தமிழ்பாட்டுக்கு இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு; ஏஆர் ரஹ்மான் ரியாக்சன் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகில் தனது 25வது ஆண்டை கொண்டாடும் வகையில் லண்டனில் ஓர் இசைக் கச்சேரியை நடத்தினார் ஏஆர். ரஹ்மான்.

இதில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி பேசும் ரசிகர்கள் பங்கேற்றனர்.

ஆனால் இந்நிகழ்ச்சியில் நிறைய தமிழ் பாடல்கள் இருந்ததால் ஹிந்தி ரசிகர்கள் பாதியில் எழுந்து சென்று, தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

இது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில் ஒரு விருதுவிழாவில் கலந்துக் கொண்ட, ஏஆர். ரஹ்மானிடம் இதுகுறித்துக் கேட்டபோது…

’மக்களின் ஆதரவு இல்லாமல் நான் இல்லை.

அவர்களுக்காக கடமைப்பட்டுள்ளேன்.

என்னால் முடிந்தவரை சிறப்பான பாடல்களை தர நான் இன்னும் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

AR Rahman reaction to his Hindi fans against Tamil Songs

கமலுக்கு தைரியமிருந்தால் அரசியலுக்கு வரட்டும்…. நிதியமைச்சர் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஊழல் விஷயத்தில் பீகாரை தமிழகம் மிஞ்சிவிட்டதாக கமல்ஹாசன் அண்மையில் பேசியிருந்தார்.

இது தமிழகத்தை ஆளும் அதிமுக அரசை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது.

எனவே, கமலுக்கு தமிழக அமைச்சர்கள் எச்சரிக்கையும் எதிர்ப்பும் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…

‘தமிழக அரசை விமர்சிக்கும் நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்து சாதிக்கட்டும்.

தைரியம் இருந்தால் அரசியலுக்கு வந்து கருத்து சொல்லட்டும்.

திமுகவுக்கு கமலின் தயவு தேவைப்படுகிறது. திமுகவின் நிலைமை இந்தளவுக்கு ஆகிவிட்டது அதான்.

ஸ்டாலினுக்கு கமலின் உதவி தேவைப்படுவதால் அவர் கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்’ என கூறினார்.

If Kamal has guts let him come to Politics says Finance Minister Jayakumar

ஆதரவளித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கமல் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் சூழ்நிலையை கமல் விமர்சித்து வருகிறார்.

எனவே கமலை மிரட்டும் நோக்கத்தில் அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்தும், ஒருமையில் பேசியும் வருகின்றனர்.

இந்நிலையில் கமலுக்கு திரையுலகம் எப்போதும் துணை நிற்கும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் தெரிவித்திருந்தார்.

கமலுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

எனவே ஸ்டாலினுக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் கமல்.

அவர் பதிவிட்டுள்ளதாவது…

அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே.

ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது.

Kamal said thanks to MK Stalin for his support

அதிமுக அமைச்சர்கள் மிரட்டல்; கமலுக்கு ஆதரவாக ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு புறம் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மறுபுறம் தமிழக அரசை விமர்சித்த கமலை எதிர்த்து பல்வேறு தமிழக அமைச்சர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

“அரசை குறை கூறுவதை கமல் இத்தோடு நிறுத்திக்கொள்ளவேண்டும், அவர் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தயாரா?

அவர் நடித்த படங்களுக்கு வரி செலுத்தியது தொடர்பாக ஆய்வு செய்யட்டுமா? என அமைச்சர் வேலுமணி கேட்டு இருந்தார்.

மேலும் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய வேண்டும் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

“அரசை விமர்சித்த கமல்ஹாசனை மிரட்டுவது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல்.

கமலை மிரட்டும் அமைச்சர்களை முதல்வர் வேடிக்கை பார்ப்பது அதைவிட அடாவடி செயல் எனவும் அவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

MK Stalin supports Kamals critics on TamilNadu ADMK Govt

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் 62 படத்தின் நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி உறுதியாகிவிட்டது.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 100 கோடிக்கு மேல் தயாரிக்கவுள்ளதாம்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என அனிருத் கூறியுள்ளதால், அவர் இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகி பற்றிய தகவல் வந்துள்ளது.

இதில் ஸ்பைடர் பட நாயகி ராகுல் ப்ரித்திசிங் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

‘ஸ்பைடர்’ படத்தை இயக்கும்போது ராகுல் பிரித்திசிங்கின் நடிப்பு திறமையையை கண்டு ஏஆர்.முருகதாஸ் அசந்துபோனதால் இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Rakul Preet Singh may romance with Vijay for AR Murugadoss movie

புலிமுருகனை தமிழுக்கு கொண்டு வந்தவரின் அடுத்த படைப்பு அகோரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் தமிழ்ச் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘புலிமுருகன்’ . இது மோகன்லால் நடிப்பில் வந்த பிரம்மாண்ட வெற்றிப் படமாகும். அந்த ‘புலிமுருகன்’ படத்தை தமிழில் வழங்கியவர் ஆர்.பி.பாலா.

அவர் தயாரிக்கும் புதிய படம் ‘அகோரி’.

ஆர்.பி. பிலிம்ஸ் வழங்கும் ஆர்.பி.பாலாவின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர். டி.எஸ்.ராஜ்குமார் இயக்கும் படம் ‘அகோரி’ . இப்படத்துக்கு , வசனத்தை ஆர்.பி.பாலா எழுத ஒளிப்பதிவு செய்கிறார்/

ஆர்.ஷரவணகுமார்,இசை.பிரசாந்த் கே கே, சண்டைப் பயிற்சி-.டேஞ்சர் மணி, நடனம் -பூபதி, கதாநாயகனாக, சித்து, ஆதவ், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

“அகோரி” என்கிற இந்தப் பிரம்மாண்ட படத்தின் பூஜை மற்றும் தொடக்கவிழா ஏ.வி.எம் ஸ்டுடியோவில் இன்று மிகச் சிறப்பாக நடந்நது.. படத்தைப்பற்றி இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார் கூறுகையில்…

” இப்படத்தின் கதை, திரைக்கதையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைத்துள்ளோம். அது மட்டுமின்றி இப்படத்தில் சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களை பணியாற்ற வழியமைத்துக் கொடுத்த எங்கள் தயாரிப்பாளர் ஆர்.பி.பிலிம்ஸ் ஆர்.பி.பாலா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

தயாரிப்பாளர் ஆர்.பி.பாலா கூறுகையில்…

”எனது முதல் படமான “அகோரி” தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மிகப்பெரிய முத்திரை பதிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காரணம் இப்படத்தின் கதைக்களமும் கையாளும் விதமும் புதிய கோணத்தில் இருக்கும்.இதற்கு எங்கள் படத்தின் தலைப்பு “அகோரி” என்பதே ஓர் உதாரணம் எனலாம்” என்றார்.

More Articles
Follows