மக்களுடைய மிகப்பெரிய கேள்வி நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பல அரசியல் குழப்பங்கள், பொருளாதார சிக்கல்கள், வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் என தொடர்ந்து தமிழ்நாடு சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் “நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி நல்.செந்தில்குமார் இயக்கி வருகிறார்.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு கிராமத்தில் இதுவரை எந்த தலை முறையும் சந்திக்காத, பார்க்காத பல்வேறு மர்மமான சம்பவங்களும், பிரச்சனைகளும் அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கின்றது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் தீவிரமடைந்து மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களுக்கு என்ன காரணம் என்பதை கதாநாயகன் கண்டு பிடித்து தனது கிராமத்தையும் மக்களையும் எப்படி காப்பாற்றினார் என்பதை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து விறுவிறுப்பான திரைக் கதையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறுகிறார்.. ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் பூக்கடை ஜி.சேட்டு தயாரிக்கும் இத்திரைப்படத்தில் கதை நாயகனாக மகேந்திரன் ஊர் மக்களுக்கு உதவி செய்வதையே முழு நேர வேலையாக கொண்டு பணம் சம்பாதிக்கும் இளைஞனாக புதிய தோற்றத்தில் நடித்திருக்க்கிறார். இப்படம் மகேந்திரனுக்கு திருப்புமுனையாக இருக்கும் என இயக்குனர் கூறுகிறார்.

அவருக்கு ஜோடியாக மியாஸ்ரீ நடித்திருக்கிறார். இவர்களுடன் R.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா, மீரா கிருஷ்ணன்,ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு ஜெ.ஆர்.கே,, படத்தொகுப்பு கம்பம் மூர்த்தி கவனிக்க, தினா மற்றும் ரமேஷ் நடன இயக்குனராகவும், மிரட்டல் செல்வா ஸ்டண்ட் இயக்குனராகவும் பணி புரிந்துள்ளனர். பாடல்களை ஜீவன் மயில், மோகன்ராஜ் எழுத, விஜய் டி.வி. புகழ் செந்தில்கணேஷ், ராஜ லெட்சுமி மற்றும் ஆத்தங்குடி இளையராஜா, சித்தின், நமீதா இவர்களுடன் சேர்ந்து தேனிசைத் தென்றல் தேவாவும் பாடல்களைப் பாட, ஸ்ரீகாந்த்தேவா இசை அமைத்துள்ளார்.

திருவண்ணாமலையில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவிய கௌதமி !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

LIFE AGAIN INDIA நிறுவனத்தின் நிறுவனர் திருமதி .கௌதமி அவர்கள் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் ஏழை – எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்ய சென்றிருந்தார்.

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவி செய்வதே அவர் தனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறார்.

திருவண்ணாமலையில் உள்ள பள்ளி கல்வியாளர்களிடம் நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால கல்வி பற்றி கலந்துரையாடி உள்ளார். மேலும் அவர் திருவண்ணாமலையில் கல்வி மையம் ஒன்றை நிறுவி ஏழை குழந்தைகளுக்கு கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க உள்ளார்.

நம் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் வருங்கால கல்விக்காக உதவி செய்ய அவர் காத்திருக்கிறார்.

சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெண்கள் கபடி மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, சசி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் படப்பிடிப்பை முடித்து கொண்டு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினர். மேலும், இயக்குனர் சுசீந்திரனின் சொந்த ஊரான பழனிக்கு அருகில் உள்ள கணக்கம்பட்டியிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விழுப்புரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் தமிழ்நாட்டிலேயே சிறந்த கபடி குழுவான ‘வெண்ணிலா கபடி குழு’விலிருந்து 7 நிஜ கபடி வீராங்கனைகளும் நடித்து வருகிறார்கள். இவர்கள் பெரிதாக கருதுவது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத்தான். இந்த கோப்பையின் மதிப்பு ரூ.12,00,000/-. இப்போட்டி வருடந்தோறும் மாவட்ட வாரியாக நடைபெற்று இறுதிப் போட்டியில் வெல்லும் அணியினருக்கு ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ வழங்கப்படும். இவ்வருடம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்துவரும் வீராங்கனைகள் தட்டிச் சென்றனர்.

