மாஸ்டராக இருந்த போதும் இப்போதும்..; ‘மாஸ்டர்’ விஜய்யுடன் உதய்ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் விஜய்பேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ஏற்கெனவே நட்சத்திர பட்டாளமே நடித்தள்ள நிலையில் நடிகர் உதய்ராஜ் என்பவரும் இதில் நடித்துள்ளார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது விஜய்யுடன் ‘திருமலை’ படத்தில் மெக்கானிக்காக நடித்துள்ளார்.

மாஸ்டராக தன் சினிமா கேரியரை தொடங்கிய இவர் தற்போது மாஸ்டர் விஜய்யுடன் நடித்துள்ளதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், ”தளபதி விஜய் அண்ணாவுடன் இணைந்து 17 வருடங்களுக்கு பிறகு மாஸ்டர் படத்தில் நடித்துள்ளேன். அப்போ திருமலை, இப்போ மாஸ்டர். லோகேஷ் கனகராஜிற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

5 கோடி நிவாரணம் ரெடி.. ஆனா இப்போ கொடுக்க மாட்டோம் : விஜயகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர்.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் தினம் வருமானத்தை நம்பியிருப்பவர்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

தற்போது நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸால்‌ வரலாறு காணாத நிகழ்வு உலகம்‌ முழுவதும்‌ நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம்‌ உள்பட நாடு முழுவதும்‌ ஊரடங்கு உத்தரவு மே மாதம்‌ 3ம்‌ தேதி வரை நீட்டுக்கப்பட்டுள்ளது.

இதனால்‌ பொருளாதாரத்தில்‌ சிக்கியிருக்கும்‌ மக்கள்‌, வறுமை கோட்டிற்கு கீழ்‌ உள்ள ஏழை எளிய மக்கள்‌ பெரிதும்‌ பாதிக்கப்பட்டுள்ளனர்‌. ஏற்கனவே ஆண்டாள்‌ அழகர்‌ பொறியியல்‌ கல்லூரியும்‌, தேமுதிக தலைமை கழகமும்‌ கொரோனா பயன்பாட்டிற்கு தமிழக அரசிடம்‌ ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பல மாவட்டங்களில்‌ மக்களுக்கான மக்கள்‌ பணி தொடங்கப்பட்டிருக்கும்‌ வேளையில்‌, ஊரடங்கு உத்தரவு மேலும்‌ நீட்டிக்கப்பட்டுள்ளதால்‌ மக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே, கொரோனாவால்‌ பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில்‌ 5 கோடி ரூபாய்‌ மதிப்பிலான நிவாரணப்‌ பொருட்கள்‌ மே 3ம்‌ தேதிக்கு பிறகு வழங்கப்படும்‌.

ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ ஊரடங்கு, சமூக இடைவேளி, இவையெல்லாம்‌ நீங்கிய பிறகு தேமுதிக சார்பில்‌ மாவட்ட வாரியாக, நகரம்‌, ஒன்றியம்‌, பேரூர்‌ கழகம்‌, ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள்‌, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும்‌. உண்ண உணவு, இருக்க இருப்பிடம்‌, உடுத்த உடை, மருத்துவம்‌, வேலை வாய்ப்பு மற்றும்‌ பொருளாதாரத்தில்‌ சிக்கி உள்ளவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம்‌ தாயராக இருப்போம்‌.

கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம்‌ தேதிக்கு பின்னர்‌ கழக நிர்வாகிகள்‌ ஒவ்வொரும்‌ மக்களுக்கு நிவாரணப்‌ பொருட்களை வழங்க தயாராக இருங்கள்‌ என கேட்டு கொள்கிறேன்‌.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

அட்லியின் அந்தகாரத்தில் ‘மாஸ்டர்’ டச்… விஜய் ரசிகர்கள் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யின் ஹிட் படங்களை இயக்கிய அட்லி தற்போது படத்தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.

இவர் தயாரித்துள்ள படத்திற்கு ‘அந்தகாரம்’ (DARKNESS) என்று தலைப்பிட்டு அதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

இதில் ’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார்.

இவருடன் பூஜா ராமச்சந்திரன், குமார் நடராஜன், மீஷா கோஷல், ஜீவா ரவி, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விக்ன ராஜன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரதீப் இசையமைத்துள்ளார்.

இப்பட டிரைலரில் ஒரு மனோதத்துவ நிபுணர் தன் முன்னால் இருப்பவரிடம் ‘புலி கூண்டிற்குள் நீ இருந்தால் அந்த புலிக்கு நீ எப்படி தெரிவாய்? என்று கேட்கிறார்.

அந்த நபர், ’அந்த கூண்டுக்குள் நீங்கள் இருந்தால் அந்த புலிக்கு நீங்கள் எப்படி தெரிவீர்கள்? என்று கேட்க அதற்கு அந்த மனோதத்துவ நிபுணர் ‘மாஸ்டர்’ என்று பதில் கூறுகிறார்.

