தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சென்னை மயிலாப்பூரில் சிட்டி சென்டர் அருகே ‘தீ லா கஃபே’ என்ற உணவகத்தை நடிகர் அமீர் தொடங்கி உள்ளார். இந்த விழாவிற்கு வந்து ஹோட்டலை திறந்து வைத்தார் நடிகர் விஜய்சேதுபதி.
இந்நிகழ்வில் அவருடன் கரு பழனியப்பன், நடிகர் சாய் தீனா, சஞ்சிதா செட்டி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அதில்…
“விஜய் படங்கள் வெளியாகும் போதெல்லாம் பிரச்சனை வருதே. அதற்கு சித்தார்த் குரல் கொடுத்தாரா? .. இலங்கை விவகாரம் தொடர்பாக என்னை கைது செய்தார்களே அப்போது சித்தார்த் குரல் கொடுத்தாரா?
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது ஜெய்ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம் என்று கோசம் எழுப்பியது பற்றி கேட்டபோது.. கிரிக்கெட் போட்டியை காண வருபவர்கள் சாதாரண ஏழை மக்கள் அல்ல. ஒவ்வொரு வகையில் வசதியான மேல் தட்டு மக்களே..
அப்படி இருந்தும் அவர்களிடம் ஏற்பட்டுள்ள அறியாமையை கண்டு என்ன சொல்வது? இது ஒரு அரசாங்க நடத்தும் போட்டி அல்ல. தனியார் நடத்துப் போட்டி தான்.
இந்தியா கிரிக்கெட் வாரியம்.. பாகிஸ்தான கிரிக்கெட் வாரியம் என தனியார் இந்த போட்டிகளை நடத்துகின்றன. ஆனாலும் அரசு தலையிட வேண்டும் என்றார்.
சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கொடுக்கப்படவில்லை என்று கேள்வி கேட்டனர். அதற்கு அமீர் பதிலளிக்கையில்…
கடலில் நிறைய மீன்கள் உள்ளன.. அவையெல்லாம் ரிலையன்ஸ் என்ற தனியார் மார்க்கெட்டுக்கு மட்டும் வருவதில்லை.. ரோட்டு கடைகளிலும் மீன் விற்கப்படுகிறது.. அது போல குறைந்த பட்ஜெட்டில் சின்ன படங்கள் தயாரிக்கும் போது அவை தியேட்டரை மட்டும் நம்பி இருக்க கூடாது. தற்போது ஓடிடி சந்தை விரிவடைந்துள்ளது.. அவற்றையும் சின்ன படங்கள் குறி வைக்க வேண்டும்.
குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் வேண்டாம் என விஷால் கூறி இருந்தது ஆவேசத்தில் கூறினாரா அல்லது அக்கறையுடன் கூறினாரா தெரியவில்லை. ஆனால் அவர் அக்கறையிடம் கூறியிருப்பார் என்று தெரிகிறது என்றார் அமீர்.
Ameer speech at his new restaurant opening ceremony
