தீராத மழை; திணறும் சென்னை; ஆர்ஜே.பாலாஜி வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஒரு மணி நேரம் மழைக்கே தாங்காத சென்னை, இந்த ஓயாத மழைக்கு தாங்குமா? என்பதே பலரின் கேள்வியாகும்.

இதனால் பேருந்து மற்றும் ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் காமெடி நடிகர் RJ பாலாஜி மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பலரும் ஆட்டோ வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர்.

வண்டியில் செல்பவர்கள் லிப்ட் கொடுத்து உதவுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என தெரிவித்துள்ள அவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள பிக் எப்.எம். ஆபிஸில் இரவு தங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Actor RJ Balaji request to peoples about Heavy rain in Chennai

RJ Balaji‏Verified account @RJ_Balaji
Whats app groups, page admins and everyone across social media plz dont share unauthentic information that too with a random ‘VERIFIED’ tag.
If u r out thre with a vehicle,you b safe n Plz offer LIFT to people who r stranded on roads. Thre r no rental cars and autos. #ChennaiRains

People stranded around Nungambakkam area can use the Big FM office to stay for the night. Have informed ppl thre. Address in next tweet.

Address – Big FM, 152/153, azam arcade, (dominos building), kodambakkam high road, nungambakkam, chennai-600034. Landmark – opp to palmgrove

ஆரி-ஸ்மிருதி இணையும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் மௌன வலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை”, இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகும்.

ஆரி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்மிருதி கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உப்பாசனா நடிக்கிறார்கள்.

நிர்வாக தயாரிப்பு – கார்த்திச்சந்திரன்,
தயாரிப்பு S.ராஜசேகர்
“களம்” படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
ஒளிப்பதிவு – பாரூக் பாஷா,
இசை – ஜாவித் ரியாஸ்,
படத்தொகுப்பாளர் – பிலோமின் ராஜ்,
கலை – மணிமொழியன் ராமதுரை
சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம்

Actor Aari new movie Mouna valai news updates

போலி முகவரியில் புதுச்சேரியில் கார் வாங்கிய விவகாரம்; அமலாபால் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவை சேர்ந்தவர் நடிகை அமலாபால்.

இவர் போலியான முகவரியை கொடுத்து புதுச்சேரியில் குறைந்த வரிக்கு கார் வாங்கிய விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்த ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் அமலாபால்.

மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு,

தேசிய கொள்கைகளை முன் நிறுத்தி, மலபார் பகுதியின் சுதந்திர போராட்ட வீரர்களால் உருவமைக்கப்பட்ட ஒரு பாரம்பரியமிக்க தின பத்திரிக்கை, பொது மக்களின் பார்வையை தன பக்கம் ஈர்க்கவும், தன்னுடைய பத்திரிக்கை விற்பனையை அதிகரித்து கொள்ளவும், இத்தகைய மேம்போக்கான வழிகளை கையாண்டிருப்பது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

சட்டத்தை மதிக்கும் இந்திய பிரஜையான நான், நடப்பு ஆண்டில் ரூ. 1 கோடிக்கும் மேலாக வரி செலுத்திய பின்னும், அதுவும் தற்பொழுது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த ஒரு முறைகேடும் கண்டறியப்படாத நிலையில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் குறிவைத்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளாலும் ஏற்படும் துன்புறுத்தல்களுக்கும் எதிராக, நான் பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஒரு இந்திய பிரஜையாக நான், இந்தியா முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கவும், சொத்துகள் வாங்கவும் உரிமை இருக்கிறது.

தாய்நாடு என்பதற்குரிய உண்மையான அர்த்தத்தை தொலைத்துவிட்டு சிலர் பிராந்தியவாத பிரிவினைகளை முன்னிறுத்தி வருவதால், இங்குள்ள வாசகர்கள் தன் மாநிலம் தனிமை படுத்தபட்டது போன்ற ஒரு மாயையான சிந்தனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சம அளவில் தமிழ் சினிமாவிலும் மலையாள சினிமாவிலும் பணியாற்றியுள்ள நான், இவ்விரு மாநிலங்களிலும் என் வருமானத்தையும் சொத்துகளையும் நியாயபடுத்த இத்தகைய ஞானிகளிடமே உதவி கேட்கலாம் என்றுள்ளேன்.

ஒரு வேளை நான் தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கும் அல்லது பெங்களூருவில் ஒரு சொத்து வாங்குவதற்கும் இவர்களது ஒப்புதல் தேவைப்படுமோ? கடந்த முறை நான் பெங்களூரில் பார்த்த போது, அங்கும் இந்திய ரூபாய்தான் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

இத்தகைய ஞானிகளுக்கு எழுபது ஆண்டுளில், நமது நாடு கடந்து வந்த பாதை மறந்து போய்விட்டது போலும்.

இறுதியாக, வேற்றுமையில் ஒற்றுமையை காண்கின்ற இந்த நேரத்தில், அதுவும் தற்போதைய இந்திய அரசு, ஒரு நாடு ஒரே வரி என்று ஒன்றுபட்ட வரிவிதிப்பை அமல்படுத்திய பிறகும் கூட, பொது மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையிலும், ஒற்றுமையை குலைக்கும் நோக்குடனும் முன்வைக்கும் பிரிவினைவாத வாதங்களை உடனடியாக நிறுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்தில் நாம் அனைவரும் மலையாளி, தமிழர், பஞ்சாபி, குஜராத்தி என்கின்ற பாகுபாடுகளை களைந்து, ஒரு இந்தியராக அதன் இறையாண்மைக்கும் வளர்ச்சிக்கும் பலம் சேர்க்கிற வகையில் வலம் வருவோம் என உண்மையாக, உறுதியாக நம்புகிறேன்.