அந்த டாக்டர் ஏன் ‘மாஸ்டர்’ என்று கூறினார் தெரியாது.

ஆனால் மாஸ்டர் என்ற வார்த்தை விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாலும் விஜய்யின் ராசியான டைரக்டர் தயாரித்துள்ள படம் என்பதாலும் இந்த ட்ரைலரை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தில் மாளவிக்காவுக்கு குரல் கொடுத்த நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதியே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

‘மாஸ்டர்’ படத்தில் விஜய் பேராசிரியராக நடித்துள்ளார். அத்துடன் இறுதி காட்சியில் இவர் போலீசாக வருகிறார் எனவும் ஒரு தகவல் கசிந்துள்ளது.

இதில் மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார்.

மாளவிகா மோகனனுக்கு நடிகை ரவீனா ரவி என்பவர் டப்பிங் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் விதார்த் நடித்த ’ஒரு கிடாயின் கருணை கதை’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

ரவீனா ரவியின் தாயார் ஸ்ரீஜாவும் ஒரு டப்பிங் கலைஞர் தான். இவரும் சில படங்களில் நடித்துள்ளார்.

Tik – Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2009 -ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத் பாபு ஆகியோர் நடித்த படம் மலையன். Three Sum Productions R.பால சுப்ரமணியன், PK ரகுராம் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். படத்தின் இயக்குனர் MP கோபி.

இப்படத்தின் கதை சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி பற்றியது, இத்திரைப்படம் 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் மூன்று விருதுகளை வாங்கியது,

சிறந்த நடிகர் கரண்
சிறந்த குணச்சித்திர நடிகர் சரத் பாபு
சிறந்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் விருதுகளைப் பெற்றனர்

இப்படம் வெளிவந்து 11 வருடங்கள் ஆகின்றன. இப்படத்திற்காக தீனா இசையில் , சினேகன் எழுதிய “பொத்தி வெச்ச ஆசை எல்லாம் பத்திரமா இருக்குது ஐயா” என்ற பாடல் தற்போது Tik – Tok ல் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

ட்ரெண்டிங் காரணம் என்னவென்றால்

1. Corona பாதிப்பில் நாடு திரும்ப முடியமால் வெளிநாட்டில் இருக்கும் தன்னுடைய கணவனை நினைத்து உருகி தாலியை கையில் பிடித்து கொண்டு பெண்கள் Tik Tok செய்கிறார்கள்

2. வெளிநாட்டில் இருக்கும் காதலனை நினைத்து பெண்கள் Tik – Tok செய்கிறார்கள்

3. நிச்சயதார்த்தம் முடிந்த பெண்கள் தன்னுடைய வருங்கால கணவனை நினைத்து உருகி Tik – Tok செய்கிறார்கள்

இது பார்ப்பவர் மனதை நெகிழ வைக்கிறது. 11 வருடங்கள் ஆனாலும் இந்தப்பாடல் நவீன டிக் டாக் காலத்திலும் ட்ரெண்டிங் ஆகி வருவதை எண்ணி படக்குழு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

கொரோனாவையும் விடாத கோலிவுட்.; பாஸ்கர் ராஜ் இயக்கும் ‘21 DAYS’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகில் ஏதாவது ஒரு விஷயம் பரபரப்பாக பேசப்பட்டால் நம் கோலிவுட்காரர்கள் சும்மா இருப்பார்களா..?

இப்போ கொரோனா சீசன்தானே.. இதோ கொரோனா சினிமாவும் வந்துட்டுல்ல…

பத்திரிகையாளரும் போட்டோகிராபருமான பாஸ்கர் ராஜ் என்பவர் கொரோனா காலத்தில் போடப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கை வைத்து 21 DAYS என்ற படத்தை இயக்கி தயாரிக்கவுள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இப்பட டைட்டிலில் டாக்டர்களின் டெத்தஸ் கோப், போலீஸ் தொப்பி, சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பம், தனித்த வீடு, நர்ஸ் தொப்பி, மீடியா மைக், உள்ளிட்டவைகளை வைத்து டிசைன் செய்துள்ளனர்.

இது 21 நாள் ஊரடங்கு சமயத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தை உருவாக்கவிருக்கிறாராம்.

இதனை எம்.பி.ஆர் பிலிம்ஸ் சார்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரிக்கவிருக்கிறார்.

தற்போதும் கொரோனா ஊரடங்கு தொடர்வதால் ஆன் லைன் மூலம் நடிகர் நடிகைகள் தேர்வை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு முடிந்த பின்னர் சூட்டிங்கை தொடங்க திட்டமிட்டுள்ளார் பாஸ்கர் ராஜ்.

More Articles
Follows