ஏ.ஆர்.ரகுமானிடம் உள்ள அதே அன்பு, பணிவு, திறமை லிடியனிடம் உண்டு – பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி (இன்று) அறிமுகம் செய்தது.

கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார்.

அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், மேலும் நக்கீரன் கோபால் அவர்களும் கலந்துக் கொண்டார்.

நக்கீரன் கோபால் பேசும்போது, ‘நான் புத்தக கண்காட்சிக்காக ஈரோடு வந்தேன். அப்போது தம்பி ஸ்ரீதர் என்னை அழைத்ததால் இங்கு வந்தேன். நான் இப்படிப்பட்ட மாணவர்களை பார்ப்பேன் என்று நினைக்கவில்லை, மிகவும் அருமையானவர்கள். நான் ஒரு சாதாரண பள்ளி கல்லூரியில் படித்தேன். பின் பிழப்புக்காக சென்னை வந்தேன். கற்பனை பண்ணாத அளவிற்கு இப்பள்ளியின் சுற்றுப்புற சூழல் அழகாக அமைந்திருப்பது பாராட்டக்குறியது. நான் பெரிய பாக்கியமாக நினைப்பது குட்டி புலி லிடியன் அருகில் இருப்பதுதான். ஏனென்றால் 12 வயதில் உலக சாதனையும் பாராட்டுகளையும் சேர்ப்பது சாதாரணம் அல்ல. எதும் நம்மால் முடியும் என்பதற்கு லிடியன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் பியானோ வாசிப்பதில் ஒரு ஸ்டைல் உள்ளது. ஆனால் இப்போது மிக சாதாரணமாக அமர்ந்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தது லிடியனின் தந்தை. இவர்களுக்கு தமிழ் பெயர்களை வைத்திருப்பது. நானும் பிற்காலத்தில் இப்படிப்பட்ட பள்ளிக்கு வந்தேன் என்று பெருமைக்கூறி கொள்வேன்’ என்றார்.

லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் பேசும்போது, ‘நான் இங்கு இருப்பது மிகவும் மகிழ்ச்சி. எங்களை இங்கு அழைத்ததற்கு நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் மற்றும் ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி. பள்ளி பருவம் என்பது ஒரு அரிய வாய்ப்பு, அனைவரும் கூறும்படி லிடியன் உலக புகழ், பெருமைகளையும் பாராட்டுக்களையும் பெற்றாலும் என் மகனிற்கு நான் ஒரு ரசிகன்.

லிடியன் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறார். இந்த வயது மிகவும் அற்புதமான வயது. அதை டெக்னாலஜி எனும் செல்போன், யூடியூப், கேம்ஸ் ஆகியவற்றில் நேரத்தை செலவிடாமல் இருத்தல் நல்லது. என் மகனை நான் பள்ளிக்கு அனுப்பவில்லை, ஆனால் பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருவது சச்சின் டெண்டுல்கர் போன்றோரைத்தான் பார்த்துள்ளேன். இப்போது என் மகன் அப்படி செல்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.

ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, ‘என் வாழ்வில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக்கல்லூரி ஒன்று கட்ட வேண்டும் என்பது ஆசை. அதன் தொடக்கமாக இப்பள்ளியில் டிப்ஸ் கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி தொடங்கியுள்ளேன்.

லிடியனின் தந்தை பார்க்கும் போது என் தந்தை நியாபகம் வருகிறது. என் தந்தையும் இதே போன்றுதான் உற்சாகப்படுத்தினார். உலகம் மறக்கமுடியாத இசையமைப்பளார்களில் ஒருவராக லிடியன் இருப்பார். 2002ல் இருந்து ஏ.ஆர்.ரகுமான் அவர்களை தெரியும். அவரிடம் உள்ள அதே அன்பு, பணிவு, அளவற்ற திறமை லிடியனிடம் உண்டு. மேலும் லிடியனின் பெற்றோர்களை பெருமைப்படுத்துவதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன். இப்பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைவர் டாக்டர் சின்னுசாமி, நி்ர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் அவர்கள் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தார்கள்.

பரபரப்பான ஷீட்டிங்கில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . “கார்த்தி19” என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி.
கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி முற்றிலும் புதுமையான கதையில் “ரெமோ” இயக்குனர் பாக்கியராஜ் கண்ணண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கைதி” டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முறையில் இருந்த “ கைதி” பட டீஸரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் மற்றும் வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது.

