‘அஸ்வின் தாத்தா’ சிம்புவுக்கு நன்றி சொன்ன ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு, ஸ்ரேயா, தமன்னா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

யுவன் இசையமைக்கும் இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்கிறார்.

மதுரை மைக்கேல் என்ற முதல் கேரக்டரின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பாப்புலர் ஆனது.

இந்நிலையில் 2வது கேரக்டரில் 60 வயது முதியவராக நடித்திருக்கிறாராம் சிம்பு. இக்கேரக்டருக்கு அஸ்வின் தாத்தா என்று பெயரிட்டுள்ளனர்.

இதுபற்றி ஆதிக் ரவி தன் ட்விட்டரில் கூறியிள்ளதாவது…

“முதன்முறையாக இந்த 60 வயது கேரக்டரை சிம்பு தன் கேரியரில் செய்கிறார். இந்த கேரக்டருக்கான தன் உடல் எடையை அதிகம் ஏற்றியிருக்கிறார்.

இதற்காக அவர் பட்ட வலிகளை நான் அறிவேன். நன்றி அண்ணா” என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா நலம் பெற வேண்டி ரஜினி பிரார்த்தனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, அவர் நலம் பெற வேண்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முக ஸ்டாலின், விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

திரையுலக சேர்ந்த விஷால், லிங்குசாமி உள்ளிட்டவர்களும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ரஜினிகாந்த்தும், தமிழக முதல்வர் நலம் பெற வேண்டி, தான் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘பைரவா’ படத்தின் கதை உண்மைச் சம்பவம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் பைரவா.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தில் நட்சத்திர கீர்த்தி சுரேஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, அபர்ணா, பாப்ரிகோஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

அண்மை காலமாக விஜய் தன் படங்களில் பாடல்களை பாடி வருகிறார்.

எனவே, இப்படத்திலும் ஒரு பாடலை பாடவிருக்கிறாராம்.

விரைவில் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதையானது கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம் எப்போது? என்ன கதை?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருந்தார்.

இந்த இரண்டும் படங்களும் இவரின் இயக்கத்திற்காக பேசப்பட்டது.

எனவே இவரது அடுத்த படம் என்ன? என்ற ஆர்வம் ரசிகர்களிடையே எழுந்தது.

இவரது அடுத்த படம் பெண்களை போற்றும் வகையில் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

தற்போது பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருவதால், இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கும் என கூறப்படுகிறது.

முதல் இரண்டு படங்களை போல், இதில் தனுஷ் நடிப்பாரா? என்பது குறித்த தகவல்கள் தற்போது இல்லை.

அரவிந்த்சாமியுடன் த்ரிஷா; ‘சதுரங்கவேட்டை-2’ வில் கூடுதல் ட்விட்ஸ்டுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் மனோபாலா தயாரிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல லாபத்தை கொடுத்தது.

எனவே, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவிருக்கிறார் இவர்.

முதல் பாகத்தில் கிராமம் சார்ந்த ஏமாற்று வேலைகளை காட்டியிருந்தனர்.

தற்போது உருவாகவுள்ள இரண்டாம் பாகத்தில் தகவல் தொழில்நுட்ப மற்றும் அதனைச் சார்ந்த பல ஏமாற்று வேலைகளை காட்டப்போகிறார்களாம்.

இப்படத்திற்கு வினோத், கதை வசனம் எழுத, சலீம் பட இயக்குனர் நிர்மல் இயக்கவிருக்கிறார்.

இதில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்க, நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘பாக்யராஜ் இல்லன்னா அய்யனார் வீதி இல்லை’ – ஜிப்ஸி ராஜ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிப்ஸி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அய்யனார் வீதி.

சாட்டை யுவன் நாயகனாகவும், ஷாரா ரெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

கே.பாக்யராஜ் மற்றும் பொன்வண்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சிங்கம்புலி, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை உள்ளிட்டோரும் உண்டு.

யு.கே.முரளி இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீசாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல் தயாரித்திருக்கிறார்.

இப்படம் குறித்து ஜிப்ஸி ராஜ்குமார் கூறியதாவது…

“நான் ஒரு பத்திரிகையாளன். ஜிப்ஸி தியேட்டர் என்ற பெயரில் தெரு நாடகங்கள் நடத்தி வருகிறேன். அந்த அனுபவத்தில் சினிமா இயக்க வந்திருக்கிறேன்.

இப்படத்தை என் சொந்த ஊரான ராஜபாளையத்தில் இயக்கியிருக்கிறேன்.

ஒரு ஐய்யர், அய்யனாராவதுதான் இப்படத்தின் ஒன்லைன்.

கே.பாக்யராஜை படமாக்கியது என் பாக்கியம். அவர் ஸ்கிரிப்ட், வசனத்தில் நிறைய உதவிகளை செய்தார்.

அவர் இல்லாவிட்டால் இந்த அய்யானர் வீதி இல்லை” என்றார் ஜிப்ஸி ராஜ்குமார்.

More Articles
Follows