தம்பி ராமையா மகனுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குணசித்திரம், காமெடி, இயக்கம் என பன்முகம் கொண்டவர் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா.

இவரது மகன் உமாபதி நடிக்கும் படத்துக்கு ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இன்பசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைக்க, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தின் ட்ரைலரை நாளை ஜீன் 8ஆம் தேதி, மாலை 3.30 மணிக்கு சிவகார்த்திகேயன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட விருக்கிறாராம்.

இப்படத்தின் இசையும் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தை ஜீன் 16-ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்களாம்.

Adhagappattathu Magajanangalay trailer to be revealed by Sivakarthikeyan

 

‘சங்கமித்ரா’வில் நயன்தாரா.? மீண்டும் ஆர்யா-ஜெயம் ரவியுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி அவர்கள் மிக பிரம்மாண்டமாக இயக்கவிருக்கும் சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கவிருந்தனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதனிடையில் ஸ்ருதிஹாசன் திடீரென இப்படத்திலிருந்து விலகினார்.

எனவே இப்படத்தில் நடிக்க முன்னணி நாயகியை தேடி வந்தனர்.

தற்போது இந்த கேரக்டரில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை நயன்தாரா ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் இவர் ஆர்யா மற்றும் ஜெயம்ரவியுடன் மீண்டும் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara likely to Join with SundarC for Sangamithra

விஜய்சேதுபதியை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்தை ஏஆர் முருகதாஸ் தயாரிக்க, திருக்குமரன் இயக்கியிருந்தார்.

இப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதனையடுத்து உதயநிதி நடித்த கெத்து படத்தை இயக்கினார்.

இந்நிலையில் 3வதாக ஒரு கதையை எழுதிவிட்டாராம் திருக்குமரன்.

இதனை தன் குருநாதர் ஏஆர் முருகதாஸிடம் காண்பிக்க, அவரோ இதில் விஜய்சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்றாராம்.

எனவே விரைவில் விஜய்சேதுபதியை சந்தித்து கதை சொல்லவிருக்கிறாராம் இந்த மான்கராத்தே இயக்குனர்.

Maan Karate director will teams up with Vijay Sethupathi soon

ரஜினிக்காக கதை எழுதும் அதிரடி இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடித்த சிங்கம் புலி மற்றும் லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களை இயக்கியவர் சாய் ரமணி.

இதன் மூலம் அதிரடியான கமர்ஷியல் படங்களை இவர் இயக்குவதில் வல்லவன் என பெயரெடுத்து இருக்கிறார்.

இந்நிலையில் தன் சமீபத்திய பேட்டியில் சாய்ரமணி கூறியதாவது…

ரஜினி சாரின் நான் தீவிர ரசிகன். ரசிகர் மன்றத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக இருக்கிறேன்.

அவரை இயக்குவது பலருக்கு விருப்பமாக இருக்கலாம். எனக்கு அது கனவு.

ரஜினி சாரின் ரசிகன் லாரன்ஸை இயக்கிவிட்டேன். இனி ரஜினியை இயக்க வேண்டும் என அவரிடம் ஒரு முறை தெரிவித்து இருக்கிறேன்.

இப்பொழுது, அவருக்காக கதையை எழுதி வருகிறேன். காலா படத்தின் ஓய்வின் போது அவரை சந்தித்து நிச்சயம் கதை சொல்வேன்.” என தெரிவித்துள்ளார்.

MSKS Director sai ramani writing story for Rajinikanth

தமிழ் சினிமாவில் கபாலிக்கு அடுத்த இடத்தில் விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உருவாக காரணம் இதன் டீசர் என்பது நாம் அறிந்ததே.

இதன் டீசர் மே 11ஆம் தேதி நள்ளிரவில் வெளியாகி தென்னிந்தியளவில் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது யூடிப்பில் 40 லட்சம் லைக்ஸை பெற்று, சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்பு ரஜினியின் கபாலி டீசர் மட்டும்தான் தமிழ் சினிமாவில் 40 லட்சம் லைக்ஸை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Vivegam teaser reached 400K likes in YouTube after Kabali Teaser

‘நடிகராக நடந்து கொள்ளவில்லை சிம்பு ’ – லட்சுமி ராமகிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தன் மனதில் பட்டதை ஓபனாக பேசக்கூடியவர்.

இவர் அண்மையில் சிம்பு, தமன்னா இணைந்துள்ள AAA படத்தின் போஸ்டரை பற்றி தன் விமர்சனங்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சிம்பு போன் செய்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சிம்பு எனக்கு போன் செய்திருந்தார்.

எங்களுடைய கருத்தை பரிமாறிக் கொண்டோம். அதோடு பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் கொடுக்குமாறு அவரிடம் நான் வேண்டுகோள் வைத்தேன்.

ஒரு நடிகராக அவர் தன்னை காட்டிக் கொள்ளாமல் பேசியிருந்தார்” என்றும் ட்டீட் செய்துள்ளார்.

@iam_str just called me, #straightforwardness, shared each other’s views, requested him, 2 lend support in the war against disrespect4women

Sometimes we just need 2 stand up to get across our point, appreciate @iam_str for picking up the phone & talking 2 me & not playing ‘STAR’

— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) June 6, 2017

Simbu talks to me not as Star says Lakshmi Ramakrishnan

More Articles
Follows