விஜய் ரசிகர்களை கவர ஏஆர். ரஹ்மான் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கிவரும் ‘தளபதி 61’ படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற உள்ளதால், அதற்கான லொகேஷன் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் விஜய் நடனத்திற்கு ஏற்ப ஸ்பெஷலாக ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த பாடலின் ட்யூனை கேட்ட படக்குழுவினர் குஷியாகி விட்டார்களாம்.

படக்குழுவினரே இவ்வளவு உற்சாகம் அடைந்தார்கள் என்றால், விஜய் ரசிகர்களுக்கு இப்பாடல் செம ஸ்பெஷல் பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

‘நடிகை நந்தினியின் நடத்தை சரியில்லை…’ கார்த்தி தாயார் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை நந்தினி.

இவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் ஜிம் பயிற்சியாளர் கார்த்தியை வீட்டின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் பிரிய, இவரது கணவர் கார்த்தி நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டார்.

இதுகுறித்து நடிகையின் மாமியாரும், கார்த்தியின் அம்மாவுமான சாந்தி கூறியதாவது…

அவர்கள் இருவரும் பிரிய நந்தினியின் அப்பாதான் காரணம். எப்போது பணம் பணம் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

எப்போதும் நண்பர்களுடன் சுற்ற வேண்டும் என்று சொல்வார் நந்தினி. கார்த்தி சொல்வதை கேட்க மாட்டார். அதான் அவன் இந்த முடிவை எடுத்துவிட்டான்.” என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார் கார்த்தி அம்மா.

அஸ்வின் தாத்தாவை தோற்கடித்த பவர் பாண்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ், சிம்பு ஆகிய இருவரும் நட்போடு இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் தங்கள் நடிகர்களின் படங்களை போட்டியாகவே பார்க்கின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் இடம்பெற்றுள்ள அஸ்வின் தாத்தா டீசர் வெளியானது.

இது ரசிகர்களால் அதிகளவில் பகிரப்பட்டு பார்வையாளர்கள் எண்ணிக்கையில் 3.1 மில்லியன் பார்வையாளர்களை பெற்று, சாதனை படைத்தது.

இதனை மிஞ்சும் வகையில் தனுஷ் இயக்கி தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படத்தின் ட்ரைலர் 3.4 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

இளையராஜாவுக்கு இந்திய சினிமா சார்பில் பாராட்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , இசைஞானி இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று சந்தித்தனர்.

இந்நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியது, வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிகழ்வு இது , இளையராஜா அவர்களோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம் மேலும் ஒரு வருடம் நாங்கள் வேகமாக உழைக்க எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

நாங்கள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இதை ஒரு Tributeட்டாக நடத்தவுள்ளோம்.

இவ்விழா இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இருக்கும். இது சாதாரணமான பாராட்டு விழாவாக இருக்காது,

இது வரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டு விழாவாக இது இருக்கும். இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் ஒரு விழாவாக இவ்விழா இருக்கும்.

இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

ஏனென்றால் இசைஞானி இளையராஜா நம் அனைவருடைய வாழ்விலும் இருக்கிறார்.

நாம் சிரிக்கின்றபோதிலும் , நம்முடைய சோகத்திலும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு துணை. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்யம். அதற்க்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. இது நிச்சயம் 1௦௦ பேர் கலந்து கொள்ளும் ஒரு பாராட்டு விழாவாக இருக்காது. இவ்விழா பிரம்மாண்டமான ஒரு விழாவாக இருக்கும் என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் 5ஸ்டார் கதிரேசன் பேசியது :- தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் அறிமுக விழா வருகிற வியாழன் அன்று மாலை 6மணி அளவில் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து நடைபெறும் இதில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

இவர்களுடன் துணை தலைவர் பிரகாஷ்ராஜ் , கௌரவ செயலாளர் K.E.ஞானவேல்ராஜா செயற்குழு உறுப்பினர்கள் ரா.பார்த்திபன் , எம். கபார் உடன் இருந்தார்கள்.

‘மைனா’ நந்தினி கணவர் கார்த்தி தற்கொலை; காரணம் இதுதானா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடரில், ‘மைனா’ என்னும் கேரக்டரில் கலக்கியவர் நந்தினி.

தற்போது டிவி ஷோக்களில் நடுவராகவும் இருக்கிறார்.

இவருக்கும் ஜிம் ட்ரெய்னரான கார்த்திகேயனுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

இவர்கள் சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீடீரென கார்த்தி விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதற்கான காரணத்தை அறிய போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நந்தினி தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

“நான் அவரிடம் உண்மையாக இருந்தேன். ஆனால் கார்த்தி என்னிடம் உண்மையாக இல்லை.

கவர்மென்ட்டில் ஜாப் வாங்கி தருகிறேன் என பல பேரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.

இதுபற்றி கேட்டபோது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது.

மீண்டும் மீண்டும் கேட்டபோது, தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டினார்.

இனி அவரிடம் செட்டாகாது என்று வீட்டிற்கு வந்துவிட்டேன்.

ஆனால் இப்போது அவர் இறந்த செய்தியை என்னால் நம்ப முடியவில்லை.

அவரை பிணமாக பார்க்கும் தைரியம் என்னிடம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Vijay TV fame Maina fame Nandhini husband Karthi attempts suicide

 

‘குரங்கு பொம்மை’க்கு கைகொடுத்த மம்மூட்டி-விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நித்திலன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குரங்கு பொம்மை’.

ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் சார்பாக எல்.எல்.பி தயாரித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் மம்மூட்டி வெளியிட்டார்.

இதன் அனிமேஷன் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்.

இந்நிலையில், இதன் இசை உரிமையை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மூலம் பெற்றுள்ளார்.

இசையமைப்பாளர் யுவனே இதன் இசை உரிமையை பெற்றுள்ளது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது எனலாம்.

More Articles
Follows