ரஜினி-அஜித்துக்கு பிறகு சிவா தான்…; அடித்துச் சொன்ன அனிருத்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர்.

வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார். வெங்கட்பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் மிர்ச்சி சிவா, தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அனிருத் பேசியதாவது, ” இந்த படத்துக்கு இசையமைத்துள்ள இசை சுனாமி பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள். படத்தின் ஹீரோ வைபவின் தீவிர ரசிகன் நான்.

மேயாதமான் படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். அந்தளவுக்கு அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

ரஜினி, அஜித் படங்களுக்கு பிறகு மிர்ச்சி சிவாவின் படத்தை தான் முதல் நாள் அன்றே தியேட்டருக்கு சென்று பார்ப்பேன். அதன் பிறகு அவரை தொலைப்பேசியில் அழைத்து பாராட்டுவேன். வணக்கம் சென்னை படத்திற்கு முன்பே அவரை பிடிக்கும்.

அதேபோல வெங்கட்பிரபுவுக்கு நான் பெரிய ரசிகன். சென்னை 28 படம் வந்தபோது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.

தியேட்டருக்கு சென்று நண்பர்களுடன் படம் பார்த்து என்ஜாய் செய்தேன். வெங்கட்பிரபு டீம் போல நாமும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என எனது நண்பர்களிடமும் அவ்வப்போது கூறுவேன்”.

இவ்வாறு அனிருத் பேசினார்.

After Rajini and Ajith i used to watch Siva movies at FDFS says Anirudh

அவர் ஈரோடு ராமசாமி; இவர் அக்ரஹாரத்து ராமசாமி… – வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்கி இயக்கியுள்ள ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார் எஸ்ஏ. சந்திரசேகரன்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு வைரமுத்து பேசியதாவது…

” எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை. என்றாலும் அவர் என் மேல் அன்பும் மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு.

தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே நடத்தி வைக்க அழைத்தார்.

இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது சொல்லியது. இந்த டிராஃபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும்.

அது எஸ். ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம் . ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம் பட்சம். டிராஃபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது.

அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும்.

அது இவருக்கு இருக்கிறது. இறந்த காலத்தைக் கலை செய்வது எளிது.

அதிலுள்ள சர்ச்சைக்குரிய வற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதை செய்யலாம்.

எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது. கற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது கடினம். நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால்.

அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி. இந்த எஸ்.ஏ.சி யைப் பார்த்தாலும் டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வயது ஒரு தடையில்லை என்று கூற முடியும்.

போராட உடல் நலம் ஒரு தடையல்ல. போராட வயதுண்டா?தேவையானது மனசு தானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா? ,

சூரியனுக்கு வயதுண்டா? ,காற்றுக்கு வயதுண்டா? கடலுக்கு வயதுண்டா? ,

மலைகளுக்கு வயதுண்டா? போராட வயதுண்டா? நெருப்பில் இளையது மூத்தது என்று உண்டா ?

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

எரியும் நெருப்பில் இளையது மூத்தது உண்டா? என்பதற்கு உதாரணமாக இருப்பவர் இந்த டிராஃபிக் ராமசாமி. இவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை போராட்ட இருட்டறை வாழ்க்கை பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும் விரும்பமாட்டார்.

ஏனென்றால் போராளிகள் நெஞ்சைக் காட்டுவார்கள் தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்.
இந்த ராமசாமி மனசுக்குள் ஒரு குழந்தையாக இருக்கிறார். தன்னைப் பற்றிக் பேசும் போதெல்லாம் கை தட்டுகிறார்.
போராளிகளுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது.

போராளிகள் எப்போதும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார்.

எல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என் று நம்புவது மூட நம்பிக்கை. வெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது.

இந்த டிராஃபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார்? எதற்காக நீதிமன்றத்தில் நிற்கிறார் ? இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது என்பது அறிந்தால் நல்வினை ஏற்படும்.

அரசின் உளவுத்துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும். அப்போதுதான் அது உளவுத் துறை. இங்கே இந்தக் கணம் பேசுவது கூட கண்காணிக்கப்படும். பதிவாகும்.

உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும் சொல்லக் கூடாது. விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும்.

எல்லா ஊடகங்களும் ஊடக முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்து தான் இயங்குகின்றன.

