சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தலைப்பில் டாப் ஸ்டார் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016ல் வெளியான சாகசம் படத்திற்கு பிறகு பிரசாந்த் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரசாந்த்.

வெற்றிச் செல்வன் இயக்கும் இப்படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

இது தொடர்பான சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

இப்படத்தில் பிரசாந்துடன் நடித்துள்ள சஞ்சிதா செட்டி, பிரபு, ஆனந்த்ராஜ் சயாஜி ஷிண்டே, கலைராணி, தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் இதில் கலந்துக் கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஜானி என பெயரிட்டுள்ளனர்.

இதே பெயரில் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ஜானி படம் கடந்த 1980 வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actor Prashanth in Rajini movie title Johnny

மெர்சலுக்காக விலங்குகள் நலவாரிய நடைமுறை மாற்றப்படுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் நாளை மறுநாள் தீபாவளி வெளியீடாக வருகிறது.

இப்படம் தலைப்பு வழக்கு உள்ளிட்ட பல பிரச்சினைகளை கடந்து திரைக்கு வரவுள்ளது.

ஆனால் இப்படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த பிரச்சினையில் விலங்குகள் நலவாரியத்தின் சான்றிதழ் கிடைக்காமல் உள்ளதாம்.

இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்த விஜய் இது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக விலங்குகள் நலவாரியத்தின் சர்ட்டிபிகேட் புதன்கிழமைதான் வழங்கப்பட்டு வருகிறதாம்.

ஆனால் புதன்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாப்படுவதால் அதற்கு முன்பே சர்ட்டிபிகேட் பெற மெர்சல் படக்குழு முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

எனவே இதுகுறித்த அவரச கூட்டம் இன்று (அக். 16) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

Mersal movie Animal welfare department certificate issue

நடிகர் சங்கத்துக்கு புதிய சங்கம்.?; உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கினார் ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்கம் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழாவில் சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

அதன் விபரம் வருமாறு :

மயில்சாமி : S.V. சேகர் அவருக்கு பிடித்த காமெடி நடிகராக என்னைக் குறிப்பிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்கள், எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே, நீ முதலில் நல்லவனாக இருந்து பார் என்று கூறியுள்ளார்.

இந்த சங்கம் நடிகர் சங்கத்திற்கு எதிரானது அல்ல. புதுமுக நடிகர்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இவ்வாறு மயில்சாமி பேசினார்.

S.V. சேகர் :
சங்கங்களை அதிகப்படுத்துவதைவிட, இருக்கும் சங்கத்தை பலப்படுத்த வேண்டும். எனக்கும், ராதாரவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் மீண்டும் நட்பு கொள்பவர் ராதாரவி. சங்கம் எப்போதும் ஒரே நோக்கோடு செயல்பட வேண்டும். உங்களுடைய வேலைவாய்ப்பு உங்களுடைய உழைப்பாலும், திறமையாலும் மட்டுமே கிடைக்கும். சம்பள நிர்ணயத்தில் அனுசரிப்பு வேண்டும்.

J.K. ரித்திஷ் : 4 செங்கல் வைத்துவிட்டு ஏதோ சாதிக்க போவதாகக் கூறி யாரை நீக்கினீர்களோ, அவர்களை இன்றிலிருந்து மூன்று மாதத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைப்பேன். பழிவாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது. இன்னும் 11 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. வருகிற தேர்தலை உங்களுடைய தேர்தலாக கருதி எங்களைத் தேர்ந்தெடுங்கள் என்று தமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்க உறுப்பினர்களுக்கு J.K.ரித்திஷ் வேண்டுகோள் விடுத்தார்.

ராதாரவி : சினேகன் என்னைப் பள்ளிக்கூடம் என்றுக் கூறினார். ஆனால் நானும் புதுமுகம் தான். விமர்சனங்களைப் பற்றி கவலை கொண்டால் வெற்றியடைய முடியாது.

நக்கீரனில் கர்ஜனை என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறேன். 14 வருடம் தலைவர் பதவியிலும், இன்னும் சில பதவிகளிலும் இருந்திருக்கிறேன், கணக்கில் எம்.ஜி.ஆர், S.S.R. காலத்திலிருந்தே குளறுபடி இருக்கின்றது. அழகாக இருந்தாலும் நம்மூர் பெண்களை மதிக்கமாட்டார்கள்.

எங்கேயோ மும்பையிலிருந்து தேடிப்பிடித்து தமிழ்த்தாயின் கற்பைப் பறிக்கக்கூடிய அளவில் தமிழ் பேசும் நடிகைகளைக் கூட்டி வருவார்கள். இதுதான் உங்களுக்கு தாய் வீடு என்று வலியுறுத்தினார்.

மேலும், இது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு போட்டியான சங்கம் அல்ல.