இதனைத்தொடர்ந்து கார்த்தி தன் அடுத்த படத்தில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். “ரெமோ” படத்தினை இயக்கி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இப்படத்தில் “கீதா கோவிந்தம்” தெலுங்கு படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக நேரடித் தமிழ்ப்படத்தில்
கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். நடிகர் நெப்போலியன், யோகி பாபு, சதீஸ்,லால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரம்
இசை – விவேக் மெர்வீன் / ஒளிப்பதிவு – சத்யன் சூர்யன்
எடிட்டிங் – ரூபன்
கலை – ஜெய்சந்திரன்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
புரொடெக்‌ஷன் டிசைனர் – ராஜீவன் நம்பியார்
நிர்வாக தயாரிப்பு : அரவிந்த்ராஜ் பாஸ்கரன்

தயாரிப்பு – Dream warrior Pictures S.R.Prakashbabu, S.R.Prabhu

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் இன்று திங்கள் முதல் திண்டுக்கல்லில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும்.
அனைவரையும் மகிழ்வித்து வரும் கார்த்தியின் மற்ற படங்கள் போல் இப்படமும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

50 -மும்பை நடன அழகிகளுடன் C.M. CAPMAARI ( கேப்மாரி ) பாடல் காட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.

ஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது.

பிரமாண்ட அரங்கம் – அதிரடி நடனம்.

விழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம்.

M.G.R. பிலிம் சிட்டியில் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

“ என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா

என் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா “

என்ற ஹரிசரண் பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இசை : சித்தார்த் விபின், ஒளிப்பதிவு : ஜீவன்,

படத்தொகுப்பு : ஜி.கே. பிரசன்னா, கலை: வீரமணி கணேசன்.

கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் : எஸ் .ஏ. சந்திர சேகரன்.

C.M- யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.

கதாநாயகன் .- ஜெய்,

கதாநாயகிகள் – அதுல்யா ரவி, வைபவி சான்ட்லியா

இயக்கதிலும் நடிப்பிலும் சிகரத்தை தொடும் கௌரவ் நாராயணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதையின் தன்மையையும் திரைக்கதையின் அழகையும் ஒரு சேர இணைத்து தனது இயக்கத்திறமையால் அழுத்தமும் அழகும் அடங்கிய திரைப்படமாக உருவாக்குவதில் கைத்தேர்ந்தவர் இயக்குனர் கௌரவ் நாராயணன்.

எதார்த்த வாழ்வியலுக்கு “தூங்கா நகரம்”, காவல்துறையின் கன்னியத்திற்கு “சிகரம் தோடு, தீவரவாத்திற்கு எதிராக “இப்படை வெல்லும்” என படத்திற்கு படம் வித்தியாசம் கொண்ட கதை களங்களை தேர்ந்தெடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்று வெற்றியும் கண்டவர் இயக்குனர் கௌரவ் நாராயணன்.

இயக்கம் மட்டுமன்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார்.

விரைவில் புதிய படத்தின் அறிவிப்பின் மூலம் தனது அடுத்த படைப்பின் விவரத்தை விரைவில் அளிக்கவுள்ளார் கௌரவ் நாராயணன்.

ஆகஸ்ட் 23 ம் தேதி வெளியாகிறது “ கடமான் பாறை “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் “ கடமான்பாறை “

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – T.மகேஷ்.
இசை – ரவிவர்மா
பாடல்கள் – விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன் , மன்சூரலிகான்.
வசனம் – R.துரை
கலை – ஜெயகுமார்
நடனம் – டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், பம்மல் சந்துரு. ஸ்டன்ட் – ராக்கி ராஜேஷ்,
தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர்
ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார்
கதை, திரைக்கதை, தயாரிப்பு இயக்கம் – மன்சூரலிகான்.

படம் பற்றி மன்சூரலிகான் கூறியதாவது…

நகைச்சுவை கலைந்த திரில்லர் படமாக கடமான் பாறை உருவாகி இருக்கிறது. மாடர்ன் டெக்னாலஜி இன்று மாணவர்களை எப்படி தவாறன பாதைக்கு அழைத்துச் செல்கிறது, அதனால் இளைஞர்கள் எவ்வாறு வாழ்கையில் தடம் மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

படம் இம்மாதம் 23 ம் தேதி தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.

வேலையில்லாதவரா நீங்க? நம்ம விஜய்சேதுபதி வேலை வாங்கி தர்றார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற இயக்கத்தின் மூலமாக வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்பட்டு வருகிறது.

இந்த இயக்கம் கடந்த மூன்று வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

மேலும், 5 மாதங்களாக நடிகர் விஜய்சேதுபதி இந்த இயக்கத்திற்கு உதவி செய்து, தமிழகம் முழுவதும் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், விஜய் சேதுபதியின் துணையோடு தமிழகம் முழுவதும் செயல்பட துவங்கியுள்ளது.

இதன் மூலம் லட்சக்கணக்கான வேலையில்லா இளைஞர்கள் பயனடைவார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. இந்த இயக்கம் பொதுமக்களிடையே நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றுள்ளது.

Vijay Sethupathi giving opportunity for jobless peoples

இதன், வீடியோ இணைப்பு…

More Articles
Follows