ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த நெருப்புடா அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீக்ரீன் புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சரத்குமார் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்குகிறார்.

இது ஜிவி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் 8வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடங்காதே என்று பெயரிடப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ள நெருப்புடா புகழ் அருண்ராஜா காமராஜ் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

இவர்களுடன் வைபவி சந்தில்யா, தம்பி ராமையா உள்ளிட்டோர் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

அஜித்தின் படம் வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் மற்ற நடிகர்களைப் போல் அடிக்கடி வெளியில் தலை காட்டமாட்டார்.

பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் வரமாட்டார். தேர்தல் சமயத்தில் ஓட்டு போட வந்திருந்தார்.

இதுபோன்ற ஒரு சில நிகழ்வுகளுக்கு மட்டுமே அவர் பொது இடங்களுக்கு வருவார்.

எனவே அவரது போட்டோக்கள் அதிகம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் அவர் நடிக்கவுள்ள தல 57 படத்தின் படப்பிடிப்பு ஆஸ்ட்ரியாவில் நடந்து வருகிறது.

அப்போது எடுக்கப்பட்ட படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ஜோக்கர் படக்குழுவினரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜீமுருகன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ஜோக்கர் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்றுள்ளது.

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன், நடிகர் தனுஷ் ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

மேலும பல பிரபலங்களும் பாராட்டி வரும் நிலையில், இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இப்படக்குழுவினரை பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில், அருமையான படம் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது வாரத்திலும் இப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹீரோக்களில் சிவகார்த்திகேயனுக்கு 4வது இடம்; ரசிகர்களுக்கு நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹீரோக்களின் நடிப்பையும் அவர்களின் ஸ்டைலையும் பின்பற்றிய ரசிகர்கள் தற்போது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர்களை பாலோ செய்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் தற்போது 4வது இடத்தில் இருக்கிறார். அதாவது 2 மில்லியன் பாலோயர்கள் இவரை பின் தொடர்கின்றனர்.

அதற்காக தன் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் மூன்று இடங்களை பிடித்த ஹீரோக்கள் யார்?

1) ரஜினி 3.39 மில்லியன்

2) தனுஷ் 3.17 மில்லியன்

3) சித்தார்த் 2.28 மில்லியன்

இவர்களை அடுத்து மற்ற இடங்களை பிடித்துள்ள ஹீரோக்கள் யார்?

5. மாதவன் – 1.54 million

6. ஜி.வி.பிரகாஷ் – 1.37 million
7. சிம்பு – 1.34 million
8. பிரகாஷ்ராஜ் – 1.33 million
9. ஜெயம் ரவி – 1.21 million
10. சூர்யா – 1.12 million

(இத்தகவல் ஆகஸ்ட் 18, 2016 வரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது)

கொடி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்துள்ள தொடரி படம் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகிறது.

இதனிடையில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள கொடி படத்தின் வெளியீட்டு தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் தனுஷ்.

இப்படத்தை தீபாவளி விருந்தாக தன் ரசிகர்களுக்கு தரவிருக்கிறாராம்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரஜினி ரூ. 1 கோடி கொடுக்கனும்… எச்சரிகை செய்யும் விவசாயிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நதி நீர் இணைப்பு திட்டத்துக்கு தான் அறிவித்தப்படியே ரூ. 1 கோடியை ரஜினிகாந்த் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், ரஜினியை சந்திக்க, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களை போலீசார் தடுத்த நிறுத்தியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சட்டையை கழற்றி எரித்துவிட்டு, சாலையில் போராடுவோம் என்று போலீசாரிடம் கூறினர்.

பின்பு அனுமதி அளிக்கப்படவே ரஜினியின் உதவியாளரிடம் கடித்தை கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து இச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், நதிகள் இணைப்பு சாத்தியமாகும் என்றார் நரேந்திர மோடி.

மேலும் இத்திட்டத்திற்கு தன் பங்காக, ஒரு கோடி ரூபாய் கொடுப்பேன் என்றார் ரஜினிகாந்த்.

இதுவரை இரண்டும் நடைபெறவில்லை.

எனவே, விவசாயிகளின் நல்லெண்ண துாதராகச் சென்று, ஒரு மாதத்திற்குள், பிரதமர் மோடியை சந்தித்து, ஒரு கோடி ரூபாயை ரஜினிகாந்த் வழங்க வேண்டும்.

அவர் அதற்கான நிதியை வழங்காவிட்டால், அவர் வீட்டின் முன், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்” என்றார்.

More Articles
Follows