விஜய்யை இயக்கும் கோப்ரா டைரக்டர்.? யார் பார்த்த வேலை இது?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘மாஸ்டர்’ படத்தை முடித்துவிட்டார் விஜய்.

இவரின் அடுத்த (விஜய்யின்) 65வது படத்தை ‛இறுதிச்சுற்று’ சுதா அல்லது முருகதாஸ் ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புது கதையாக ‛டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியவரும், விக்ரமின் கோப்ரா படத்தை இயக்கி வருபவருமான அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

இது குறித்து அஜய் ஞானமுத்துவே… ‛‛இது யார் பார்த்த வேலைன்னு தெரியல, விஜய் 65வது படத்தை நான் டைரக்ட் செய்யல” என விளக்கமளித்துள்ளார்.

மீண்டும் முத்தையாவுடன் இணையும் கவுதம் கார்த்திக் & லக்ஷ்மி மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கும்கி, குட்டிப்புலி, கொம்பன், மஞ்சப்பை, வேதாளம் என பல படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வந்தார் நடிகை & லக்ஷ்மி மேனன்.

திடீரென படிப்பை தொடர சினிமாவை விட்டு விலகினார்.

கடைசியாக 2015ல் விஜய்சேதுபதியுடன் இணைந்து றெக்க படத்தில் நடித்திருந்தார்.

கவுதம் கார்த்திக் உடன் சிப்பாய் மற்றும் பிரபுதேவா உடன் யங் மங் சங் படத்திலும் நடித்துள்ளார்.

இரு படங்கள் தயாராக இருந்தாலும் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கிறது.

இந்த நிலையில் முத்தையா இயக்கவுள்ள புதிய படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.

இப்பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

முத்தையாவின் கொம்பன், குட்டிப்புலி படங்களில் லட்சுமி மேனன். அதுபோல் முத்தையா இயக்கிய தேவராட்டம் கௌதம் கார்த்திக் நடித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகை ஓல்கா குரிலென்கோவுக்கு கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குவாண்டம் ஆப் சோலஸ், டாம் குரூஸ் நடித்த ஒபிலிவியான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஓல்கா குரிலென்கோ.

இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதே போல் சூப்பர் ஹீரோ படங்களான ‘தோர்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் இர்டிட்ரிஸ் எல்பா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அரசியலை அப்படியே வைங்க.. கொரானாவ பாருங்க.. ரஜினி அறிவுரை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த சில தினங்களாகவே தமிழக அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் வார்த்தை.. ரஜினியின் அரசியல் புரட்சி.

மக்களிடையே அரசியல் எழுச்சி.. அரசியல் மாற்றம் எண்ணம் உருவாக வேண்டும் என ரஜினி பேசினார். அப்போது தான் அரசியலுக்கு வருவேன் என சொன்னார்.

மேலும் அண்மையில் நடைபெற்ற சாணக்கியா விழாவில்.. புள்ளி வைத்தேன்.. சுழல் ஆரம்பித்து விட்டது. அலை உருவாக நான் வருவேன். தேர்தல் நேரத்தில் அரசியல் சுனாமி வரும என தெரிவித்திருந்தார்.

இதனால் ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் பொதுமக்களிடையே அரசியல் எழுச்சிக்கான தங்கள் வேலைகளை துவங்கியுள்ளனர்.

ஆட்சி மாற்றம்.. இப்போ இல்லனா எப்பவுமே இல்ல என வாசகங்களை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அரசியல் பணிணை ஒதுக்கி வைக்க ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மக்களிடம் அரசியல் குறித்த விழிப்புணர்வை நிறுத்திவிட்டு, கூட்டம் சேர்க்காமல் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்து மதம் இருப்பதால் கொரானா பாதிப்பு இந்தியாவில் இல்லை.; சூர்யா கார்த்தி பட நடிகை விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் ’மாஸ்’ மற்றும் கார்த்தியின் ’சகுனி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா.

இவர் தற்போது கொரானா குறித்து ஒரு விளக்கம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில் சீனாவுக்கு அருகில் இந்தியா இருந்தும் இந்தியாவில் மட்டும் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை ஏன் தெரியுமா? எனக் கேள்வி கேட்டு இந்து மதம் இருப்பதால் இருப்பதால் தான் பாதிப்பு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

அவரின் பதிவில்.

இந்துக்கள் மற்றவர்களுடன் கை குலுக்காமல் கையை கும்பிட்டு வணக்கம் சொன்னபோது பலர் சிரித்தார்கள்…

கொலைக்கார ‘கொரோனா’ குறித்து லொஸ்லியா சொன்ன அட்வைஸ்

வீட்டுக்குள் நுழையும் முன்னர் கைகால்களை கழுவி விட்டு சென்றதை பார்த்து சிரித்தார்கள்

மரங்களை காடுகளை, விலங்குகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள்,

சைவ உணவை இந்துக்கள் சாப்பிடுவதைப் பார்த்து சிரித்தார்கள்,

யோகா செய்வதை பார்த்து சிரித்தார்கள்,

இறந்தவர்களை எரிக்கும் வழக்கத்தை பார்த்து சிரித்தார்கள்,

இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் குளிக்கும் வழக்கத்தை கொண்டிருக்கும் இந்துக்களைப் பார்த்து சிரித்தார்கள்.

ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை. ஏனெனில் இவை தான் கொரோனா வைரசை பரவாமல் தடுக்க காரணங்கள் ஆகும் என்று பிரணிதா தன் ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார் நடிகை பிரணிதா.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கும் எனத் தெரிகிறது.

தனுஷ்-கார்த்திக் நரேன் படத்திற்கு வலு சேர்க்கும் 2 கேரள பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் 43 படத்தை கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி ஃபில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

பலமான கூட்டணி அமைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உருவான நிலையில் தற்போது இந்த கூட்டணியை மேலும் பலம் சேர்க்க இரு மலையாள பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

ஷார்ஃபு மற்றும் சுஹாஸ் என இரண்டு மலையாள பட எழுத்தாளர்கள் திரைக்கதைக்காக இணைந்துள்ளார்கள்.

ஃபஹத் பாசில் நடித்த ‘வரதன்’ மற்றும் 2019 மெடிக்கல் த்ரில்லர் ‘வைரஸ்’ போன்ற படைப்புகளுக்குத் திரைக்கதை எழுதியதன் மூலம் பெயர் பெற்றவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows