தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைக்கா மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
இப்படம் 2018 ஜனவரி 26ல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில் அக்ஷய்குமார் ஹீரோவாக நடித்துள்ள மற்றொரு படமான பேட் மேன் (PADMAN) என்ற படமும் இதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இவை இரண்டும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருப்பதால் இந்தியில் 2.0 படத்தை வெளியிடும்போது தியேட்டர்கள் சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து PADMAN படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமாக அக்ஷய்குமார் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…
2.0 படம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இப்படம் உறுதியாக ஜனவரியில் ரிலீஸ் ஆனால் என் படத்தை பின்னர் ரிலீஸ் செய்வேன்.
நான் தயாரிப்பாளர் என்பதால் என்னால் என் பட ரிலீஸை தள்ளி வைக்கமுடியும்.
ஆனால் 2.0 படம் ரிலீஸை ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனம்தான் முடிவு செய்யும்.” என்று தெரிவித்துள்ளார்.
