சிரியா மக்களுக்காக ஓவியர் A.P.ஸ்ரீதர் வரைந்த கோட்டோவியத் தொடர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தாய்நாடானது இரக்கம் மற்றும் ஏற்புத்தன்மையுடன் இருப்பதாய் விளங்க வேண்டும். குறிப்பாக, அது கலவரங்கள் ஏற்படுகிற வேளையில் ஓர் அமைதியான, மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பினைத் தரும் ஓர் இடமாக இருத்தல் வேண்டும்.

ஆனால் அந்தத் தாய்நாடே உங்களை முழுதாக விழுங்கக் காத்திருக்கும் ஒரு யுத்தக் களமாக மாறினால் என்னாகும்?. கால்கள் சோர்ந்துபோகும் வரையில் ஓட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.

நாம் முன்னெடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியும், அமளியில் இருந்து தள்ளி வைக்கும் ஓரடியாக மாறுகிறது. இதுதான் சிரியாவின் இன்றைய நிலைமை, அங்கே சுதந்திரம் என்பதைத் தாண்டி உயிர்வாழ்வதற்கான போராட்டமே மேலோங்கி இருக்கிறது.

அத்தகைய சிரியாவின் தற்போதைய நிலையினை பிரதானப்படுத்தும் வகையில் ஒவியர் A.P.ஸ்ரீதர் ஒரு கோட்டோவியத் தொடரை வரைந்திருக்கிறார்.

அந்தத் தொடரானது, சிரியா மக்களுக்கான உதவிக் கரங்களுக்கு ஓர் அழைப்பை விடுத்துள்ளது.

இந்த சமூகத்தின் ஒரு பகுதி தொலைத்துவிட்ட மனிதாமானம் மற்றும் இரக்ககுணம் போன்றவற்றிற்கான கவன ஈர்ப்பை கேட்டுள்ளது. இவரது ஓவியங்கள் துயரத்தைப் பேசுவதுடன், உடைந்து கிடக்கும் தேசமொன்றினைக் குணப்படுத்தும் முயற்சியில் உதவிக்கான அவசரத் தேவையை அறிவுறுத்துகிறது.

அது மட்டுமல்லாமல் , இந்த உலகத்தில் இருத்தலுக்கான மனித இனத்தின் போராட்டத்தினைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

Artist AP Shreethars latest mixed media series to help Syria

முதலில் கட்சி பெயர்-கொள்கையை அவர் சொல்லட்டும்; ரஜினியை சீண்டும் கமல்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தனியார் டிவி சார்பாக “உழவன் விருதுகள்” வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கி பேசினார் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.

அந்த நிகழ்வில் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர்.

அப்போது தற்போது உள்ள தமிழக அரசும் பற்றியும் ரஜினியை பற்றியும் கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தாவது…

‘இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறேன்;

இந்த ஆட்சி அகற்றப்பட்டால் அது நான் செய்தது அல்ல; மக்கள் செய்தது… மக்கள் நீதி மய்யம் செய்ததாகவே இருக்கும். இதுதான் மக்கள் நீதி மய்யத்தின் குறிக்கோள்.

மக்கள் நலன் என்பதே எங்கள் கொள்கை. என்றார்.

அதன்பின்னர்… ரஜினி உங்கள் நீண்டகால நண்பர். அவரை விமர்சிப்பதில்லை என்ற நிலைபாட்டை எடுத்துள்ளீர்கள். அரசியல் களத்தில் நீங்கள் ஒரு கட்சியின் தலைவர்… அவர் ஒரு கட்சியின் தலைவர் என்று கேள்வி கேட்கும்போதே…

அவர் எந்தக் கட்சியின் தலைவர்? என கேட்டார் கமல்.

அவர் ஆன்மிக அரசியலை முன்வைத்துத் தொடங்கப்போகும் ஒரு கட்சியின் தலைவர் என்றனர்.

அதற்கு கமல் பதிலளிக்கும்போது…

அவர் வரட்டும்; கட்சி தொடங்கட்டும். அதற்குப் பெயர் வைக்கட்டும்.

நான் ‘மக்கள் நலன்’ என்று ஒரு வார்த்தையில் எங்கள் கொள்கையை சொல்லியிருக்கிறேன். இதைப்போல அவரும் அவருடைய கொள்கையைச் சொல்லட்டும்.

அதன்பிறகு இரண்டும் பொருந்துகிறதா என்று பார்ப்போம். அப்படி பொருந்தவில்லை என்றால், அப்பொழுதும் ரஜினியை விமர்சிக்க மாட்டேன்.

அவருடைய கட்சியின் கொள்கைகளை விமர்சிப்பேன். இது எங்கள் அரசியல் மாண்பு.

தனி நபரை விமர்சிக்க மாட்டோம் என்றுதான் சொல்கிறேன். அப்படி விமர்சிக்கும் கட்சிகள் இங்கே நிறைய இருக்கின்றன.

ரஜினி அவர்கள் கட்சித் தொடங்கிய பின்னர், அவருடைய கொள்கைகளை அறிந்தபின்னர் அதில் எங்களுக்கு விமர்சனம் இருந்தால் அது கடுமையானதாக இருக்கும்.

பாராட்டுக்கள் இருந்தால் அது திறந்த மனதுடன் இருக்கும்.” இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Let Rajini announce his political party then i will say my opinion says Kamal

எல்லாம் நிறுத்தனும்; சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் கூடாது…: விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஜிட்டல் புரொஜக்டர் சம்பந்தப்பட்ட VPF கட்டணத்தை இனி தயாரிப்பாளர்கள் ஏற்க மாட்டோம் என தயாரிப்பாளர்கள் திடீரென அறிவித்தனர்.

புதிய தமிழ் சினிமா எதுவும் ரிலீஸ் ஆக கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக விஷால் வேண்டுகோள் விடுத்தார்.

இதனையொட்டி கடந்த 2 வாரங்களாக எந்த புது படமும் வெளியாகவில்லை.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள தியேட்டர்களும் காலவரையின்றி மூடப்பட உள்ளன.

மேலும் மார்ச் 16ஆம் தேதி உள்நாட்டில் நடைபெற்று வரும் எந்த படத்தின் சூட்டிங்கையும் நடத்தக்கூடாது என தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 23ஆம் தேதி முதல் வெளிநாட்டிலும் சூட்டிங் நடத்தக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

இவையில்லாமல் சினிமா சம்பந்தமான இசை வெளியீடு, டீசர் வெளியீடு போன்ற எந்தவித நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது.

புதிய படங்கள் சம்பந்தமாக எந்த ஒரு விளம்பரமும் பத்திரிகைகளுக்கு தரப்படாது எனவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் கலந்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

Tamil film Producers Council requested to stop everything related to Cinema

அஜித்துக்காக இரண்டு பாடல்களுடன் காத்திருக்கும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிக்கும் பட சூட்டிங் ஆரம்பித்து விட்டால் படத்தலைப்பு என்ன? நாயகி யார்?, இசையமைப்பாளர் யார்? என்ற தகவல்கள் வெளியாக தாமதம் ஆகும்.

சூட்டிங் முடிவடையும் தருவாயில் கூட படத்தலைப்பு வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இந்த முறை படத்தின் சூட்டிங் ஆரம்பமாவதற்கு பல மாதங்களுக்கு முன் கிட்டதட்ட பாதி கலைஞர்களை அறிவித்துவிட்டனர்.

ஆனால் சூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. தற்போது ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் இன்னும் தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

சிவா இயக்கவுள்ள விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

சத்யஜோதி தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து இமான் கூறும்போது… இரண்டு பாடல்கள் தயார் செய்துவிட்டேன்.

விசுவாசம் படத்தின் முதற்கட்ட சூட்டிங் தொடங்கும்போதே இரண்டு பாடல்களையும் படமாக்கவுள்ளனர்” என தெரித்துள்ளார்.

சூட்டிங் எப்போ தல..?

Music Composer Imman is ready with 2 songs for Ajith Viswasam

பல விஷயங்களில் ரஜினி நழுவுகிறார்; நண்பரை கலாய்த்த கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற தன் அரசியல் கட்சியை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

அன்றுமுதல் தன் கட்சி தொடர்பான பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆலோசனை கூட்டங்களில் கலந்துக் கொண்டு வருகிறார்.

தற்போது கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்படுவதற்கு முன், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்…

“குரங்கணி காட்டு தீ விபத்தை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இறந்தவர்கள் பலரும் இளைஞர்கள் என்பதால் எதிர்காலத்தின் ஒரு பகுதி தீக்கிரையாகி விட்டது” என்றார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்களில் பதில் சொல்லாமல் நழுவுகிறாரே என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு… ”பல விஷயங்களில் அவர் அப்படித்தான் பதில் சொல்லாமல் இருக்கிறார்” என்று பதிலளித்தார் கமல்.

Rajini didnt give answer for many questions says Kamal

முழுநேர அரசியல்வாதி ஆகல; ஆன்மிக பயணத்தில் அரசியல் கேள்விக்கு ரஜினி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்மையில் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார்.

இதனை அடுத்து தனது மன்றங்களில் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது… தலைவனுக்கான வெற்றிடம் உள்ளது. அதற்குதான் அரசியலுக்கு வருகிறேன். எம்ஜிஆர் கொடுத்த நல்லாட்சியை கொடுப்பேன் என்று பேசினார்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன், தனது வழக்கமான ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார்.
ஹிமாச்சலில் அங்குள்ள பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று உத்தரகாண்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது…

“அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நான் தற்போது பதிலளிக்க விரும்பவில்லை.

கட்சி பெயரை அறிவிக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி ஆகவில்லை.

ஆன்மிகப் பயணமாக இமயமலை வந்துள்ளேன். இது அரசியல் பயணம் கிடையாது.

குரங்கணி காட்டுத் தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக வருந்துகிறேன். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

In Pilgrimage tour I wont talk about Politics I Pray for Amithab ji says Rajini

More Articles
Follows