‘நாடகம் ரசிகனை உருவாக்கும்; சினிமா வெறியனை உருவாக்கும்’. உங்கள் பெயர்களை நீங்கள் தான் மாற்ற வேண்டும். ஒன்று நினைத்து விட்டால் அதை முடிக்காமல் விடமாட்டார் ரித்திஷ்.

எவ்வளவு பெரிய மாளிகையாக இருந்தாலும் முதலில் செங்கல் தான். மைசூர் மஹாராஜாவே இருந்தாலும் பிறக்கும் போது குழந்தை தான்.

அதேபோல் இக்கூட்டத்திலும் ஒரு எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி, ராதிகா இருக்கிறார்கள். எல்லா பொதுக்குழு கூட்டத்திற்கும் இந்தளவு கூட்டம் இருக்க வேண்டும். சந்தா முறையாக செலுத்த வேண்டும். நான் ஒரு படம் எடுக்கப் போகிறேன்.

தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடாதீர்கள். உறுப்பினர்களில் யாராவது இறந்துவிட்டால் வேலை இல்லாதவர்கள் இறுதி வரை செல்ல வேண்டும் என்று ‘டத்தோ’ ராதாரவி வலியுறுத்தி பேசினார்.

மாற்று திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மிஸ்டர் இந்தியா ராஜேந்திரன் சங்கத்தை வாழ்த்தி பேசினார்.

எங்களையும் மதித்து இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்ததற்கு நன்றி தெரிவித்து, நன்றியுரையாற்றினார் திருநங்கை நமிதா.

கிச்சா ரமேஷ் இவ்விழாவை ஏற்பாடு செய்தார். விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இறுதியாக, புதுமுக நடிகர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Radha Ravi speech at Tamilnadu Pudhumuga Nadigargal Sangam at Chennai

3000 பாட்டுல கிடைக்கல; பிக்பாஸ்ல கிடைச்சுது… – கவிஞர் சினேகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு புதுமுக நடிகர்கள் சங்கம் உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட கவிஞர் சிநேகன் பேசியதாவது…

“எல்லோரும் பள்ளிக்கூடத்தில் கற்பார்கள், ஆனால் பள்ளிக்கூடமே ராதாரவிதான். அன்பு, அரவணைப்பு அவரிடம் உண்டு. வாய் சொல் அல்லாமல் செயலிலேயே காட்டுவார்.

S.V. சேகருக்கு ஸ்விட்ச் எங்கிருக்கிறது என்று தெரியும். கலை மானுடத்தின் சொந்தம், யாருடைய உரிமையையும் பறிக்கக்கூடாது. எல்லோருக்கும் அடையாளம் ரொம்ப முக்கியம்.

3000 பாடல்கள், 72 விருதுகள், 6 புத்தகங்கள், இவை யாவும் என்னை அடையாளப்படுத்தவில்லை. பிக் பாஸ் தான் அடையாளம் காட்டியது. கலைஞர்கள் விமர்சனங்களை தூக்கியெறிய வேண்டும்.

அப்படி எறிந்ததால் தான் ராதாரவி இன்று ‘ராஜாரவி’யாக இருக்கிறார். இவ்வாறு சினேகன் பேசினார்.

Lyricist Snehan speech at New Nadigar sangam meeting

 

சூர்யாவின் சொடக்கு பாடலுக்கு ஜிமிக்கி கம்மல் ஷெரில் டான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், செந்தில், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சொடக்கு என்ற 2வது சிங்கிள் பாடலின் டீசரை அனிருத்தின் பிறந்தநாளான இன்று சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

இதில் பொதுமக்கள் நிறைய பேர் உள்ளனர். மேலும் கமல், சரவணா ஸ்டோர் ஓனர் போஸ்டர்கள் உள்ளனர்.

அண்மையில் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடி தமிழக ரசிகர்களை கவர்ந்த ஷெரில் இதில் நடனமாடியுள்ளார். அவருடன் அவரது தோழியும் உள்ளார்.

Jimikki Kammal Sheril dance in Suriyas Thaana Serndha Kootam

பாடலின் வீடியோ இதோ…

 

https://www.youtube.com/watch?v=xxZ62tTveeE&feature=youtu.be

முதல்வர் எடப்பாடியை விஜய் சந்திக்க மெர்சல் ரிலீஸ் காரணம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

அதன் விவரம் வருமாறு…

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நடிகர் விஜய் சந்தித்து பேசினார்.

அப்போது தியேட்டர் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்ததற்க்கும், கேளிக்கை வரியை 8% குறைத்ததற்கும் முதல்வருக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.

மேலும் மெர்சல் பட இயக்குனர் அட்லியும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தில் தடை நீடித்து வருவதால் அவர்கள் இது தொடர்பாக சந்தித்து பேசியுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.

விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ள நிலையில், அவர் இன்று முதல்வரை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay meets Tamilnadu CM Edappadi Palaniswamy

More Articles
Follows