குறுகிய நோக்கில் சின்ன சின்ன ஆதாயங்களுக்காக, சட்ட-திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிற இந்தியர்களுக்கு தொல்லை கொடுப்பதை தவிர்த்து, நாம் நம்மை எதிர்நோக்கியுள்ள வறுமை, ஊழல், கல்வியறிவின்மை, அநீதி, போன்ற சமூக ஏற்ற தாழ்வுகளை களைய போராடுவோம். அதுவே சிறந்த போராட்டமாகும்.

உங்கள்,
அமலா பால்

Amala Paul clarifies her new car bought in Puducherry State issue

சிறுமிகள் பலியானது அரசு நிர்வாகத்தின் குற்றம்… விஷால் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் நேற்று மழையால் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் பலியாகியுள்ளனர்.

இதற்கு கமல் கண்டனம் தெரிவித்த நிலையில் நடிகர் விஷாலும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

எப்போதெல்லாம் இயற்கை சீற்றங்களான கனமழை, புயல், வெள்ளம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மின்சாரம் தாக்கி அப்பாவிகள் பலியாகின்றனர்.

பேரிடர் காலங்களில் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வறட்சியின்போது விவசாயிகள் பலியாகிறார்கள். அது தொடர்கதையாகி விட்டது. மழை பெய்தாலும் அப்பாவி மக்கள் தான் பலியாகின்றனர்.

இதுவும் தொடர்கதையாகி விட்டது. இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இந்த நிலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க போகிறோம்? தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோமா இல்லை அப்பாவிகளை தொடர்ந்து பலி கொடுக்கப் போகிறோமா?

இன்னும் சென்னை மாநகரம் சரியான கட்டமைப்பு வசதியை பெறவில்லை என்பதைத் தான் இந்த மரணங்கள் காட்டுகின்றன.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிட்டால் சென்னைக்கு மழை, வெள்ளத்தை தாங்கும் திறன் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

அரசு நிர்வாகத்தின் தவறுக்கு இன்னும் எத்தனை அப்பாவி மக்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்? சிறுமிகள் உயிரிழந்தது நிர்வாகத் தவறு அல்ல; குற்றம்.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

அண்ணன் சூர்யாவுடன் கம்பேர் பண்ணாதீங்க… கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் தீரன் அதிகாரம் ஒன்று.

கார்த்தி, ரகுல் பிரித்தி சிங், போஸ் வெங்கட் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இன்று பாடல்கள் வெளியான நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது கார்த்தி பேசியதாவது…

என் அண்ணன் சூர்யாவுடன் சிங்கம் படத்தில் போலீஸாக போஸ் வெங்கட் நடித்துள்ளார்.

என்னுடன் இந்த படத்திலும் அவர் நடித்துள்ளார்.

நான் அவரிடம் என் அண்ணனைப் போல் எதிர்பார்க்காதீங்க என்பேன்.

நானும் நன்றாக நடிப்பேன். ஆனால் சிங்கம் போல கத்தி பேசும் பன்ச் டயலாக் இல்லை என்பேன். என்று கலகல வென பேசினார் கார்த்தி.

மண்ணின் மைந்தன் & முன்னுதாரண இளைஞர் விருதுகளை பெற்ற அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா ‘பிளஸ் ஆர் மைனஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் பல்வேறு துறையைச் சார்ந்த மொத்தம் 60 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தேசம் பத்துரிகை – தேசம் வலைத்தள ஊடகத்தின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் ஆகியோர் கலந்து கொண்டனர் .

இந்த விருது விழாவில் ‘பிக் பாஸ்’ புகழ் பரணிக்கு ‘மலேசிய மக்கள் நாயகன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை பரணியின் ரசிகர்கள் அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

நடிகர் அபி சரவணன் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தன்’, ‘2017 முன்னுதாரண இளைஞர்’ ஆகிய இரு விருதுகள் அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கப்பட்டது .

மதுரை தொழிலதிபர் செந்தில் குமரன் ‘பசுமை நாயகன்’ விருதையும், சென்னை தொழிலதிபர் மன்சூர் அலிகான் ‘மக்கள் சேவகர்’ விருதையும் அமைச்சர் டத்தோ சரவணனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இந்த விருது விழாவில் மலேசியர்கள் பலர் ஊடகத் துறை, வர்த்தகத் துறை, விளையாட்டு என்று பலதுறைகளில் இருந்து சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்டனர்.

இந்த தேசம் சாதனையாளர்கள் விருது விழாவில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், ம இ கா உதவித் தலைவர் டத்தோ டி.மோமன், போலீஸ் அதிகாரி டத்தோ பரமசிவம், மற்றொரு போலீஸ் அதிகாரி டத்தோ குமரன், இந்தியர் முஸ்லிம் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், மனிதநேய மாமணி தொழிலதிபர் ரத்னவள்ளி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் தேசம் பத்திரிகை – தேசம் வலைத்தள ஊடகம் முதல் முறையாக நடத்திய விருது விழா மலேசிய சாதனையாளர்களுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று தேசம் பத்திரிகையின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

More Articles
Follows