பேய் இல்லை என்பதை நிரூபிக்க ராம்கி எடுத்த அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ் சார்பில் ஆர் ஜே எம் வாசுகி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “இங்கிலிஷ் படம் “இப்படத்தை புதுமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் சிங்கமுத்து, சிங்கம்புலி,மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.படத்திற்கு ஒளிப்பதிவு சாய்சதிஷ், படத்தொகுப்பு மகேந்திரன், கலை பழனிவேல்,பின்னணி இசை நௌசாத்.

இப்படத்தை பற்றி இயக்குநர் குமரேஷ் குமார் கூறியதாவது…

இத்திரைப்படத்திற்கு இங்கிலிஷ் படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.

இத்திரைப்படத்தில் நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில் ஒரு வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு விற்பதற்கு முயற்சி செய்கிறார்.

அந்த வீட்டில் பேய் இருப்பதாக பலராலும் நம்பப்பட ,அந்த வீட்டை வாங்க வரும் நபர் வீட்டில் பேய் இல்லை என்று நிருபித்தால் வீட்டை வாங்கி கொள்வதாக சொல்கிறார்.

எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய ராம்கி களத்தில் இறங்க அதில் அவர் மிக பெரிய ஆபத்தில் சிக்கி கொண்டு யாரும் எதிர்பாராத விதமாக ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது.

அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளையாக முற்றிலும் காமெடி கலந்த ஹாரர் திரில்லராக உருவாக்கி உள்ளோம்.

இப்படம் ராம்கியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையும்.

இதுவரை பார்க்காத ராம்கியை திரையில் காண முடியும். படத்தில் சிங்கம் புலி பேய்களை வாடகைக்கு விடுபவராக வருகிறார் அவர் வரும் காட்சிகள் முழுவதும் பயங்கற அலப்பறையாக இருக்கும் என்றும் இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது என்றும் கூறினார்.

Actor Ramki new movie titled English Padam releasing on Oct 6th 2017

இந்தாண்டு இறுதியில் கமல் கட்சி; சினிமாவை விட்டு விலகுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருகிறார்? என்பது உறுதி செய்யப்படாத நிலையில் கமலின் அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்டது.

இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் அரசியலுக்கு வருவேன். தேவைப்பட்டால் முதல்வராகுவேன் என பகிரங்கமாக தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்க்மாக அறிவித்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

“இதற்கு முன்னர் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தேன்.

நான் கட்சி தொடங்க இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது என 30 நாளா, 60 நாளா, 100 நாட்களா என கேட்டார்கள்.
அப்போது எனக்கான ஒரு கால அவகாசத்தைதான் நான் தெரிவித்தேன்.

ரஜினியும், நானும் ஏற்கெனவே அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசித்து உள்ளோம்.

தற்போது நிலைமை மிகவும் மோசமாக போய்க் கொண்டிருப்பதால் இந்த முடிவு எடுத்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தாண்டு இறுதியில் அதாவது 2018 புத்தாண்டு தொடக்கத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

அதன்பின்னர் கமல் சினிமாவில் நடிக்கமாட்டார் என கூறப்படுகிறது.

Kamalhassan quitting film industry as he entering into politics

கடையை திறந்து வைத்து பொதுமேடையில் ஆட்டம் போட்ட ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை ஓஎம்ஆர் ரோட்டில் இன்று சரவணா ஸ்டோர்ஸின் புதிய கடையை நடிகை ஓவியா திறந்து வைத்தார்.

இதற்கான விளம்பரங்கள் பல நாட்களாக டிவியில் ஒளிப்பரப்பப்பட்டு வந்தது.

இதனையறிந்த ரசிகர்கள இன்று ஓவியாவை வருகையொட்டி கடை முன் குவிந்தனர்.

கடை திறப்பு விழாவிற்கு வந்த ஓவியா, வெளியில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் தோன்றினார்.

அப்போது ’கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட…’ என்று பாட்டு பாடி நடனமாடினார் ஓவியா.

Oviya dance in public at Saravana Store opening ceremony

ஹரஹர மகாதேவகி பட விமர்சனம் எப்படினாலும் இயக்குநருக்கு ஓகேவாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி, சதீஷ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஹரஹர மகாதேவகி.

இப்படம் வருகிற செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் அவர்கள் கூறியுள்ளதாவது…

“ஹரஹர மகாதேவகி திரைப்படத்தை வரும் செப்டம்பர்-29ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம்.

“ஏ”சான்று பெற்றப்படம் எனவே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம்.

இப்படத்தை விருப்பமானவர்களோடு சந்தோசமாக பார்க்கலாம். இயல்பு வாழ்க்கையை படமாக்கப்பட்டதால்

இப்படத்தின் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் கவலையில்லை. இப்படத்தை பார்த்து மக்கள் கெட்டு போவார்கள் என எனக்கு தோனவில்லை.

ட்ரைலரை பார்த்தே இரட்டை வசனத்துடன் மிகவும் ஜாலியா இருக்கு என பலர் கூறினர், அதன் தொடர்ச்சியாகவே முழுவதும் இருக்கும்.

அதை தவிர்த்து வேறு எந்த தப்பான காட்சியும் இதில் இருக்காது. இப்படத்தின் கதை பற்றி கூற வேண்டுமானால் கௌதம் புதுமையான தொழில் மேற்கொள்கிறார்.

நிக்கி கல்லூரி மாணவி இரண்டு பேரும் ஒரு நாள் காலை தங்கள் காதலை பிரேக்கப் பண்றாங்க அப்போ யாரையெல்லாம் சந்திக்காங்க அவங்களுக்கு என்னலாம் நடக்கு, முதல் பாதி காதல் இரண்டாம் பாதி ஏன் பிரேக்கப் என்று பரபரப்பாக கதை நகரும்.

