விஜய்யை இயக்க அட்லிக்கு ஏகப்பட்ட கண்டிசன்ஸ் போடும் ஏஜிஎஸ் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க அட்லி இயக்கவுள்ளார்.

விஜய்யுடன் அட்லியும் கீர்த்தியும் இணைவது இது 3வது முறையாகும்.

இப்படத்தை இயக்க அட்லிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தெறி படத்தில் எமியின் கால்ஷீட்டை நிறைய பெற்றுக் கொண்டு படத்தில் நிறைய காட்சிகளை வைக்கவில்லையாம்.

அதுபோல் மெர்சல் படத்தை சொன்ன பட்ஜெட்டில் முடிக்காமல் இழுத்தடித்தாராம் அட்லி.

அதுபோன்ற தவறுகளை இதில் செய்யக் கூடாது என கறாராக சொல்லிவிட்டார்களாம்.

மேலும் படத்தின் பட்ஜெட்டை முன்பே அறிவித்துவிட்டு அக்ரிமென்ட்டில் ஒப்பந்தம் போட சொல்லி இருக்கிறார்களாம். பட்ஜெட் எகிறினால் அதற்கு அட்லியே பொறுப்பு என தெரிவித்துள்ளதாம் ஏஜிஎஸ்.

AGS conditions to Atlee to direct Vijay for Thalapathy 63

25 வருடங்களை கொண்டாடிய ஷங்கருக்கு உதவி இயக்குனர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தயாரித்த ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர்.

1993-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.

ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன.

எனவே, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் பாராட்டி வருகின்றனர்.

25 வருடங்கள் ஆனாலும் இந்த பயணத்தில் 12 படங்களை மட்டுமே ஷங்கர் இதுவரை இயக்கியுள்ளார்.

ஷங்கரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த மாதேஷ், பாலாஜி சக்திவேல், ஹோசிமின், வசந்தபாலன், அறிவழகன், அட்லி உள்ளிட்ட பலரும் ஷங்கரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் ஷங்கருக்கு நினைவுப் பரிசையும் கொடுத்து கௌரவித்தனர்.

அந்த சந்திப்பு குறித்து ஷங்கர் ,“என்னுடைய உதவியாளர்களின் அளவுக்கதிகமான அன்பினால் நனைந்தேன். நீங்கள் இல்லாமல் என்னுடைய இந்தப் பயணம் நடந்திருக்காது,” என்று கூறினார்.

ஷங்கர் இயக்கியுள்ள ரஜினியின் 2.0 அடுத்து வெளியாக உள்ளது. விரைவில் கமல்ஹசான் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தை தொடங்கவுள்ளார்.

Director Shankar completed 25 years in his Cinema carrier

கலைஞர பார்க்கல; குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னேன்.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய அரசியலின் மூத்த தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதனால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் செல்கின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தியும் , மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் தன் பட சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பி காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

ஆனால் கருணாநிதி நல்ல உறக்கத்தில் இருந்ததால் அவரை பார்க்கவில்லை.

பின்னர் கருணாநிதி குடும்பத்தினரிடம் அவருடைய உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்…

“இந்திய அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதியின் நலனை விசாரிக்க வந்தேன். அழகிரி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கு இருந்தனர்.

அவர்களுக்கு நான் ஆறுதல் மட்டுமே சொன்னேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

கலைஞர் தூங்கிக் கொண்டிருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.

Rajinikanth met Karunanidhi and his family and Kauvery Hospital at Chennai

சிங்கத்தை வசூல் மழையில் நனைக்கும் கடைக்குட்டி சிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட.. இந்த காலத்துல பேமிலி செண்டிமென்ட் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது என்ற ஒரு பேச்சு பல வருடங்களாக இருந்து வருகிறது.

ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி வசூலை வாரி குவித்து வருகிறது கடைக்குட்டி சிங்கம்.

கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, சூரி நடித்திருந்த இப்படத்தை பாண்டிராஜ் இயக்க, நடிகர் சூர்யா தயாரித்திருந்தார்.

விவசாயத்தின் மேன்மையையும் கூட்டுக் குடும்பத்தையும் பற்றி சொன்ன இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் இதுநாள் வரை பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.

2 வாரங்களில் ரூ.62க்கு கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டித் தந்துள்ளதாம்.

இதனால் படத்தை தயாரித்த சூர்யா தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Suriya and his brother Karthi were happy about Kadaikutty Singam collections

இளையராஜா இசையில் விக்ரம் பிரபு-சமுத்திரக்கனி-பிரகாஷ்ராஜ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ராதாமோகன்.

தற்போது தனஞ்செயன் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் ‘காற்றின் மொழி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் ராதாமோகன்.

இந்தப் படம் அக்டோபர் மாதம் 18-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஆனால் இதற்கு முன்பே சத்தமில்லாமல் ஒரு படத்தை பல பிரபலங்கள் வைத்து இயக்கியுள்ளார்.

விக்ரம்பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து ‘60 வயது மாநிறம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, விஜி வசனம் எழுதியுள்ளார். பா.விஜய், பழநிபாரதி, விவேக் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

படப்ப்பிடிப்பு மற்றும் டப்பிங் ஆகியவை முடிவடைந்துள்ளதால் அடுத்த ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Prakash Raj Vikram Prabu and Samuthirakani starring movie titled 60 Vayadu Maaniram

கமல் படத்துடன் மோத கெட்ட வார்த்தை டிசைனை வெளியிட்ட யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்து இயக்கியுள்ள படம் விஸ்வரூபம் 2.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் இரண்டு டிரைலர்களும் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்பட புரோமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்.

இந்நிலையில் இப்படம் ரிலீஸ் ஆகிற ஆகஸ்ட் 10ஆம் தேதியில் மற்றொரு படமும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் இசையமைத்து தயாரித்துள்ள பியார் பிரேமா காதல் படமும் இதே நாளில் வெளியாகிறது.

தற்போதுதான் இப்படத்தின் யு/ஏ சென்சார் சர்ட்டிபிகேட் போஸ்டரை வெளியிட்டு அதில் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அந்த போஸ்டரில் நாயகன் ஹரிஸ் கல்யாண் டிசர்ட்டில் I LOVE YOU என்ற வாசகம் உள்ளது.

நாயகி ரைஸாவின் டிசர்ட்டில் I FUCKIN LOVE YOU என்ற வாசகம் உள்ளது.

இதுநாள் வரை இதுபோன்ற வார்த்தைகள் ம்யூட்டில் சொல்லி வந்தாலும் தற்போது பகிரங்கமாக இந்த வார்த்தைகளை வெளியில் பேசுகின்றனர்.

சின்ன சின்ன சிறுவர் சிறுமியர் இந்த வார்த்தைகளை பார்த்தால் என்ன? என்று கேட்க மாட்டார்களா?

படத்திற்கு யுஏ சர்ட்டிபிகேட் கிடைத்துவிட்டது ஓகே. சிறுவர் சிறுமியர் பார்க்க முடியாது. ஆனால் இது போன்ற டிசைன்கள் வந்தால் என்ன செய்வது?

மகா கலைஞன் இளையராஜாவின் மகன் யுவன் ஒரு தயாரிப்பாளராக இருந்து இந்த டிசைனை எப்படி செய்ய ஒப்புக் கொண்டார்? என்பதுதான் தெரியவில்லை.

ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pyaar Prema Kaadhal will clash with Viswaroopam2 on 10th Aug 2018

More Articles
Follows