அதையும் தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொதுப்புள்ளியில் இணைந்து இப்படத்தை வெற்ற பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராஃபிக் ராமசாமி படத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும்.

அரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது.. ஒடுக்குமுறையை விட்டு விட்டு போராட்ட ங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும்.

அன்று ஈரோடு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து ராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராஃபிக் ராமசாமி போன்ற சமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது.

இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். இப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன் .வாழ்த்துகிறேன். “இவ்வாறு வைரமுத்து பேசினார்.

நடிகை ரோகினி பேசும் போது , ” டிராபிக் ராமசாமி என்னைப் பாதித்த ஒரு கேரக்டர். நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாய்ப்பு வாங்கி நடித்தேன். இந்தச் சரித்திரத்தில் நானும் இருப்பது பெருமை. ” என்றார்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும் போது… ” இதில் பல எதிர்பாராத காட்சிகள் விருந்தாக இருக்கும் . டிராபிக் ராமசாமியை பலரும் ஒரு கோமாளியாகவே சித்தரித்துள்ளனர், அவரது போராளி முகம் போராட்டங்கள் நிறைந்த
அனுபவங்கள் கொண்டது. அது பலரும் அறியாதது. ” என்றார்.

விழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும் போது…

“இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை, தன்னம்பிக்கை, தைரியம் மூன்றும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். யாருக்கும் பயப்பட வேண்டாம்.. பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ கூஜா ” என்றார்.

விழாவில் இயக்குநரும் கதை நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகரன், திருமதி ஷோபா சந்திரசேகரன், நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி, இயக்குநர்கள் ஷங்கர், எம்.ராஜேஷ், பொன்ராம், சாமி, நடிகைகள் அம்பிகா, ரோகினி, உபாசனா, அபர்னதி, நடிகர்கள் ஆர்.கே. சுரேஷ், மோகன்ராம், சேத்தன், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், ஒளிப்பதிவாளர் குகன், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, கலை இயக்குநர் வனராஜ், எடிட்டர் பிரபாகர், படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோரும் கலந்து கொண்டனர் .

விழாவை முன்னிட்டு அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது.

விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டு தான் பேசினார்கள்.

இது பார்வையாளர்களுக்கு புதுமையான தோற்றத்தையும் அனுபவத்தையும் கொடுத்தது.

Lyricist Vairamuthu praises Traffic Ramasamy and his life style

வின்செண்ட் செல்வா இயக்கத்தில் உருவான பத்து செகண்ட் முத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அதுபோலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் மதிப்பிடக் கூடாது. பல்வேறு கோணங்கள் இருக்கும்.

பத்து செகண்ட் முத்தம் என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முன்முடிவுக்கு கொண்டு வரும். தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களை தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்த தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள்.

இந்த கோணங்களை இயக்குனர் வின்செண்ட் செல்வா விளக்குகிறார். அவர் கூறும்போது, “சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களை கண்டுபிடிப்பதை சொல்வது தான்.

அந்த தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிப்பார், அதனால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன். இதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.

இயக்குனர் வின்செண்ட் செல்வா ஒரு முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா தவிர்த்து மொத்தமும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்.

அதை பற்றி கூறும்போது, “இந்த கதையை எழுதி முடித்தவுடனே புதுமுகங்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன். அதனால் புதுமுகங்களாக நடிக்க வைத்தேன்.

பெண் சாதிக்க நினைத்த விஷயம் வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றி பேசுகிறது. படம் அதிவேகமாக இருக்கும், படத்தில் பாடல்கள் இல்லை,பின்னணி இசை மட்டுமே உள்ளது.

புது முகங்கள் கீதா மற்றும் சரிஷ் சேர்ந்து நடிக்க, மிஸ்டர் இந்தியா ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை, வசனம் ரூபன் எழுத,சான் லோகேஷ் எடிட்டிங்கில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில் படம் உருவாகியிருக்கிறது.

வாகமான், ஹைதராபாத், கொடைக்கானலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லக்‌ஷ்மி டாக்கீஸ் தயாரித்திருக்கிறது.