இவர்களின் வெற்றி இவர்களுக்கு மட்டுமல்லாது படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சுசீந்திரன் இப்படத்தை இயக்க, டி.இமான் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

நயன்தாராவை இயக்கும் ‘அண்டாவக் காணோம்’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நாயகியாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா.

இவர் ரூ. 5 கோடி, 6 கோடி என தன் சம்பளத்தை உயர்த்திவிட்டாலும் இவரது கால்ஷீட்டுக்காக கோலிவுட் சினிமா காத்திருக்கிறது.

இருந்தபோதிலும் தனக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

தற்போது விஜய்யின் 63வது படம், சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி, மலையாளத்தில் லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் கதையின் நாயகியாக நடித்துள்ள ஐரா படம் மார்ச் 28-ந்தேதி வெளியாகவுள்ளது.

அதன்பின்னர் மிஸ்டர் லோக்கல் படம் மே1-ந் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் அண்டாவக்காணோம் படத்தை இயக்கிய வேல்மதி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் நயன்தாரா.

இப்படத்தை கன்னட நடிகர் புனித்ராஜ்குமாரின் மேனேஜர் குமார் என்பவர் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

அண்டாவக்காணோம் படம் இன்னும் ரிலீசாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Andava Kaanom director Velmathi going to direct Nayanthara in his next

அஜித்-விஜய்-சிம்பு-தனுஷ் பற்றிய கேள்விக்கு விஜய்சேதுபதியின் நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் நடிப்பு மட்டுமில்லாமல் வித்தியாசமான பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் விஜய்சேதுபதி.

இவருடையே பேச்சுக்களே தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இவர் ஒரு விருது வழங்கும் விழாவில் இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

ரஜினிக்கு வில்லனாக நடித்து விட்டீர்கள். இனி விஜய் அஜித்… என்று கேள்வியை முடிக்கும் முன்பே… நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீர்களா..? ஏதோ பள்ளி வகுப்பறை போல தல தளபதி என்று எல்லாரும் பிரித்து பேசுகிறார்கள் என்று நெத்தியடியாக பதிலளித்தார்.

அதன்பின்னர் சிம்பு, தனுஷ் இவர்களில் யார் சிறந்த பாடலாசிரியர்? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் போது இவர்கள் இருவரையும் எனக்கு நடிகர்களாக தான் தெரியும். என்று மட்டும் பதிலளித்தார்.

Vijay Sethupathi slams Anchor when she asked about Ajith Vijay

அஜித்தின் ஆலோசனையை பெற்ற தக்ஷா குழு தங்கப்பதக்கம் வென்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் அடங்கிய ஆளில்லா விமானங்கள் வடிவமைக்கும் தக்ஷா குழுவினருக்கு ஆலோசகராக இருந்து வருகிறார் நடிகர் அஜீத்.

இக்குழுவினர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா விமானங்கள் தயாரிக்கும் போட்டியில் உலக அளவில் கலந்துக் கொண்டனர்.

மருத்துவ சேவைக்கு உதவும் ஆளில்லா விமானங்களுக்கான என்ற போட்டி நடந்தது. உலகெங்கிலும் இருந்து 55 நாடுகளில் இருந்து ஆளில்லா குட்டி விமானங்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். அதில் 11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

போட்டியில் அவர்கள் 2ஆம் இடம் பிடித்துள்ளனர்.

அதனையடுத்து தற்போது தக்ஷா குழு, டிரான் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்கள் பெற்றுள்ளது.

சர்வேலன்ஸ் ஹைப்ரிட் டிசைன் (Surveillance: Hybrid Design 4-20 Kg) 4.2 பிரிவில் தங்க பதக்கமும், ரூ. 3 லட்சம் ரொக்கமும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவையில்லாமல் சர்வேலன்ஸ் பிக்ஸிட் பிரிவில் (Surveillance: Fixed VTOL) வெள்ளிப் பதக்கமும் 1.5 ரொக்கமும், பிளையிங் பார்மேஷன் சேலஞ்சிங் பிரிவில் (Surveillance: Fixed VTOL & Flying Formation Challenge) வெள்ளி மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கமும் இந்த குழு பெற்றுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Ajiths Dhaksha technical team won gold and silver medals

More Articles
Follows