Exclusive: மீண்டும் இணையும் சசிகுமார்-விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சில கலைஞர்களே கிராமத்து கதைகளை மணம் மாறாமல் தருவதில் வல்லவர்கள்.

இதில் சசிகுமார் மற்றும் விஜய்சேதுபதி முக்கியமானவர்கள்.

சசிகுமார் தற்போது முத்தையா இயக்கத்தில் கொடிவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம்.

இது தொடர்பாக ஒரு இயக்குனர் இருவரையும் சந்தித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார்? என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

இவர்கள் இருவரும் சுந்தரபாண்டியன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Again Vijay Sethupathi and Sasikumar teamsup for new project

விஜய் ரசிகர்களுக்கு பக்கா மாஸ் மெர்சல் சிங்கிள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பாடல்கள் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப்பிரண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் இடம் பெற்றுள்ள சிங்கிள் ட்ராகை மட்டும் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு PAKKA MASS MERSAL SINGLE என்று பெயரிட்டு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Pakka Mass Mersal Single from Mersal movie coming soon

A single is on it’s way. Pakka mass.The name is

விவேகம் பாடல்கள்; அஜித் ரசிகர்களுக்கு அனிருத்தின் அல்டிமேட் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விவேகம் படத்தின் பாடல்கள் இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி 5 மணிக்கு வெளியானது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவா இயக்கியிருக்கிறார்.

இதில் அஜித்துடன் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், கருணாகரன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம் பெற்ற 3 பாடல்களை ஏற்கனவே தனித்தனியாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் ‘சர்வைவா’ பாடலை அனிருத்துடன் யோகி.பி, மாலி மனோஜ் ஆகியோர் பாடியுள்ளனர்.

‘தலை.. விடுதலை’ பாடலை அனிருத்துடன் ஹாரிஷ் ஸ்வாமிநாதன் பாடியுள்ளார்.

காதலாட பாடலை ஷாசா திருப்பதி, ப்ரதீப் குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.

இத்துடன் 1.24 நிமிடம் கொண்ட ஏகே தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளது.

வெறியேற பாடலை பூர்வி கெளடிஷ், எம்.எம்.மானசி ஆகியோர் பாடியுள்ளனர்.
நெவர் கிவ் அப் பாடலை ராஜகுமாரியுடன் அனிருத் இணைந்து பாடியுள்ளார்.

இதன் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இது அனிருத்தின் அல்டிமேட் ட்ரீட் என்கின்றனர்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது.

Vivegam songs released Ajith and Anirudh fans excitement

நானும் ரஜினி ரசிகன்தானே அப்படி பேசுவேனா.? பார்த்திபன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி, நிவேதா பெத்துராஜ், சூரி, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’.

தளபதி பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்பட வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழுவினர் புரமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதில் பார்த்திபன் பேசும்போது… ‘ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கடவுளிடம் தான் கேட்கனும். ஆனால் தனக்கு கடவுள் பாஷை தெரியாது என அவருக்கே உரித்தான பாணியில் கிண்டலாக பேசினார்.

ஆனால் இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே இதுகுறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். அதில்…

கமல்+ரஜினி ரசிகன் நான். அதிலும் ரஜினி சார் எனக்கு நெருக்கமான நண்பர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் ’பார்த்திபனை ஹீரோவா போட்டு படம் எடுங்கள்’ எனத்தூண்டியவர். Ktvi (கதை திரைக்கதை வசனம் இயக்கம்) பார்த்து மெச்சியவர்.

அவருடன் விவாதங்களில்… என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர். உதாரணத்திற்கு ’எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ, அந்த கோவிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்’ என்ற என் அக(ழ்வு)ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்கமாட்டார்.

நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களைப் புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்? (காண்க முதல் வரி).

இதே கேள்விகளுக்கு இதே பதில்களை இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன். சிறு சலசலப்புமில்லை ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஓர் அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன்.

இருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன். காரணம், அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும்.

ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை. பொதுவாழ்வில் விமர்சனங்களை எதிர்கொள்ள இன்னும் தொண்டர்களாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும் பலர் ரஜினி சாரின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் ’நீங்களுமா?’ என அதிர்ந்திருக்கிறார்கள்.

அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்.” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Parthiban clarifies his statment about Rajini and God language

ரஜினி-கமல் அரசியல் எண்ட்ரீ; கம்பேர் செய்யும் கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசை விமர்சித்து சில அறிக்கைகளை வெளியிட்டதால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் கமல்ஹாசன்.

எனவே அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் தினம் தினம் வருகின்றனர்.

கமல் பேசுவது அவரது உரிமை. ஆனால் அவருக்கு எதிராக புகார்கள் தொடுக்கப்பட்டால் நான் அவர் பின்னால் இருப்பேன் என்றார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால்.

அதுபோல் நடிகை கஸ்தூரியும் கமலுக்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டு உள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது….

அரசியலை மட்டுமே கமல் விமர்சித்து வருகிறார்.
ஆனால் அதை விடுத்து அவரை அரசியலுக்கு வந்து பார்த்தால் தெரியும் என சீண்டிக்கொண்டே இருந்தால், அவர் அரசியலைக் கற்றுக் கொண்டு வந்து அரசியலில் ஜெயித்து காட்டுவார்.” என்றார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்கையில்…

ரஜினி யோசிக்கிறார். யோசிக்கிறார். யோசித்துக் கொண்டே இருக்கிறார்.

ஆழம் தெரியாமல் காலை வைக்கக்கூடாது என நினைக்கிறார்.

இறங்கினால்தானே ஆழம் தெரியும் என்று நான் நினைக்கிறேன்.

இறங்கி பார்ப்போம். மண் ஒட்டினால் தட்டி விட்டு எழுவோம் என நான் நினைக்கிறேன்.

ஆனால் அவர் இருக்கும் உயரம் வேறு. அதனால் இவர் இவ்வளவு யோசிக்கிறார் என நினைக்கிறேன்.” என தன் சமீபத்திய பேட்டியில் ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றி பேசினார்.

பிக்பாஸ் ஓவியாவை திருமணம் செய்ய சிம்பு விருப்பம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

நாட்டில் பல பிரச்சினைகள் இருந்தாலும் அதற்கு ஆதரவாக ஒலிக்காத குரல்கள் ஓவியாவை ஆதரிக்க சொல்லி ஒலித்தன.

நடிகர்கள் சிம்பு, காமெடி நடிகர் சதீஷ், நடன இயக்குனர் சதீஷ் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டார் ஓவியா.

அதன்பின்னரும் கூட கமலிடம் பேசும்போது “நான் ஆரவ்வை காதலிக்கிறேன். அவருக்காக காத்திருக்கிறேன்.” என தெரிவித்தார்.

நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள சிட்டி சென்டருக்கு அவர் சென்றபோது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில் சிம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் ஓவியாவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக ஒரு ட்வீட் செய்யப்பட்ட படம் வெளியானது.

இதனால் திரையுலகமே பரபரப்பானது.

ஆனால் சிம்புவின் ட்விட்டர் பக்கத்தை பார்த்தபோது அதுபோல அவர் ட்வீட் செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.

ஆனால் யாரோ ஒருவர் சிம்புக்கு அவபெயரை ஏற்படுத்த போட்டோ ஷாப்பில் இப்படி செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.

Whether Simbu likes to marry Bigg Boss Oviya

 

More Articles
Follows