ரஜினியை இயக்கும் ஏஆர்.முருகதாஸ்: விரைவில் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மகேஷ்பாபு நடித்து வரும் ஸ்பைடர் படத்தின் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை படமாக்க வெளிநாடு சென்றிருக்கிறார் அப்பட இயக்குனர் ஏஆர். முருகதாஸ்.

இப்படத்தை அடுத்த செப்டம்பரில் வெளியிட்ட பின், விஜய் படத்தை இயக்கும் பணியில் இறங்கவிருக்கிறார்.

விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில், இதை முடித்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அவரும் ரஜினி படத்தை இயக்க ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விஜய்க்கு அட்லின்னா… அஜித்துக்கு இட்லி; கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி படம் சூப்பர் ஹிட் அடிக்கவே, அட்லிக்கு மீண்டும் ஒரு மெர்சலான வாய்ப்பை கொடுத்தார் விஜய்.

இந்த கூட்டணி கோலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் நாம் இப்போ சொல்லப்போகும் செய்தி. அட்லி போன்ற ஒரு இயக்குனரைப் பற்றியது அல்ல.

இது அஜித் இட்லி பற்றிய செய்தி.

சென்னையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் அவரின் உருவம் பொறித்த பெரியளவிலான ஒரு இட்லியை உருவாக்கியுள்ளனர்.

நாளை அஜித்தின் விவேகம் வெளியாகவுள்ளதால் இதனை இன்று கோலாகலாமாக கொண்டாடி வருகின்றனர்.

 

 

கௌதம் மேனனுக்காக விக்ரமுடன் மோதும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, ராதிகா, சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இதில் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடித்து வருகிறார்.

ஸ்பை த்ரில்லர் படமான இதன் சூட்டிங்கை தற்போது துருக்கியில் நடத்தி வருகிறார் இயக்குனர்.

அங்குள்ள இஸ்தான்புல் நகரில் பார்த்திபனும் விக்ரமும் மோதும் அதிரடியான சண்டைக் காட்சியை இயக்கி வருகிறாராம்.

இதனையடுத்து அங்கிருந்து அபுதாபி பறக்கவிருக்கிறது படக்குழு.

சிம்புதேவனை விஜய் கைவிட்டார்; வடிவேலு கைகொடுப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வடிவேலு இரு வேடங்களில் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சிம்புதேவன்.

இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கி இவர், பிரம்மாண்டமாக உருவான விஜய்யின் புலி படத்தை இயக்கினார்.

இப்படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படுதோல்வியை சந்தித்தது.

எனவே தனது அடுத்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என எண்ணிய இவர், மீண்டும் தன் முதல்பட நாயகன் வடிவேலுவை தேர்ந்தெடுத்துள்ளார்.

இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற பெயரில் இயக்கவுள்ளார்.

இப்படத்தை இயக்குனர் ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர்கள் தற்போது வெளியாகி இணையத்தை இம்சை செய்து வருகிறது.

விஜய்தான் சிம்புதேவனுக்கு கைகொடுக்கவில்லை. வடிவேலு கைகொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

 

செப்டம்பரில் கமலின் விஸ்வரூபம்2 பாடல்கள் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக கமல்ஹாசனின் படங்கள் சர்ச்சைக்குள்ளாகும்.

ஆனால் சர்ச்சையின் உச்சகட்டமாக மாறிய படம் விஸ்வரூபம்.

இப்படம் தமிழகத்தில் வெளியாகவிட்டால், இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என கமல் தெரிவிக்கும் அளவுக்கு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

பல கட்ட பிரச்சினைகளுக்கு பின்னர் இது கடந்த 2013ஆம் வெளியானது.

இதன் இரண்டாம் பாகம் இந்தாண்டு 2017ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த செப்டம்பர் மாதம் இதன் பாடல்கள் வெளியாகவுள்ளதாம்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

அஜித்தை அடுத்து விஜய்யுடன் மோதும் சுசீந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கி, விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் 2017 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

இதே நாளில் கௌதம்கார்த்திக் நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படமும் வெளியாகும் என அறித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் தற்போது சுசீந்திரன் இயக்கியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படமும் இணைந்துள்ளது.

இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரீஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா ஆகியோர் நடிக்க இமான் இசையமைத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகியள்ள இப்படத்தை அன்னை பிலிம் ஃபாக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ளார்.

இதன் ரிலீஸ் குறித்து சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

எங்களுடைய இத்திரைப்படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அனைவரும் மெர்சலை எதிர்த்து வருகிறீர்களா என்று கேட்கிறார்கள். நாங்கள் மெர்சலை எதிர்த்து வரவில்லை.

‘மெர்சல்’ உடன் வருகிறோம். 2013-ம் ஆண்டு ‘பாண்டியநாடு’ திரைப்படத்தை அஜித் சார் படமான ‘ஆரம்பம்’ படத்தோடு வெளியிட்டோம். ‘ஆரம்பம்’ படமும் வெற்றி பெற்றது. எங்கள் படமும் வெற்றி பெற்றது.

என்று தான் எழுதிய கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows