BREAKING ‘கருப்பன் குசும்புக்காரன்’ வசன புகழ் நடிகர் தவசி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் & ஸ்ரீதிவ்யா நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் தவசி.

இந்த படத்தில் ‘கருப்பன் குசும்புக்காரன்’ என்று இவர் பேசிய வசனம் தான் இவரை படு பிரபலமாக்கியது.

தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது கேன்சர் (புற்றுநோயால்) பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தனது மருத்துவ செலவுக்கு திரைப் பிரபலங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ரஜினிகாந்த் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

மேலும் டாக்டரும், திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சரவணன், மருத்துவ செலவுகள் அனைத்தையும் சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சௌந்தர ராஜா உள்ளிட்டோர் நிதியுதவி செய்தனர்.

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

Actor Thavasi who was fighting cancer passed away in madurai

மக்கள் பாரம்பரிய காலத்துக்கு திரும்பிவிட்டனர்.; சிவகார்த்திகேயன் ஏன் இப்படி சொன்னார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்று நவம்பர் 22ல் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்கு செலுத்த வந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்தாவது…

“கொரோனா காலத்தில் நாம் எல்லோரும் பாரம்பரிய காலத்துக்கு திரும்பிவிட்டோம்.

கை கழுவி விட்டு தான் எல்லோரும் சாப்பிடுகிறோம். யாரை பார்த்தாலும் கைகூப்பி வணக்கம் சொல்கிறோம்.

தியேட்டர்கள் திறந்தவுடன் மக்கள் வர ஆரம்பித்துள்ளனர்.

அனைத்து வியாபாரங்களும் இப்போதுதான் கொஞ்சம் சகஜ நிலைக்கு வருகின்றன.

‘டாக்டர்’ படத்தில் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. அதை அரசு சொன்ன வழிகாட்டுதலுடன் இப்போது படமாக்கினோம்.

புதிய படத்தினை ஓடிடியில் வெளியிட வேண்டுமா அல்லது திரையரங்கில் வெளியிட வேண்டுமா என்பது தயாரிப்பாளர்களின் விருப்பம்.

என்னைப் பொறுத்தவரை ஒரு படம் அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும்”

இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

Sivakarthikeyan speech at TFPC election

இந்து பெண்ணை கோயிலில் வைத்து முத்தமிட்ட இஸ்லாமிய இளைஞர்..; நெட்டிசன்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இஷான் கட்டர், தபு, தன்யா உள்ளிட்டோர் நடித்திருக்கும் வெப் சீரிஸ் ‘எ சூட்டபிள் பாய்’.

மீரா நாயர் இயக்கியுள்ள இத்தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இதில் இஸ்லாமிய இளைஞர் இந்து பெண்ணை கோவிலில் வைத்து முத்தமிடுவதாக ஒரு காட்சி உள்ளது.

இது மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து #BanNetflix, #boycottnetflix ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

Boycott netflix trends over A Suitable Boy scene

காரைக்கால் டூ மகாபலிபுரம்.. நிவர் புயல் எச்சரிக்கை.. : பேருந்து சேவை நிறுத்தம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நிவர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் தொடங்கி மகாபலிபுரம் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 520கிமீ தொலைவில் வலு கொண்டுள்ளது.

இது தொடர்ந்து புயலாகவும் நாளை மறுநாள் தீவிர புயலாக மாறுகிறது.

எதிர்வரும் 25 ம் தேதி நகர்ந்து காரைக்காலுக்கும், மகாபலிபுரத்துக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது.

இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை முதல் 26ம் தேதி வரை கன மழை பெய்யும்.

இந்த நிலையில் ஏழு மாவட்டங்களில் நாளை, (நவம்பர் 24) மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தம் என அறிவித்துள்ளது.

நாளை நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

TN govt announced bus transport will be suspended for 7 districts

பிரபாகரன் பிறந்தநாள் விழா : நாம் தமிழர் சார்பில் வாட்ஸ் அப் கவிதைப் போட்டி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விடுதலைப்புலிகள் மேதகு. பிரபாகரனின் 66்வது பிறந்தநாளை இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, மொரீசியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம்.

அவர், பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி – கலை இலக்கிய பண்பாட்டுப் பாசறை சார்பில், மாநில அளவிலான மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது.

தலைப்பு :

1) முப்பாட்டன் முருகன் நாடு
2) எரிதழல் கொண்டு வா
3) நாம் தமிழர் என்று நெஞ்சை நிமிர்த்து.

விதிமுறைகள்:

இதில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து -20 வரிகள் மிகாமல் கவிதை அமைத்தல் வேண்டும்.

இறுதி நாள்:

27-11-2020 அன்று இரவு 12மணிக்குள் அனுப்ப வேண்டும்.

போட்டி வாட்ஸ் அப் மூலமாக நடத்தப்படுகிறது :

பகிரி எண் : 70921 35608, 959797 0765.

பரிசுகள் :

முதல் பரிசு – கேடயம் + 5001,

இரண்டாம் பரிசு – கேடயம் +3001,
மூன்றாம் பரிசு – கேடயம் -2001,
நான்காம் பரிசு – கேடயம் + 1001

NTK announces poem competition on LTTE leader Prabakaran birth anniversary

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. ; முரளி வெற்றி… டிஆர் தோல்வி.. வாக்குகள் முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2020 முதல் 2022 வரை ஆண்டிற்கான திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கான தேர்தல் நேற்று நவம்பர் 22ல் சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் மொத்தம் 1,303 வாக்குகள் உள்ளன. அதில் பதிவான 1,050 வாக்குகள் மட்டுமே பதிவானது.

இன்று காலை 8 மணி முதல் தலைவர், துணைத் தலைவர், பொருளாளர், செயலாளர் என வரிசையாக வாக்குகள் எண்ணப்பட்டன.

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள், டி.ராஜேந்தர் 388 வாக்குகள், பி.எல்.தேனப்பன் 88 வாக்குகள் பெற்றனர்.

இதிலும் 17 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.

இதனையடுத்து தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

துணைத் தலைவர்களாக சுயேச்சையாகப் போட்டியிட்ட கதிரேசன், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியைச் சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

பொருளாளராக முரளி அணியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற அனைவருக்கும் filmistreet சார்பாக வாழ்த்துகள்…

Thenandal films Murali wins TFPC election defeating TR and Thenappan

More Articles
Follows