ஹீரோ சூப்பர் ஸ்டார்; ஹீரோயின் ஸ்நேகா; வில்லன் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிந்தும் அறியாமலும் படத்தில் வில்லனாக அறிமுகமான ஆர்யா, தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் வில்லன் ரூட்டுக்கே திரும்பியிருக்கிறார். ஆனால் தமிழில் அல்ல மலையாளத்தில்.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கும் “தி கிரேட் பாதர்” படத்தில் கொடூர வில்லனாக நடிக்கிறாராம்.

இதில் நாயகியாக ஸ்நேகா நடிக்க, மம்மூட்டியின் மகளாக சாரா நடிக்கிறார்.

ஹனீப் அதோனி இயக்கும் இப்படத்தை ‘ஆகஸ்ட் சினிமாஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

தள்ளிப்போகும் விக்ரம் – தனுஷ் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம், நயன்தாரா இணைந்துள்ள ‘இருமுகன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது முதல் அப்பட மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் இந்த வாரம் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளது.

அதன்பின்னர் தொடரும் விநியோக வேலைகளை தொடர்ந்து இப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி வரை தள்ளிப் போகலாம் எனவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தனுஷின் தொடரியும் தள்ளிப் போகும் எனத் தெரிய வந்துள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்தில் சென்சாரை முடித்துவிட்டு, செப்டம்பர் 16ஆம் படத்தை வெளியிட இருக்கிறார்களாம்.

இப்படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள சாய் வி.கிரியேஷன்ஸ், வியாபார களத்தில் இறங்கியுள்ளனர்.

அஜித் படத்தில் வில்லன் ரோல்; சசிகுமார் ரியாக்ஷன் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முகம் கொண்டவர் சசிகுமார்.

வெற்றிவேல் படத்தை தொடர்ந்து விரைவில் இவரது நடிப்பில் கிடாரி படம் வெளியாகவுள்ளது.

எனவே அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அப்போது அஜித் படத்தில் நீங்கள் வில்லனாக நடிக்கிறீர்களா? என கேட்டதற்கு…

‘அஜித் எனக்கு நண்பன். எனக்கு பிடித்த மனிதர் அவர்.

அவருக்கு வில்லனாக நான் ஏன் நடிக்க வேண்டும்? இது தொடர்பாக யாரும் என்னை அணுகவில்லை’ என்றார்.

கபாலி பெயரில் 165 கிலோ வெள்ளி விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் தாணு தயாரித்து உருவான கபாலி படத்தின் எதிர்பார்ப்பு இந்திய திரையுலகம் அறிந்ததே.

இப்படத்தின் விளம்பரங்கள் அனைவரையும் வியக்க வைத்தது. விமானம் முதல் டீசர்ட் வரை எதையும் விட்டுவைக்கவில்லை.

மேலும் முத்தூட் நிறுவனம் கபாலி பெயரில் பல கிராம்களில் ரஜினி படம் பொறித்த வெள்ளி நாணயங்களை வெளியிட்டது.

தற்போது ரஜினி பெயரில் விற்கப்பட்ட கபாலி நாணயங்களை

அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதாவது இதுவரை 165 கிலோ வெள்ளியை விற்று இருக்கிறார்களாம்.

மீண்டும் ரெமோ கூட்டணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ரெமோ. இது இந்நிறுவனத்தின் முதல் படைப்பாகும்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பிரதியை தயாரிப்பாளர் பார்த்துள்ளார்.

இப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும் என்ற தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் இயக்குனர் பாக்யராஜீக்கு தன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து அட்வான்ஸ் தொகையையும் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் லைக்ஸை பெற்ற விஜய் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்களை மட்டுமே குழந்தைகளுக்கு பிடிக்கும்.

அதில் முக்கியமானவர் நடிகர் விஜய்.

இவரது நடனத்தாலும் காமெடியாலும் குழந்தைகள் வரை கவர்ந்து இருக்கிறார்.

இதனிடையில் விஜய், தன் குட்டி ரசிகை ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தள பக்கத்தில் வெளியானது.

அது அனைவரையும் கவர்ந்ததால், ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

More Articles
Follows