத்தின் மலாய் மொழி பதிப்பை மட்டும், ஒரு வாரம் கழித்து, அதாவது ஜுலை 8ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows