ஆண்களின் ஈகோவும் தரமணியின் தரமும்… ஆச்சரியத்தில் ஆண்ட்ரியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராம் இயக்கத்தில் ஜேஎஸ்கே தயாரிப்பில் நேற்று வெளியான படம் தரமணி.

இப்படத்தில் ஆண்ட்ரியாவின் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது….

‘இந்த படத்திற்கு மனதளவில் நிறைய உழைப்பு தேவைப்பட்டது. அப்படியொரு தைரியமான கேரக்டர்.

என் கேரக்டருக்கு இவ்வளவு பாராட்டு கிடைக்கும் என நான் நினைக்கவில்லை.

என் பாடி லாங்குவேஜ் (உடல் மொழி) ஐ யதார்த்த நடிப்பையும் வெளிப்படுத்த டைரக்டர் ராம் முழு சுதந்திரம் கொடுத்தார்.

ஆண்களை சார்ந்து வாழும் காலம் தற்போது மாறிவருகிறது.

தங்களின் தேவையை பெண்களே பார்த்துக் கொள்கிறார்கள்.

ஆண்களுக்கு எல்லாவிதத்திலும் சமமானவர்கள் பெண்கள் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

எனவே ஆண்களின் ஈகோ பாதிக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டேன்; கூப்பிடாதீங்க.. மனம் திறந்த மலர் டீச்சர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சில நடிகர், நடிகைகளுக்கு மட்டும்தான் முதல் படமே எதிர்பாராத வெற்றியையும் பாராட்டையும் பெற்றுத்தரும்.

அந்த வரிசையில் சாய்பல்லவிக்கு அமைந்த படம்தான் மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் பெரும் ஹிட்டடித்த பிரேமம்.

இதனையடுத்து இவர் தெலுங்கில் பானுமதி கேரக்டரில் அறிமுகமான ஃபிடா படமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மலையாள சினிமாவுக்கு இவர் மலர் டீச்சர் என்றால், தெலுங்கு சினிமாவுக்கு இவர் பானுமதியாகிவிட்டார்.

இவர் தற்போது நானியுடன் எம்சிஏ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஷாப்பிங் மால், நகைக்கடை திறப்பு விழா உள்ளிட்ட பல விழாவுக்கு இவரை அழைக்கத் தொடங்கியிருக்கிறார்களாம்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாது…

’கடை திறப்பு விழா போன்ற விழாக்களில் கலந்துகொள்ள விருப்பமில்லை.

அதற்காக என்னை யாரும் அழைக்க வேண்டாம். அனுகவும் வேண்டாம்.

தொண்டு நிறுவனங்கள் திறப்பு விழாக்கள் என்றால் இலவசமாகவே கலந்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

பிக்பாஸால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில்லை; கமல் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தடைகோரும் வழக்கில் கமல் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்…
பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை.

இந்த வழக்கில் தமிழக அரசை சேர்த்தது தவறு, மத்திய அரசு அல்லது கண்காணிப்பு குழு மட்டுமே ஆராய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மத்திய அரசு பதிலளிக்க ஒருவாரம் அவகாசம் வழங்கிய உயர்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தனுஷ்-சௌந்தர்யா ரஜினியை வாழ்த்திய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் சினிமாவை தாண்டியும் நட்புடன் பழகி வருகின்றனர்.

இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டாலும் தங்கள் நட்பை தொடர்ந்தே வருகின்றனர்.

இதை நிரூபிக்கும் வகையில் தனுஷ் தயாரித்து கதை வசனம் எழுதி நடித்துள்ள விஐபி2 படத்தின் ரிலீசை முன்னிட்டு அவருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மேலும் பட இயக்குனர் சௌந்தர்யா ரஜினிக்கும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
Best wishes to @dhanushkraja sir @soundaryaarajni @RSeanRoldan & full team on #VIP2 release

ஓவியாவின் காதலுக்கு ஓகே சொன்ன ஆரவ் அம்மா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் புகழ் உச்சிக்கே சென்றுவிட்டார் நடிகை ஓவியா.

இதனால் பல புதிய ரசிகர்களை அவர் பெற்றுள்ளார்.

நிகழ்ச்சியின் போது ஆரவ்வை காதலித்தார்.
ஆனால் அவர் மறுக்கவே, விரக்தியுடன் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்து வெளியேறினார்.

அதன்பின்னர் ரசிகர்கள் முன்னிலையில் கமலை சந்தித்து பேசினார்.

அப்போதும் ஆரவ்வை காதலிப்பதாகவும், அவருக்காக காத்திருப்பதாகவும் சொன்னார்.

இதுகுறித்து நடிகர் ஆரவ் அவர்களின் அம்மா கூறும்போது… ஆரவ் சம்மதித்தால் ஓவியாவை மருமகளாக ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

விஜய் பட விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அட்லி-விஜய்-ஏஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிள்ள மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும்‌ ரஜினிகாந்த் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ராமநாராயணன் தொடங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படம் மெர்சல் என்பதால் இருவரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ரஜினி, கமல், விஜய் ஆகிய மூவரும் அரசை விமர்சித்து பேசி வருகின்றனர்.

எனவே இவர்கள் மூவரும் ஒரே மேடையில் தோன்றினால் நிச்சயம் அரசியல் அனல் பறக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

More Articles
Follows