ஹர ஹர மஹாதேவகி என்ற விடுதியில் நடப்பது தான் கதை எனவே அதையே படத்தோட பெயரா வச்சிட்டோம்.

சென்சார்லயும் “ஏ”க்கு அனுமதி கொடுக்கும் அளவுக்கு படத்தை எடுத்திருந்தோம். சென்சார்லயும் பெண் அதிகாரிகளும் பார்த்துட்டு நல்லா ஜாலியா இருக்குன்னுதான் சொன்னாங்க. மற்றபடி படத்தில் ஒரு கருத்தும் கிடையாது.

தங்கராஜ் சார்கிட்ட கதை சொன்னோம் அருக்கு பிடிச்சிருந்தது. 18 பேர்க்கு அப்புறம் கௌதம் தான் இதை படமா கதையா பார்த்தாரு கார்த்திக் சாரோட உள்ளத்தை அள்ளித்தா மாதிரி இருக்குனு கௌதம் பீல் பண்ணாரு.

இதற்கு அடுத்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்பது ஒரு பேய் படம். கதைக்கு ஏத்தா மாதிரி தலைப்பு வைத்துள்ளோம்” என்று கூறினார்.

நிக்கி கல்ராணி பேசியது :-

என்னுடைய எல்லா படத்தையும் போல இதுவும் நல்ல படம் தான். இந்த படத்தை பற்றி ஏன் அதிக பேச்சு வருகிறது என்றால் இந்த படம் ஒரு “ அடல்ட் காமெடி “ படம்.

இந்த படத்தை மக்களுக்கான ஒரு பொழுதுபோக்கு படமாக தான் நாங்கள் பார்க்கிறோம். இந்த படத்தில் நாங்கள் வேண்டுமென்றே டபுள் மீனிங் வசனங்கள் எதையும் வைக்கவில்லை.

என்னை தப்பாக காட்டும் ஒரு படத்தில் நானே நடிக்க மாட்டேன். இந்த படத்தில் அப்படிபட்ட காட்சிகள் ஏதும் இல்லை. இந்த படத்தில் தேவையில்லாமல் அடல்ட் காமெடி எதுவும் இல்லை.

கௌதம் கார்த்திக் பேசியது :-

நான் ஹரஹர மஹாதேவகி படத்தின் கதையை கதையாக தான் பார்த்தேன். இது முழுமையான காமெடி என்டர்டெய்னர்.

ஒரு இடத்தில் நான்கு நண்பர்கள் கூடினால் அவர்களுக்குள் எப்படி பேசிக்கொள்வார்களோ அதே போல் தான் இப்படத்தில் காட்சிகள் இருக்கும்.

இந்த படத்தை ஏன் குடும்பத்தோடு பார்க்ககூடாது என்று சொல்கிறோம் என்றால் , நாம் நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளும் சில விஷயத்தை குடும்பத்தினர் முன்பு கண்டிப்பாக பேசமாட்டோம்.

அதனால் தான் இந்த படத்தை அடல்ட்ஸ் ஒன்லி படம் என்று சொல்கிறோம். நான் ஹரஹர மஹாதேவகியையும், இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தையும் யூத் ஆடியன்ஸ் அனைவரையும் மனதில் வைத்து தான் தேர்ந்தெடுத்து நடித்துள்ளேன்.

இந்த படம் அடல்ட் காமெடி தான் , செக்ஸ்வல் காமெடி இல்லை. இங்கே யாருக்கும் அடல்ட் காமெடி பற்றிய சரியான புரிதல் இல்லை. ஹரஹர மஹாதேவகி இளைஞர்கள் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார்.

Whatever critics for Hara Hara Mahadevaki I wont worry says director

ஆதிவாசியாக அசத்தும் விஜய்சேதுபதி; பர்ஸ்ட்லுக் ஏற்படுத்திய பரபரப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்திற்கு ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதன் சூட்டிங் தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வரகிறது.

ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ஆதிவாசியாக நடித்து அசத்தவிருக்கிறாராம் விஜய்சேதுபதி.

மேலும் இந்த கதை நடக்கும் களம் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பர்ஸ்ட் லுக்கில் விஜய்சேதுபதி கெட்டப்புக்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Vijay Sethupathis Oru Nalla Naal Paathu Solren first look goes viral

அரசு செவிடாகி தூங்குகிறது; இனி நாம்தான் காவலர்… கமல் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தை அச்சுறுத்தும் விதமாக நாளொரு மரணம் டெங்குவால் நடந்து வருகிறது.

எனவே டெங்கு காய்ச்சலுக்கு உடனடியான தீர்வை அரசு மேற்கொள்ள வேண்டும் என சில தினங்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார் கமல்.

தற்போது சென்னை கோபாலபுரம் பகுதி பள்ளியைச் சேர்ந்த பார்க்கவ் என்ற மாணவர் டெங்கு காய்ச்சலால் மரணம் அடைந்தார்.

எனவே சற்றுமுன் மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

அதில்.. செவிடன் காதில் ஊதிய சங்குபோல் உள்ளது. அரசு எதற்கு செவி சாய்க்கவில்லை.
இதுபோன்ற மரணங்களை தடுக்க முடியாத அரசு பதவி விலக வேண்டும்.

அரசு தூங்குகிறது. பெற்றோரே விழித்திருங்கள். இனி நாம்தான் காவலர்.

நமக்கு வேண்டிய பதிலை பெறும் வரை அமைதியாக இருக்காதீர்கள்” என பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 14m14 minutes ago
அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்.

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 14m14 minutes ago
செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்.

TN ADMK Govt must resign Parent must get aware of Dengue fever says Kamal

More Articles
Follows