சூர்யாவின் அதிரடி திட்டத்தில் இணைந்த கார்த்தி-விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன்னைச் சார்ந்த சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சிறந்த மாணவர்களின் படிப்புக்காக பல உதவிகள் செய்து வருகிறார் சூர்யா.

மேலும் அகரம் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையும் நடத்தி வருகிறார்.

தற்போது தன் பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக தனது உதவியாளர்களின் சம்பளத்தை இனி தானே கொடுப்பதாகவும் சூர்யாஅறிவித்துள்ளார்.

இவரின் முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது சூர்யாவைப் போல் தாங்களும் செய்யப்போவதாக விஷாலும் கார்த்தியும் அறிவித்துள்ளனர்.

After Suriya decision Karthi Vishal plans to give salary to their assistants

கூண்டோடு ராஜினாமா விவகாரம்; ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு தலைவர் கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் நிர்வாகிகளை நியமித்து வருகின்றார்.

ஆனால் இதற்கு முன்பாக மன்றத்தின் விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக ரஜினி மக்கள் மன்றம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் தம்பிராஜை இடைநீக்கம் செய்தது, இதை எதிர்க்கும் விதத்தில் ஒட்டுமொத்த ரஜனி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக கூடி பேசி நேற்று அறிவித்தனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கு, ரஜினியின் அறிவுரைப்படி, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி விஎம்.சுதாகர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை வெளியிட்டுள்ள செய்தியில்,

தம்புராஜ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அனைவரையும் அழைக்காமல் தனக்கு விருப்பமானவர்களை மட்டும் அழைத்து பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவரை தொடர்பு கொண்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை.

நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுடன் ஒற்றுமையா செயல்பட அறிவுறுத்தியது.

சென்னை தலைமை மன்றத்திற்கு இரண்டு முறை அழைத்தபோதும் அவர் வராமல் வேறு ஒருவரை அனுப்பி வைத்தார்.

தன்னலமற்ற மக்கள் சேவை என்ற புனிதமான உயர்ந்த எண்ணத்தோடும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் துவங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தில் இதுபோன்ற செயல்கள் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.

பொதுநலம் விடுத்து தங்கள் சுயநலத்திற்காக சிலர் செயல்பட முயற்சி செய்வதும், அத்தகைய முயற்சி நிறைவேறாத பட்சத்தில் மன்றத்தில் நற்பெருக்கு களங்கம் கற்பிக்க முயல்வதும் மக்கள் விரோத செயல் என்பதால் அவை ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது.

அத்தகைய செயல்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு மன்றத்தில் இடமில்லை.

மன்றத்தின் உள் விவகாரங்களை நமக்குள் விவாதிப்பதை விடுத்து, அதை பிரச்சாரம் செய்து அதில் ஆதாயம் தேட முயற்சிப்பது ஆரோக்கியமான செயல் அல்ல.

தலைமை எடுத்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஒழுக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெயர்போன ரசிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும்.

ஒற்றுமையாக செயல்பட்டு கொடுக்கப்பட்ட பணியை செய்வதே நமக்கும், மன்றத்திற்கும் நல்லது. என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Dindigul Rajini Makkal Mandram issue Rajini Order

விஜய் ஆண்டனியுடன் கை கோர்க்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தனி மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். எந்த வயதிலும் போராட முடியும் என வாழ்ந்து காட்டி வருகிறார் டிராபிக் ராமசாமி.

சமூகப்போராளியான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருவதை நம் தளத்தில் பலமுறை பதிவிட்டு இருந்தோம்.

இதில், ‘டிராபிக் ராமசாமி’யாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க, அவர் மனைவியாக ரோகிணி நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சீமான், குஷ்பூ, விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில், விஜய்சேதுபதியும் இதில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

விஜய்விக்ரம் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை குகன். S.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ஹர ஹர மகாதேவகி புகழ் பாலமுரளி பாலுவும், எடிட்டிங் பிரபாகரும், கலையை வனராஜ் அவர்களும் கவனிக்கிறார்கள்.

Vijay Sethupathi teams up with Vijay Antony for Traffic Ramasamy movie

நடிகர் தனுஷை தன் மகன் என கூறிய கதிரேசன் வழக்கு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என அறிவிக்கக்கோரி, மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

அந்த வழக்கின் விசாரணையின் போது நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கதிரேசன் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.

இது தொடர்பான நடந்த விசாரணையின்போது, மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கு நிறைவு பெற்றதால் தனுஷ் தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர்.

கோர்ட்டின் இந்த தீர்ப்பு குழப்பத்தில் இருந்த தனுஷ் ரசிகர்களையும் திருப்தி அடைய செய்துள்ளதாம்.

High Court dismisses Dhanush fake parents case

தன் தம்பியின் தளபதி ஆசையை நிறைவேற்றி வைப்பாரா பிரியா வாரியர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Adaar Love என்ற படத்தில் இடம் பெற்ற கண் புருவம் அசைக்கும் காட்சிகளினால் இந்திய சினிமாவையே தன் பக்கம் திருப்பியவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் நடைபெற்றும் பல நிகழ்ச்சி மேடைகளிலும் இவரை காண முடிகிறது.

கேவி. ஆனந்த் இயக்கும் சூர்யா 37 படத்தில் இவர் நடிப்பார் என்றார்கள். அதன்பின்னர் அது வெறும் வதந்தி என டைரக்டர் அறிவித்தார்.

இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரியா வாரியர் தன் குடும்பம் பற்றி பேசியுள்ளார்.

அப்போது தன் தம்பியின் தீராத ஆசை பற்றி பேசியுள்ளார். அவரின் தம்பி தீவிர விஜய் ரசிகராம்.

‘நீ எப்படியாவது விஜய் படத்தில் நடிச்சுடு. நீ நடிக்க போகும்போது நானும் உன்னுடன் வந்து விஜய்யை நேரில் பார்த்து பேசிவிடுவேன் என்று தன் ஆசையை சொன்னராம்.

ம்ம்ம்.. தன் தம்பியின் தளபதி ஆசை ஐப்ரோ அழகி நிறைவேற்றுவாரா?

Priya warrier brother wish to meet Thalapathy Vijay

விஜய்யை தொடர்ந்து விஜய்சேதுபதியும் இப்படி செய்யலாமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் காரணமாக கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் உள்நாட்டில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன.

மேலும் மார்ச் 23ஆம் தேதி முதல் வெளியூர், மற்றும் வெளிநாட்டில் சூட்டிங் நடத்தப்பட கூடாது என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது.

ஆனாலும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த விஜய் 62, நாடோடிகள் 2, உள்ளிட்ட 4 படங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கான விளக்கத்தை தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் தெரிவித்தார்.

இன்று மார்ச் 24ஆம் தேதி ஆகிவிட்ட நிலையில் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா நடிக்கும் ‘ஜுங்கா’ படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளனர்.

அந்த நாட்டில் 10 நாட்கள் சூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஸ்டிரைக் அறிவிக்கப்படுவதற்கு முன்பே போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் படக்குழு செல்ல வேண்டிய கட்டயா சூழ்நிலை என கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் விஜய்யை போல விஜய்சேதுபதியும் இப்படி செய்யலாமா? என திரையுலகினரே தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

வேலை நிறுத்தம் என்றால் இழப்பு வரத்தான் செய்யும். அதற்காக நாம் ஒற்றுமை இல்லாமல் இப்படி செய்வது சரியாகுமா? என கேட்கின்றனர்.

Vijay sethupathis Junga shooting happening during Cinema Strike

More Articles
Follows