Breaking: தமிழக நலனுக்காக நடிகர் சங்க போராட்டம்; அஜித்-சிம்பு புறக்கணிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழ் திரையுலகினர் இன்று மௌன அறவழிப் போராட்டம் நடத்தினர்.

இதில் ரஜினி, கமல், சிவகுமார், இயக்குனர் எஸ்பி முத்துராமன், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

ஆனால் பெரும்பாலான நடிகைகள் இதில் கலந்துக் கொள்ளவில்லை.

இது மௌன போராட்டம் என்பதால் யாரும் பேசவில்லை. நடிகர் சங்கத் தலைவர் நாசர் இந்த நிகழ்ச்சி தொடங்கும்போது பேசினார்.

ஆனால் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அஜித் மற்றும் அவரது ரசிகர் சிம்பு இதில் கலந்துக் கொள்ளவில்லை.

ஆனால் சிம்பு இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசவிருக்கிறார்.

தமிழகத்தின் நலனுக்காக நடைபெறும் போராட்டத்தில் அஜித் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இறுதிவரை வரவே இல்லை என்பதால் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

Ajith and Simbu not participated in Nadigar Sangam Protest in Cauvery Issue

BREAKING: ஐபிஎல்லை நிறுத்தனும்; இல்லேன்னா என்ன செய்யனும்.? ரஜினி ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும் அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு நாள் ஒரு போராட்டம் பந்த் என அறிவித்து போராடி வருகிறது.

இதனால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று மும்பையில் மும்பை இந்தியன் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி சென்னையில் மற்றொரு போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது ரஜினிகாந்த் பேசியதாவது…

காவிரிக்காக தமிழகமே போராடும்போது, ஐ.பி.எல். போட்டியை நிறுத்தினால் நல்லதுதான்.

அதை சம்பந்தப்பட்டவர்கள் செய்ய வேண்டும். ஒருவேளை முடியாவிட்டால் சென்னை அணி வீரர்கள் விளையாடும் போட்டிகளின்போது கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடலாம்.

இல்லையென்றால் போட்டியை காண போகும் மாணவர்கள், ரசிகர் ரசிகைகள் கருப்பு கொடி, கறுப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும். அப்போது எல்லாருக்கும் தமிழகத்தின் பிரச்சினை தெரிய வரும்” என்று பேசினார் ரஜினி.

IPL match should be stopped if not CSK players must use black flag says Rajini

ரஜினியை எதிர்ப்பேன்: கமல்; கமலை எதிர்க்கவே மாட்டேன்: ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கமலும் ரஜினியும் அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சினிமாவில் போட்டியாளர்களும் என்றாலும் நிஜத்தில் எவராலும் பிரிக்க முடியாத நண்பர்களாக இருக்கின்றனர்.

தற்போது தனி தனிக் கொள்கைகளோடு இருவரும் அரசியல் களத்திற்கு வருவதால் இருவரும் எதிரிகளாக மாறிவிடுவார்களோ? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் கமல் பேசும்போது… அரசியலில் ரஜினியை எதிர்க்கும் சூழ்நிலை வந்தால் நிச்சயம் எதிர்ப்பேன். ஆனால் அப்படி ஆக்க்கூடாது என்றே விரும்புகிறேன் என்று பேசியிருந்தார்.

இதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது அரசியலில் கமல் தனக்கு எதிரியே அல்ல. அவரை எதிர்க்கவும் போவதில்லை என ரஜினி தெரிவித்தார்.

Kamal is not my enemy I wont oppose him at any cost says Rajini

BREAKING: ஏழ்மை-லஞ்சம்-கண்ணீர்தான் என் எதிரி… : ரஜினி பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.

விரைவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளார். கட்சி மற்றும் கொள்கைகளை அவர் அறிவிக்கவுள்ளார்.

என் அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் எம்ஜிஆர் தந்த நல்லாட்சியை நான் கொடுப்பேன் என அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் சங்கத்தின் மௌன அறவழிப் போராட்டத்தில் கலந்துக் கொள்ள சென்ற போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் அரசியலில் உங்கள் எதிரி யார்? என்று கேட்டனர்.

அதற்கு அவர் சொன்ன பதில் எல்லாரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

அவர் கூறியதாவது… என்னுடைய எதிரி ஏழ்மை, லஞ்சம், ஏழைகளின் கண்ணீர், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கண்ணீர்தான்.

தமிழகத்தில் ஆதரவின்றி தவிக்கு ஈழத்து தமிழ் மக்களின் ஆதங்கம்தான் என் எதிரி. வேலையின்மைதான் என் எதிரி. மற்றபடி எனக்கு யாரும் எதிரியில்லை” என்ற பக்குவப்பட்ட மனிதராக பேசினார்.

Poverty Bribe Tears are my enemies says SuperStar Rajinikanth

Breaking : தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும்.: ரஜினி எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முழுவதும் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

திமுக, அதிமுக, விசிக, உள்ளிட்ட பல கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் இன்று மௌன அறவழிப்போராட்டத்தை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தி வருகிறது.

இதில் கலந்துக் கொள்வதற்காக ரஜினிகாந்த் புறப்படவிருந்தார். அப்போது செய்தியாளர்களை தனது போயஸ் இல்ல தோட்டத்தில் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது….

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கப்பட வேண்டும். உடனே அமைக்க வேண்டும் என்பது பிரதமருக்கு நான் வைக்கும் கோரிக்கை.

ஒருவேளை அமைக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாகும் என தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலத்தை வீணாக்குகிறது மத்திய அரசு

தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையே காவிரி மேலாண்மை வாரியம்.

சாதாரண ஏழை விவசாயிகளை முன்னிறுத்தி, போராட்டம் நடத்த வேண்டும்.

ஐம்பூதங்களில் ஏதாவது ஒன்று கெட்டுப்போனாலும், உலகம் அழிந்துவிடும்.

ஸ்டெர்லைட் போன்ற பாதிப்பு ஏற்படுத்தும் ஆலைகளால் எவ்வளவு மக்களுக்கு வேலை கிடைத்தாலும் அது வேண்டாம்.

இயற்கையின் மாசுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது. அப்படி ஏற்பட்டால் அது தேவையில்லை.

அதனால் அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் கிடைத்தாலும் நிம்மதி இருக்காது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் எனக்கு விளக்கம் அளித்திருந்தது. ஆனால் அது ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை” என்று பேசினார் ரஜினிகாந்த்.

நடிகர் சங்க மௌன அறவழிப்போராட்டம்; கமல்-ரஜினி-விஜய் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் மவுன போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை தொடங்கியது.

நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர் விஜய் முதல் ஆளாக கலந்து கொண்டுள்ளார்.

மேலும், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விஷால், கார்த்தி, பார்த்திபன், சிவகுமார் உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர்.

பின்னர், தீவிர அரசியலில் களமிறங்கி வரும் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

ஆனால் இதுவரை முன்னணி நடிகரான அஜித் வரவில்லை.

Top Heroes participated in Nadigar Sangam Protest for Cauvery and Sterlite issue

More Articles
Follows