தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட பட நாயகன் கிருஷ்ணா பேசும்போது, தன் அண்ணன் வைத்துள்ள தாடி பற்றிய ரகசியத்தை கூறினார்.
அதில்…
‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தபோது விஷ்ணுவர்தனுக்கு வயது 22 தான்.
அதனால் சின்னப்பையனாக இருக்கிறானே என அவரை நம்பி யாரும் வாய்ப்பு தரவில்லை.
அதனால் தான் எங்கள் தந்தை பட்டியல் சேகரே தயாரிப்பாளராக மாறினார். அதன்பின் பெரிய ஆளாக தெரிவதற்காக தாடி வைத்துக்கொண்ட விஷ்ணுவர்தன் இன்றுவரை தாடியை எடுக்காமல் அப்படியே மெயின்டெய்ன் பண்ணி வருகிறார்.
அஜித்தின் பில்லா (2007), ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