Vincent Selvas Pathu Second Mutham is a Nick Of Time Thriller

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க த்ரிஷா விழிப்புணர்வு பேரணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதனையொட்டி, சென்னை அண்ணாநகரில் தமிழ்நாடு அரசு தொழிலாளர்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் யுனிசெப் (UNICEF) தூதுவர் நடிகை திரிஷா கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்தார்.

அங்குள்ள பூங்காவில் துவங்கிய இந்த பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு, தங்களது கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

அப்போது பேசிய நடிகை திரிஷா, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை, கொத்தடிமை முறையை தடுத்து நிறுத்தி, குழந்தைகளுக்கான கல்வி தரும் இயக்கமாக யுனிசெப் (UNICEF) விளங்கி வருவதாகவும், தெரிவித்தார்.

Trisha lends her support to end all forms of child labour

பிரேம்ஜிக்கு *இசை சுனாமி* பட்டம் கொடுத்த யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

வெங்கட்பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிரேம்ஜி, தனக்கு எப்படி இசை சுனாமி பட்டம் வந்தது என்பது குறித்து விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

” பொதுவாக இசையமைப்பாளர்களுக்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், தேனிசை தென்றல் தேவா என காலநிலையை தொடர்புப்படுத்தியே பட்டம் வைப்பார்கள்.

அதுபோல் எனக்கு இசை சுனாமி, அதாவது இசைக்கு வந்த பேரழிவு போல இருக்கட்டுமே என அச்சமின்றி பட தலைப்பில் போடுமாறு இயக்குனர் ராஜபாண்டி சாரிடம் கேட்டேன்.

ஆனால் அவர், நீங்கள் நன்றாக தானே இசையமைக்கிறீர்கள் எனக் கூறி, இசை இளவல் என பட்டம் கொடுத்தார்.

அதன் பின்னர் எனது அண்ணன் யுவன், இசை சுனாமி என என்னை அழைத்தார். சரி அதுவே இருந்துவிட்டு போகட்டுமே என ஆர்.கே.நகர் டைட்டிலிலும் இசை சுனாமி என போட சொல்லிவிட்டேன். மற்றதை எல்லாம் நைட் கட்டிங் போட்டுட்டு பேசலாம்.” என்றார்.

Yuvan Sankar Raja gave Isai Tsunami title to Actor Premji

அதர்வாவின் பூமராங் படத்தை ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவலான விஷயம் என்ன? ஒரு நல்ல கருத்தை கதையாக்குவது, நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வருவது? வேறென்ன?

இயற்கையாகவே இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு திறமையான இயக்குனரிடம் இருப்பவை.

இவையெல்லாம் தாண்டி மிகவும் முக்கியமான ஒரு விஷயம், படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது.

இயக்குனர் கண்ணன் அந்த மாதிரி ஒரு அரிதான இயக்குனர் தான். தன்னுடைய கேரியரில் அதை தொடர்ந்து நிரூபித்து எடுத்துக்காட்டாக இருப்பவர். அத்தகைய பண்புகள் தான் அவருக்கு, அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, அவரின் தயாரிப்பில் உருவாகும் பூமராங் படத்திலும் கைகொடுத்திருக்கிறது.

பூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாக தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம்.

4 வெர்சன் திரைக்கதை இருந்தது, ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கும்” என்றார் இயக்குனர் கண்ணன்.

அதர்வாவை பாராட்டி பேசும் இயக்குனர் கூறும்போது, “முழு படமும் அதர்வாவை சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்த படத்துக்கு தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார்.

மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனை கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்கு பிறகு அதர்வாவுக்கு சிறந்த, சரியான தோற்றத்தை கொண்டு வந்தனர்.

ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் அந்தமான் தீவில் ஒரு சில பகுதிகளில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இயக்குனர் கண்ணன் தன் வழக்கப்படி, தனக்கு நெருக்கமான ஒரு தமிழ் தலைப்பை வைக்க தான் திட்டமிட்டிருந்தார். பின் பூமராங் என்ற தலைப்பு படத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இந்த தலைப்பை வைத்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் உபென் படேல் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும், அதர்வாவுக்கும் இடையில் நடக்கும் மோதல் காட்சிகள் மிக சிறப்பாக இருக்கும்.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 60 நாட்கள் கால அளவில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆர் ஜே பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பதோடு படத்தை இயக்கி வருகிறார் கண்ணன்.

Director Kannan and Atharvaa plans to release Boomerang on August 2018

More Articles
Follows