அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஞ்சலி, யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் வாழ்த்துகளுடன் இன்று படப்படிப்பு தொடங்கிய இப்படம், ஒரு குறுகிய காலத் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ் தெரிவித்ததாவது….

விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். ஒரு படைப்பாளி என்ற வகையிலும், ரசிகன் என்ற முறையிலும் இந்தப் படம் எனக்கு பெருமகிழ்ச்சியைத் தருகிறது. முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது. இதுவரை அஞ்சலி ஏற்று நடித்த வேடங்களிலிருந்து இந்த வேடம் எவ்வளவு மாறுபட்டது என்பதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணர்ந்து கொள்ளலாம்.

யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் இருவரையும் அவர்களது புகழுக்காகவோ அல்லது அவர்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை அறுவடை செய்ய வேண்டுமென்பதற்காகோ இப்படத்திற்குள் கொண்டுவரவில்லை. வலிமை மிக்க அந்தக் கதாபாத்திரங்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், அந்தப் பாத்திரங்களை அவர்கள் தங்கள் நடிப்பால் எந்த அளவு நியாயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் படம் பார்க்கும்போது உணரலாம். படம் முழுவதும் இருவரும் வந்து அமர்க்களப்படுத்தியிருப்பார்கள். படத்தில் பங்கேற்கும் மற்ற சில முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் குறித்தும் விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஆர்வி ஒளிப்பதிவு இயக்குநராக பொறுப்பேற்க, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்குநராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைக்க, படத்திற்கான பாடல்களை எழுதுகிறார் அருண்ராஜா காமராஜ்.

THERI MAX சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ செகன்ட் லுக் ரீலீசானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கி வரும் படம் ‛தர்பார்’.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
லைகா இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் தற்போது ஜெய்ப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று ஓணம் பண்டிகையான (செப்.,11) மாலை 6 மணிக்கு தர்பார் பட 2வது போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அதன்படி தற்போது வெளியாகியுள்ளது.

இதில் ரஜினிகாந்த் வெறும் பனியன் மட்டுமே அணிந்திருக்கிறார். உடற்பயிற்சி செய்துக் கொண்டே ஆக்ரோஷமாக இருக்கிறார். தன் வலது கையில் காப்பு அணிந்திருக்கிறார்.

Super Star Rajinis Darbar 2nd look poster revealed

வெங்கட் பிரபு இயக்கத்தில் இணையும் வைபவ் & காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை 28, மங்காத்தா, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெங்கட் பிரபு.

இவரின் இயக்கிய பார்ட்டி படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இதனையடுத்து சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்க இருந்தார்.

ஆனால் சிம்புவை அப்பட தயாரிப்பாளர் நீக்கியதால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

எனவே இணைய தொடரை (வெப் சீரிஸ்( இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு.

வைபவ் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கின்றனர்.

இளையராஜா-விஷால்-மிஷ்கின் கூட்டணியில் துப்பறிவாளன் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு உதவி இயக்குனராக சினிமாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவர் விஷால்.

அதன்பின்னர் செல்லமே படத்தின் மூலம் ஹீரோவானார்.

தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ‛ஆக்ஷன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சினிமாவுக்கு அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் அவரின் அடுத்த படம் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2ம் படத்தில் நடித்து அப்படத்தை தயாரிக்கிறார்.

இளையராஜா இசையமைக்கிறார்.

விஷால், மிஷ்கின், ஜி.கே.ரெட்டி (விஷால் அப்பா) ஆகியோர் இளையராஜாவை சந்தித்து அவரிடம் ஆசி வாங்கிய பிறகு இப்படத்தை அறிவித்தனர்.

ஓணம் பண்டிகையில் ரசிகர்களுக்கு தலைவரின் ‘தர்பார்’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனத்திற்காக முருகதாஸ் இயக்கி வரும் ‛தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2020 பொங்கலுக்கு வெளியிட இருப்பதால் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வெளியாது. அதன்பின்னர் நிறைய படங்களை திருட்டுத்தனமான சிலர் வெளியிட்டனர்.

இந்த நிலையில் இன்று ஓணம் பண்டிகையான (செப்.,11) மாலை 6 மணிக்கு தர்பார் பட 2வது போஸ்டர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

உசுப்பேத்துறாங்க.. அதான் ஹீரோஸ் சம்பளத்தை ஏத்துறாங்க. : கே. ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புளுவேல் விளையாட்டை மையமாக வைத்து ‘புளுவேல்’ என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் பூர்ணா, மாஸ்டர் கபிஷ் கண்ணா, பிர்லா போஸ், பொன்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தை மது, அருமைச்சந்திரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்பட பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது…

“இயக்குனர் நினைத்தால் சாதாரண மனிதரையும் சூப்பர் ஸ்டாராக்க முடியும், சூப்பர் ஸ்டாரை சாதாரண மனிதராக்க முடியும்.

சிலர் உங்கள் படம் நன்றாக ஓடுகிறது என்று உசுப்பேத்துவதை நம்பி நடிகர்-நடிகைகள் சம்பளத்தை உயர்த்துவது வருத்தம் அளிக்கிறது

புளுவேல் விளையாட்டைப் பற்றியும், அதை விளையாடுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு பாராட்டுக்கள்” என்றார்.

கில்டு சங்க தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது..

“பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நடிக்க நேரமில்லை என பின்வாங்கிட்டார்.
ரூ.15 லட்சம் முன்பணத்தில் ரூ.5 லட்சம் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தைத் திருப்பிதரவே இல்லை.

அவர் இனிமேல் எந்த சூட்டிங்கில் கலந்துக் கொண்டாலும் மறியல் நடத்துவோம்” என்றார்.

Producer K Rajan and Jaguar Thangam speech at Blue Whale Audio Launch

More Articles
Follows