கைதி படம் மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கைதி படம் மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார்.

தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே, அர்ஜுன் தாஸ் இன்னும் இரு படங்களில் நடித்து வருகிறார்.
அவர் பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி 2 விலும், அந்தகாரம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இத்தனை படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் யார் ? எங்கிருந்து வருகிறார்?

துபாயில் வங்கி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த அர்ஜுன் தாஸ், ஒரு நடிகனாக வேண்டும் என்ற தனது நெடு நாள் கனவை பூர்த்தி செய்ய, தனது வேலையை உதறித் தள்ளி விட்டுச் சென்னை வந்தார்.

அவரது இந்த முடிவுக்கு முதலில் ஒப்புதல் அளிக்காத அவரது பெற்றோர், அவரின் சினிமா காதலை கண்டு பின்னர் ஒப்புதல் அளித்தனர்.
சென்னைக்கு வந்த அர்ஜுன் தாஸ், முதலில் கூத்துப்பட்டறையிலும் அதன் பின் ஏவமிலும் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டார்.

அதன்பின் வாய்ப்புகளைத் தேட துவங்கினர்.

திரைத்துறைக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்த அர்ஜுன் தாஸுக்கு, திரைத்துறை எப்படி இயங்குகிறது என்று புரிந்து கொள்வதற்கு சிறிது காலமாயிற்று.

விடாமல் வாய்ப்புக்காக போராடினார் அர்ஜுன் தாஸ். நான்கு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு அவருக்கு லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நான்காண்டு போராட்டக் காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு ஆர்ஜே வாக ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் பணிபுரிந்தார் அர்ஜுன் தாஸ்.

“நான் ஆர் ஜே வாக வானொலி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, திரைத்துறையில் இருந்து பலரை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. இந்த காலகட்டத்தில் தான் கைதி படத்தில் நடிப்பதற்கு ஒரு ஆடிஷன்னுக்கு என்னை அழைத்தார்கள். அந்த ஆடிஷனில் கலந்து கொண்டேன்.
இந்த வாய்ப்பு கிட்டியது,” என்கிறார் இந்த இளம் நடிகர்.

அதன் பின், பிரபு சாலமனின் கும்கி இரண்டாம் பகுதியிலும், அந்தகாரம் எனும் ஹாரர் திரில்லர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது.

“கும்கி இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரம் நன்மையும் தீமையும் கலந்த ஒரு குணாதிசயம் கொண்டது. இந்த படத்தில், என் பகுதிகளை நடித்து முடித்துள்ளேன். அந்தகாரம் என்னும் மற்றொரு படம், விக்னராஜன் எனும் புதிய இயக்குனரால் இயக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன,”
என்கிறார் அர்ஜுன் தாஸ்.

பெரிய சவால்களை எதிர்கொண்டு அதைக் கடந்து இப்பொழுது தனது கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ், சரியான முடிவுகளை எடுத்து நல்ல இயக்குனர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.

இணையத்தை அதிர வைக்கும் ரஜினியின் Reel & Real ஸ்டில்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் அண்ட் ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, பிரதீக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்பட சூட்டிங்கை முடித்துவிட்டு ஓய்வு எடுக்க 10 நாட்கள் இமயமலைக்கு சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

அங்கு ரஜினி சென்றுள்ள படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் ‘தர்பார்’ பட சூட்டிங்கில் உள்ள படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Rajinikanths Reel and Real stills goes viral

பிறந்தநாளில் கர்ப்பமான போட்டோவை ரிலீஸ் செய்த கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகாநடி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தேசிய விருதை வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது.

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் இப்படம் முழுக்க திரில்லர் பாணியில் உருவாகுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் கிரிஷ் எடிட் செய்கிறார்.

இந்த நிலையில் இன்று, கீர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

’பெண் குயின்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடிக்கிறார்.

இதன் சூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.

பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Karthik Subbaraj released Keerthy Sureshs Penguin first look

விவசாயிகளுக்காக புதிய கட்டிடம் கட்டி கொடுத்த மக்கள் செல்வன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயற்கை, பேராண்மை உள்ளிட்ட தரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.

இவரின் புதிய படமான லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் குன்றத்தூர் அருகே பெருவயல் என்ற கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

அப்போது கதையின் படி விவசாயிகள் சங்க கட்டிடம் ஒன்று தேவைப்படவே செட் போட நினைத்தார்களாம்.

ஆனால் உண்மையாகவே ஒரு கட்டிடத்தை கட்ட சொல்லி சூட்டிங்கை முடித்தவுடன் அதை விவசாயிகளுக்கே கொடுக்க சொல்லியிருக்கிறார் மக்கள் செல்வன்.

இந்த படத்தை விஜய்சேதுபதியின் விஜய்சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மற்றும் 7சிஎஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

Vijay Sethupathi built new building for farmers at Laabam movie

24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம் திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.

இன்று இரவு தொடங்கி நாளை இரவுக்குள் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே விறுவிறுப்பான திரைக்கதையாகி உள்ளது. சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அந்த நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், அவசர சிகிச்சை மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும், அசிஸ்டெண்ட் கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு மிகவும் முக்கிய திருப்பம் ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் ஆடுகளம் நரேன் நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – ஷெரீப் (அருவி புகழ் வேதாந்த் பரத்வாஜ் இசையில் ஒரு மெல்லிசை பாடல் உருவாகி இருக்கிறது)
ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன்
படத்தொகுப்பு – சந்திர சேகரன்
கலை – பாலா ஓம் பிரகாஷ்
தயாரிப்பு – தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் – அலெக்ஸ், இளமைதாஸ்

BREAKING ஒரே நாளில் விஜய்-கார்த்தி மோதல்; பிகில் ரிலீஸ் தேதி இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு தீபாவளி திருநாள் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27ல் வருகிறது. எனவே தீபாவளி ஸ்பெஷலாக வரும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய குழப்பம் நீடித்து வந்தது.

சற்றுமுன் கைதி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தனர். அதாவது அக்டோபர் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் என மாலை 5 மணிக்கு அறிவித்தனர்.

எனவே பிகில் ரிலீஸ் தேதி அக். 24ல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதுவும் அக்டோபர் 25ல் ரிலீஸ் என ஒரு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அட்லி இயக்கியுள்ள பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கைதி படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Bigil and Kaithi movies clash on 25th October 2019

More Articles
Follows