கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் உறவினரும் நடிகருமான விக்ரம், தற்போது வெளியூரில் இருப்பதால், கருணாநிதியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.

இதையடுத்து அவர் கடிதம் மூலம் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…

“தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர்.கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடி கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Actor Vikram condolence statement for Kalaignar Karunanidhi

கலைஞரின் மறைவு முற்றுப்புள்ளி அல்ல; தலை வணங்கி கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மறைவையொட்டி பல்வேறு பிரபலங்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாவது..

“கருணாநிதியின் மறைவு வரலாற்றின் முற்றுப்புள்ளி அல்ல, ஒரு கமா தான். உணர்வும், இந்த சூழலும் குரலை உயர்த்த முடியாத நிலைக்கு என்னை ஆளாக்கியுள்ளது.

எனக்கும், கருணாநிதிக்கும் இடையேயான உறவு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.

நாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கு இருக்கிறது.

அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்றார் கமல்ஹாசன்.

Kamalhassans condolence message for Late Kalaignar Karunanidhi

கலைஞர் மரணம்: ரஜினி மகள்கள் இரங்கல்; கண்டுக்கொள்ளாத கமல் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் மற்றும் இந்திய அரசியலின் மூத்த தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று ஆகஸ்ட் 7 மாலை காலமானார்.

அவருக்கு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை இரங்கலை தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகம், புதுவை, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் தலைவரை இழந்துவிட்ட சோகத்தில் தமிழகமே மூழ்கியுள்ளது.

இந்நிலையில் கருணாநிதிக்கு நெருக்கமான ரஜினி மற்றும் கமல் மகள்கள் தங்கள் ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அவர்கள் தாத்தா கலைஞருக்கு இரங்கல் என தெரிவித்துள்ளார்.

கமலின் மகள் ஸ்ருதிஹாசன் யாருடனோ எடுத்துக் கொண்ட போட்டோவை பகிர்ந்து உங்களுடன் இருந்த நேரம் ஜாலியாக இருந்துள்ளது என இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் என்ன நடக்குது? உனக்கு தெரியாதா? நீ இரங்கல் தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் இந்த சமயத்தில் நீ இப்படி பதிவிட்டு இருக்கிறாயே என திட்டி வருகின்றனர்.

ஆனால் இதை எதையும் ஸ்ருதிஹாசன் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. அந்த பதிவு இன்னும் டெலிட் ஆகவில்லை.

ஒரு சில ரசிகர்கள் இது அவரவர் விருப்பம் என தெரிவிக்கின்றனர்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நேரிடையாக சென்று கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

soundarya rajnikanth‏Verified account @soundaryaarajni
#RIP Kalaignar Thatha #EndOfAnEra

shruti haasan‏Verified account @shrutihaasan
So much fun working with these two !!!! @danlancaster @mikeduce https://www.instagram.com/p/BmL-WMwHUWI/?utm_source=ig_twitter_share&igshid=vcgacjqs9qt3 …

Rajini and Kamal daughters reaction to Kalaignar Karunanidhis death

கலைஞர் கருணாநிதி மரணத்திற்கு தனுஷ்-சிவகார்த்திகேயன் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் நேற்று ஆகஸ்ட் 7 அன்று மாலை மரணமடைந்தார்.

அவருக்கு இந்திய ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர்கள் சிவகுமார், ரஜினிகாந்த், விஷால், அஜித் உள்ளிட்டோர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இளம் நடிகர்களில் முன்னணி நடிகர்களான தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் தங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் இரங்கல் பதிவு இதோ…

Dhanush‏Verified account @dhanushkraja
வஞ்சிக்கப்பட்ட தமிழனை,சுயமரியாதை சூரியனால் சுட்டெரித்து புடம் போட்ட தங்கமாக மாற்றிய கலைச்சூரியனே! பராசக்தி மூலமாக அரசியல் அறியவைத்து , எங்களைப்போன்ற பாமர்களுக்கும் திரைத்துறையின் கதவை எட்டி உதைத்து திறந்து வைத்த கலைஞரே! உங்களை கண்ணீரோடு வழியனுப்பி வணங்குகின்றோம்!

Sivakarthikeyan‏Verified account @Siva_Kartikeyan
ஓய்வில்லாமல் உழைத்த சூரியன் உறங்கப் போகிறது.. ஐயா உங்கள் கதிர்வீச்சுகள் தமிழும், கலையும், இலக்கியமும், அரசியலும் இருக்கும் வரை பிரகாசித்துக்கொண்டே இருக்கும்#RIPKalaignarAyya

Dhanush and Sivakarthikeyan condolence message for death Kalaignar Karunanidhi

நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர் கருணாநிதி; நடிகர் அஜித் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் நேற்று ஆகஸ்ட் 7 மாலை 6.10 மணிக்கு காலமானார்.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்கள், நடிகர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் அஜித் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.

அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு, திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அஜித் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Actor Ajith condoles death of DMK President Karunanidhi

என் கலைஞர் மரணம் கருப்பு நாள்; மாமனிதருக்கு மரியாதை தர ரஜினி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் அவர்கள் இன்று ஆகஸ்ட் 7ல் மாலை சரியாக 6.10 மணிக்கு மரணமடைந்தார்.

மாபெரும் தலைவரை இழந்துள்ள தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

அவருக்கு அஞ்சலி செலுத்த பாரத பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக ரஜினிகாந்த் தனது இரங்கலை தன் ட்விட்டர் பக்கத்தில் இரண்டு பதிவுகளாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவுகள் இதோ…

Rajinikanth‏Verified account @rajinikanth
என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்

Rajinikanth‏Verified account @rajinikanth
மதிப்பிற்குரிய அமரர் கலைஞர் அவர்களுக்கு, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய, தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அது தான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை

Rajinis condolence to DMK Chief Karunanidhi death

More Articles
Follows