சீமானை உள்ளே போடும் வரை ஓயமாட்டேன்; நடிகை விஜயலட்சுமி புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவருகிறார்.

இது குறித்து சீமான் எதையும் சொல்லவில்லை.

ஆனால் சீமான் தொண்டர்கள் விஜயலட்சுமிக்கு பதிலடி கொடுக்க அவரும் பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக விஜயலட்சுமி நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், சீமானையும், அவரது தொண்டர்களையும் சகட்டுமேனிக்கு திட்டி உள்ளார்.

’’நான் நொந்து போயிருக்கேன். சீமானை தப்பிக்க விடமாட்டேன். கமிஷனர் அலுவலத்தில் சாகும்வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கப்போறேன்.

சீமானை தூக்கி உள்ளே போடும் வரைக்கும் போராடுவேன்’’என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

மேலும் சீமான் கட்சியினர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

தியேட்டர்களை இழுத்து மூட சினிமா அமைப்பு பிரதிநிதிகள் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சைனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி மெதுவாக கொரோனா வைரஸ் இந்தியாவை நெருங்கியுள்ளது.

இன்றைய நிலவரப்படி, இந்திய மாநிலங்களில் மொத்தம் 45 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஹரியானா 14 பேர், உத்தரப்பிரதேசம் 9, கேரளா 6 பேரை கொரோனா தாக்கியுள்ளது.

பாலிடிக்ஸ் ஒரு பக்கம்.; கொரோனா மறுபக்கம்.. மாஸ்டர் இசை விழாவில் மாற்றம்.!

கேரளாவில் மார்ச்சில் நடைபெறவிருந்த 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளா மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகளை மார்ச் 31 ஆம் தேதி வரை இழுத்து மூட முடிவெடுத்து உள்ளனர்.

பல்வேறு சினிமா அமைப்புகளின் பிரதிநிதிகள், கொச்சியில் இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

BREAKING ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் நடிகர் ரஜினி கலந்து கொண்டு பேசினார்.

1971ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணியில் ராமர், சீதை படங்களை நிர்வாணமாக ஊர்வலமாக கொண்டு வந்ததாக சர்ச்சைக்குரிய வகையில் ரஜினி பேசியிருந்தார்.

இந்த பேச்சுக்கு ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும், பல்வேறு தரப்பில் கருத்துகள் வெளியானது.

ரஜினியின் இந்த பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சையை ஏற்படுத்தும் விதமாகவும் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார்…

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.

புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி வழக்கு…

பொய்யான தகவல் கூறி சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக பேசிய ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறை ஆணையர் மற்றும் திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை…

இரண்டாவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோசலின் துரை முன்பு மனு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி ரோசலின் துரை.

திரையுலகில் ‘பாதுகாப்பு குழு’ அமைக்க கமல் & ஷங்கர் தலைமையில் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா கமல் ஷங்கர் ஆகியோரது கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன்2’.

இதன் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

இதனால் படப்பிடிப்பு தளங்களில் உள்ள பாதுகாப்பு விவாதப் பொருளாக திரையுலகில் மாறியது.

ஸ்டாலினுக்கு கமல் சொன்ன பிறந்தநாள் வாழ்த்திலும் உள்குத்து..?

திரைப்பட பணியாளர்களின் பாதுகாப்பை தயாரிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுந்தது.

இந்த நிலையில் இது குறித்த ஆலோசனைக் கூட்டம் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் முடிவில் சினிமா ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு குழு ஒன்றை அமைக்கவும், திரைத்துறை சங்கங்கள் அனைத்தும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

தலைவர் கேப்டன் தல தளபதி பற்றி விவேக்கின் நச்சுன்னு 4 வார்த்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விவேக் தன் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவரிடம் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், அஜித் குறித்து கேட்கப்பட்டது.

‘கேப்டனிடம் உங்களுக்கு எந்த பண்பும் பிடிக்காதா?’ எனக் கேட்டார்.

அதற்கு “விஜயகாந்த் ஒரு வாழும் வள்ளல். மனதில் பட்டதை பேசும் குழந்தை.

அப்துல் கலாம் இறந்த பின்னர் அவரது உடலை பார்த்து கண்ணீர் சிந்திய மாமனிதர்.

அடுத்த கேள்வியில் ரஜினி, விஜய், அஜித் பற்றி பதிலளித்தார்.

‘யார் பற்றியும் அவதூறு பேசாத ரஜினி..

எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க சொல்லும் (ignore negativity) விஜய்…

வாழு, வாழ விடு என வாழும் அஜித்’

என மூவர் பற்றி தெரிவித்துள்ளார்.

மீண்டும் விஜய் பட புரொடியூசரிடம் ஐடி ரெய்டு.; மாஸ்டருக்கு மட்டும் ஏன் இப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் மாஸ்டர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவர்களுடன் சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கி‌‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்பட சூட்டிங் நெய்வேலியில் நடந்த போதே விஜய்யை சென்னைக்கு அழைத்து கொண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது நடிகர் விஜய் & பிகில் பட தயாரிப்பாளர் & பைனான்சியர் அன்பு செழியன் வீடுகளில் சோதனை செய்தனர்

இந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரமாக துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

More Articles
Follows