ஆந்திரா மெஸ் அப்டேட்ஸ்: ஜமீன்தார் மனைவியிடம் தஞ்சமடையும் நாலு பேர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷோ போட் ஸ்டுடியோஸ், நிர்மல் கே பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”

ராஜ் பரத், தேஜஸ்வினி, ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் நடித்துள்ள இப்படம் குறித்து இயக்குனர் ஜெய் கூறும் போது,

வரது, ரத்னா, ரிச்சி மற்றும் சேது ஆகியோர் தேவராஜ் என்கிற லோக்கல் தாதாவிடம் வேலை செய்கிறார்கள். ஒரு தருணத்தில் வரது 40-வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது, அவனது வாழ்க்கையில் ஒரு மாற்றம் நடக்கிறது. அதன் பிறகு நடக்கிற தொடர்ச்சியான சம்பவங்கள் வரதுவின் வாழ்க்கையை மாற்றியமைக்கிறது. இதனால் அவன், தேவராஜிடம் இருந்து பிரிவதற்கு முடிவெடுக்கிறான்.

சில சம்பவங்களால் வரது மற்றும் அவனது சகாக்கள் அனைவரும் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிற பழமைவாதியான ஜமீன்தார் மற்றும் ஜமீன்தாரின் அழகிய மனைவியிடம் தஞ்சம் அடைகிறார்கள். அங்கேயே சில நாட்கள் தற்காலிமாக தங்கி பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்து யோசிக்கிறார்கள். அந்த அழகும், அமைதியும் நிறைந்த அந்த கிராமம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு பாதைய காண்பிக்கிறது.

இந்த நான்கு பேரும் பழையதை எல்லாம் மறந்து விட்டு புத்தம் புதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். ஆனாலும், இவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டுமென்று தேவராஜ் தேடிக்கொண்டிருக்கிறான். வரது மற்றும் அவனது சகாக்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்களா? தேவராஜ் அவர்களை என்ன செய்தான்? என்பதே படத்தின் கதை.

‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த பிரசாந்த் பிள்ளை இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை முகேஷ்.ஜி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை பிரபாகர் கவனிக்கிறார். குட்டி ரேவதி, மோகன் ராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.” என்றார்.

ஒவ்வொரு சினிமா டிக்கெட்டின் ஒரு ரூபாயை தெலுங்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால், சமந்தா நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படம் தெலுங்கிலும் ரிலீஸாகி வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த ஆண்டில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது அவர்களுக்கு ஒத்துழைப்பு தரும்விதமாக திரைப்பட டிக்கெட் கட்டணத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் சார்பாக ஒரு ரூபாய் தொகையை விவசாயிகளுக்காக ஒதுக்கப்படும் என்று விஷால் தெரிவித்தார்.

ஆனால் இங்கே தியேட்டர் உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அப்போது பல விவசாய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த விஷால் அதை இங்கே அமல்படுத்த முனைப்பு காட்டவில்லை.

தற்போது தெலுங்கில் ரிலீஸாகி ஓடி வரும் தனது ‘இரும்புத்திரை’ படத்திற்கு விற்பனையாகும் டிக்கெட் ஒன்றிற்கு ரூபாய் 1 வீதம் தெலுங்கு விவசாயிகளுக்கு ஒதுக்கியுள்ளார்.

சிம்பு-ஓவியா இணைந்த *90ML* பட லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சந்தானம் நடித்த ’சக்கப்போடு போடு ராஜா’ படத்தை தொடர்ந்து ”90ML” படத்துக்கு சிம்பு இசையமைக்கிறார்.

ஓவியா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்து வரும்இப்படத்தின்
படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

அனிதா உத்தீப் இயக்கத்தில் காமெடி கலந்து உருவாகிவரும் இப்படத்தின் கடைசி செட்யூல் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடக்கிறது.

அரவிந்த்கிருஷ்ணா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என முக்கிய பிரபலங்கள் இணைந்து உள்ளனர்.

சூட்டிங் முடிந்தவுடன் இப்படத்துக்கு பின்னணி இசைப்பணிகளை தொடரவிருக்கிறார், சிம்பு.

யோகி பாபுக்கு அடித்த யோகம்; நயன்தாரா சிபாரிசு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லட்சுமி’, ‘மா’ ஆகிய குறும்படங்களை இயக்கிய கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை அறம் படத்தை தயாரித்த கேஜேஆர் நிறுவனம் தயாரிக்கிறது என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் தன்னுடன் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் காமெடி கதாபாத்திரம் ஏற்ற யோகிபாபுவின் நடிப்பு பெரிதாக ஈர்த்ததால் இப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் அளிக்க வேண்டும் என படக்குழுவிடம் அவருக்கு சிபாரிசு செய்து நடிக்க வைக்கிறார், நயன்தாரா.

விஸ்வாசம் படத்தில் அஜித்தின் 2 கேரக்டர்கள் குணாதியசங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படத்தில் இரண்டு கேரக்டர்களில் அஜித் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இதன் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித்தின் இரண்டு கேரக்டரில் ஒருவர் சாந்தமான அஜித்தாகவும் மற்றொருவர் கோபக்கார இளைஞராகவும் வருகிறார்.

சாந்தமான கேரக்டர் அஜித் தாடியில்லாமல் இருப்பாராம்.

இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைத்து வருகிறார்.

ரஜினி படத்தில் நடிக்கும் பாபி சிம்ஹாவின் படம் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இது ரஜினியின் 165வது படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் சூட்டிங்குக்காக மேற்கு வங்க மாநில டார்ஜிலிங்கில் ஒரு மாதம் தங்கவுள்ளார்.

இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றர்.

இந்நிலையில் இதன் சூட்டிங்கில் உள்ள பாபி சிம்ஹாவின் போட்டோ ஒன்று தற்போது இணையங்களில் வெளியாகியுள்ளது.

இந்த சூட்டிங்குக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் இதுபோன்ற படங்கள் வெளியாவது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

More Articles
Follows