அதெல்லாம் காட்ட முடியாது.. ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் வருமானமின்றி மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மக்களை உற்சாகப்படுத்தவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவேற்றி வருகின்றனர்.

ஒரு சில பிரபலங்கள் ரசிகர்களுடன் லைவ் சாட்டிங் செய்கின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னி ராஷ்மிகா ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது ஒருவர், “வீடியோ மூலம் உங்க வீட்டை சுற்றிக் காட்டுங்கள் ப்ளீஸ்”, என கேட்டுக் கொண்டார்.

ஆனால் ராஷ்மிகாவோ முடியாது என மறுத்துவிட்டார். “வீடு என்பது எனது தனிப்பட்ட இடம். எனவே காட்ட முடியாது” என மறுத்துவிட்டார்.

Actress Rashmika Mandannas recent chat with her fans

படையப்பாவுக்கு அமேசானில் தடையப்பா..; ரஜினிகாந்த் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்த படம் ‘படையப்பா’.

இந்த படத்தை தன் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ரஜினி தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

1999ல் வெளியான இந்த படம் ரஜினி கேரியரில் மிகப்பெரிய வெற்றியை தந்தது.

அண்மையில் படையப்பா படத்தை அமேசான் பிரைம் நிறுவனம் அதன் ஓடிடி தளத்தில் அப்லோட் செய்திருந்தது.
இதன் உரிமையை யாரோ ஒரு நபர் அமேசானுக்கு விற்றுள்ளார்.

படத்தயாரிப்பாளர் ரஜினிகாந்த் தரப்பில் இதன் உரிமை குறித்து கேள்வி கேட்கவே ‘படையப்பா’ படத்தை உடனடியாக அதன் தளத்திலிருந்து நீக்கிவிட்டது அமேசான் நிறுவனம்.

Here is reason Why Padaiyappa removed form Amazon Prime

உங்க பேச்சு புரிய மாட்டேங்குதே; விஜய்சேதுபதி கேள்விக்கு கமல் அதிரடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே 2ஆம் தேதி தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசினார் கமல்.

இவரை நடிகர் விஜய்சேதுபதி கேள்வி கேட்டார்.

அப்போது… உங்களின் பேச்சு இன்னும் கொஞ்சம் எளிமையாக இருக்கலாமே, இதை வேண்டுகோளாகத்தான் வைக்கிறேன் என கேட்டார் விஜய்சேதுபதி.

இதற்கு எவருமே எதிர்பாராத வகையில் கமல் அதிரடியாக ஒரு பதிலை தந்தார்.

ஔவையார், பாரதியார், பாரதிதாசன் போன்ற பலரும் மக்களுக்கு புரியனும் என பதறிக் கொண்டிருந்தார்கள் என்றால் வெறும் சினிமா பாடல் மட்டுமே எழுதியிருப்பார்கள்.

பாரதியாரிடம் காற்று வெளியிடை கண்ணம்மா பாடலுக்கு அர்த்தம் கேட்டிருந்தால் பாரதியே கிடையாது. டர்பன் கழண்டுவிட்டது என்று அர்த்தம்.

நான் இப்படித்தான். தமிழர்கள் புரிந்து கொள்வார்கள், உங்களுக்குப் புரிந்தது என்று நினைக்கிறேன். புரியவில்லை என்றால் தெலுங்கில் சொல்லிவிட்டுப் போகிறேன் என்றார் கமல்ஹாசன்.

மக்கள் நீதி மய்யம் – பெயர்க் காரணம் என்ன என்று கேட்டார் விஜய்சேதுபதி.

மய்யம் எனும் சொல் என்னை மையம் கொண்ட சொல். புயலின் மையம் அமைதியான இடம் அது. புயலின் கண் என கூறுவார்கள் அங்கு புயலே இருக்காது.

எனக்கு அந்த வார்த்தை பிடித்த ஒன்று. ஆங்கிலத்தில் பார்த்தால் சென்டர் என கூறுவர். மக்கள் என்பது பரந்த சொல் உலகமே அது தான். கம்யூனிசம் என கூறும் போது கம்யூன் எனில் யாராக வேண்டுமானால் இருக்கலாம்.

மக்கள் கேட்டு வருவது நீதி ஒன்று தான் அதற்கு போராடும் ஒரு கட்சியாக இருக்க வேண்டும். என கமல் தெரிவித்தார்.

Kamal clarifies Maiam Party name and his tweets

‘மருதநாயகம்’ கதையை மாத்தனும் இல்லனா நடிகனை மாத்தனும்.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எந்தவொரு சினிமா கலைஞனுக்கும் கனவுப் படம் அல்லது கேரக்டர் ஒன்றிருக்கும்.

சகலகலா வல்லவன் கமலின் கனவுப் படம் மருதநாயகம் என்பது நம் அனைவருக்கும் அறிந்த ஒன்றுதான்.

