அஜித் அன்பினால் மீண்டும் அசந்து போகும் அப்புக்குட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த அப்புக்குட்டிக்கு இளையராஜாவின் இசையில் உருவான ‘அழகர்சாமியின் குதிரை’ தேசிய விருதை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து, சுந்தர பாண்டியன், வீரம், வேதாளம் படங்களில் நடித்து அஜித்தின் அன்பை பெற்றார்.

இதன் பின்னர் அவருக்காக ஒரு போட்டோ சூட் நடத்தி, இவரின் இயற்பெயரான சிவபாலன் பெயரில் இனி நடிக்க வேண்டும் என அஜித்தும் வலியுறுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ‘தல 57’ படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

முதலில் அப்புக்குட்டியின் காட்கிளை சென்னையில் படமாக்க முடிவு செய்திருந்தார்களாம்.

ஆனால் தற்போது அந்தக் காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கு பின்னணியில் அஜித் இருந்திருப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகமொத்தம் அஜித்தின் அன்பை முழுவதுமாக பெறப்போகிறார் அப்புக்குட்டி.

ரஜினி-விஜய்-சூர்யா வரிசையில் இணைந்த விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடித்துள்ள இருமுகன், செப்டம்பர் 8ஆம் ரிலீஸ் ஆகும் என கூறப்படும் நிலையில், இப்படத்தின் புரேமோஷன் பணிகளுக்காக தற்போது கேரளாவில் உள்ளார் விக்ரம்.

இதற்காக தனி ஹெலிகாப்டரையும் ஏற்பாடு செய்துள்ளார் இதன் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.

இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சினி கேலக்ஸி பெற்றுள்ளதாம்.

இப்படத்தின் தெலுங்கு உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

ரஜினியின் கபாலி, விஜய்யின் தெறி மற்றும் சூர்யாவின் 24 படங்களை இந்நிறுவனம் வெளியிட்டு நல்ல லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-தனுஷ்-ரஞ்சித் கூட்டணியில் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி உலகளவில் பெரும் சாதனை படைத்தது.

மேலும் இதன் க்ளைமாக்ஸில் அடுத்த பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக காட்சி இருந்தது.

தற்போது இதனை மெய்பிக்கும் வகையில், இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை தனுஷின் வுண்டெர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. அதை தனுஷே சற்று முன் ட்விட்டரில் வீடியோ பதிவுடன் அறிவித்தார்.

இதனால் இணையம் முழுவதும் இந்த செய்தி வைரலாகி வருகிறது.

இது கபாலி படத்தின் தொடர்ச்சியா? அல்லது புதிய படமாக குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

 

அவரை மட்டும் ராம்கோபால் வர்மா வாழ்த்த என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் விஷால், நாகர்ஜீனா, விஜயகுமார் மற்றும் ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 29) தங்கள் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இவர்களுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகார்ஜீனாவை வாழ்த்தியது குறித்து இயக்குனர் ராம்கோபால் வர்மா தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

இதுவரை யாருக்கும் நான் பிறந்த நாள் வாழ்த்து கூறியது இல்லை. ஆனால் எனக்கு இயக்குனராக பிறப்பு கொடுத்தது நாகார்ஜீனாதான்.

எனவே என் பாலிசியில் அவருக்கு மட்டும் விதிவிலக்கு உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

‘நான் உயர பறக்க விஜய்தான் காரணம்…’ அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர், பாடகர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.

கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதிவந்தாலும், கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் இவரை உலகளவில் கொண்டு சேர்த்தது.

இப்பாடலை எழுதி இவரே பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜீலை மாதம் இறுதியில் விஜய் இவரை போனில் தொடர்பு கொண்டு பாராட்டி இருந்தார்.

இந்நிலையில் இன்று விஜய்யை சந்தித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

இச்சந்திப்பு பற்றி தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது… “நான் உயர பறக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு கிளம்பியதால் ட்வீட்டை டெலிட் செய்தாரா சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத் திரையில் இருக்கும்போதே தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்தவர் சிவகார்த்திகேயன்.

தற்போது வெள்ளித்திரையில் நுழைந்த பின் இந்த வட்டம், இன்னும் விரிவடைந்து பெரியளவில் உருவாகியுள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ரெமோ படத்தில் பெண் வேடமிட்டு, நர்ஸ் ஆக நடித்துள்ளார்.

எனவே இவரது ரசிகர் ஒருவரும் இதுபோல், பெண் வேடம் அணிந்து, அந்த புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.

இதைப் பார்த்த சிவகார்த்திகேயனும் சூப்பர் நண்பா, இப்படி செய்ய தனி தைரியம் வேண்டும் என பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுபோன்ற ரசிகர்களின் செயல்களை நீங்கள் சர்போர்ட் செய்யலாமா? என சிலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்களாம்.

இதனால், ட்வீட்டை சிவகார்த்திகேயன் டெலிட் செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

More Articles
Follows