‘மருதநாயகம்’ படப்பிடிப்பின் துவக்க விழாவையை இங்கிலாந்து ராணி எலிசபத் அவர்கள் கடந்த 19976ல் ஆரம்பித்து வைத்தார்.

ஆனால் நிதி நெருக்கடியால் அந்த படத்தை கமல் அப்படியே விட்டுவிட்டார்.

அதன்பின்னர் பல வித்தியாசமான வேடங்களில் நடித்தாலும் மருதநாயகம் படத்தை தொடவில்லை.

அவரின் கனவும் படம் ‘மருதநாயகம்’ அவரின் கனவாக மட்டுமே இருந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு கூட இனி மருதநாயகம் டத்தில் நான் நடிக்க முடியாது, வேறு யாராவது நடிப்பார் என்றார்.

இந்த நிலையில் தான் இன்று இன்ஸ்டாகிராமில் விஜய்சேதுபதி உடன் கலந்துரையாடினார் கமல். அப்போது மருதநாயகம் குறித்த கேள்வியை விஜய் சேதுபதி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், மருதநாயகத்தை புத்தகமாக வெளியிட வேண்டும் என்றால் உடனே வெளியிட்டு விடலாம். ஆனால் படம் பண்ண, பணம் வேண்டும்.

நான் உருவாக்க நினைத்த மருதநாயகத்திற்கு 40 வயது தான். இப்போது அந்த கேரக்டரி என்னால் நடிக்க முடியாது. வேறு ஒரு நடிகரை அதில் நடிக்க வைக்க வேண்டும், இல்லையேல் கதையையே மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

எவர் நடித்தாலும் மருதநாயகம் என்றால் கமல் முகம் தானே நினைவுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

Kamal says Marudhanayagam need young actor or Story to be Changed

கொரோனா போராட்டம்: SPB & லதா மங்கேஷ்கருடன் இணையும் 100 பாடகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் பல கோடி தொகையை மத்திய மாநில அரசுகள் செலவழித்து வருகின்றன.

உலக வங்கியில் இதற்காக பெரும் தொகை கேட்கப்பட்டுள்ளது.

மேலும் மக்களிடமும் நிவாரண நிதியளிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய பாடகர்கள் சங்க சார்பில் 100 பாடகர்கள் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக தங்கள் குரலை உயர்த்தியுள்ளனர்.

லதா மங்கேஷ்கர் தலைமையில் ஆஷா போஸ்லே, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், அனுப் ஜலோட்டா, அல்கா யாக்னிக், கைலாஷ் கெர், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குமார் சான, மகாலட்சுமி அய்யர், மனோ, பங்கஜ் உதாஸ், ஷான், சோனு நிகம், தலாத் அஜிஸ், உதித் நாராயணன், ஜஸ்பிர் ஜாசி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து லதா மங்கேஷ்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

“கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக நாம் அனைவரும் ஒரே தேசமாக ஒன்றுபட்டு போராடுகிறோம்.

நாங்கள் 100 பேர் இந்திய பாடகர்கள் சங்கத்தின் சார்பில் நாட்டின் மீதான எங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்காக, ஒரே குரலாக இந்த பாடலை அர்ப்பணிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த பாடலை லதா மங்கேஷ்கர் வெளியிடுகிறார்.

இந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானம் பிரதமர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை இந்திய பாடகர்கள் உரிமை சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது.

One Nation One Voice 100 singers unite for Covid Awareness

சேர்ந்தே மீள்வோம்… ஏஆர் ரஹ்மான் & ப்ரசூன் & HDFC BANK கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல இந்தி பாடலாசிரியர் ப்ரசூன் ஜோஷியுடன் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு இந்திப் பாடலை உருவாக்கியுள்ளனர்.

“சேர்ந்தே மீள்வோம்…” என்று இந்த பாடல் தொடங்குகிறது.

இந்த பாடலுக்கு இசையமைத்து பாடி இருக்கிறார் ரஹ்மமான்.

இவருடன் ஸ்ருதிஹாசன், சித் ஸ்ரீராம், நீதி மோகன், ஜாவே அலி, சாஷா திருபாதி, கதீஜா ரஹ்மான், அபய் ஜோத்புர்கர் உள்ளிட்ட பலரும் பாடி உள்ளனர்.

இந்த புது முயற்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:

ஒரு நல்ல காரியத்துக்காக இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். இந்த தேசமும் ஒன்று சேர்வதற்கான உந்துதலைக் கொடுக்கும் என்று நம்புகிறோம் என ரஹ்மான் கூறியுள்ளார்.

இந்தப் பாடலை எச்.டி.எப்.சி வங்கி தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த பாடலை ஷேர் செய்தால் ஒரு ஷேருக்கு 500 ரூபாய் வீதம் பிரதமரின் கொரோனா நிதிக்கு சேர எச்.டி.எப்.சி ஏற்பாடு செய்துள்ளது.

HDFC Bank AR Rahman and Prasoon Joshi collaborate for Song of hope

More Articles
Follows