‘பகிரி’ படத்தின் மூலம் மியூசிக் டைரக்டராகிறார் கருணாஸ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய தொழில்நுட்ப சமூகத்தை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்டவை ஆட்சி செய்து வருகின்றன.

இதில் வாட்ஸ் அப்பை மையமாக வைத்து ‘பகிரி என்ற பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

அதாவது வாட்ஸ் அப் என்றால் ‘பகிரி’ என்று பொருள்படும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

இசக்கி கார்வண்ணன் என்பவர் தயாரித்து இயக்கி வரும் இப்படத்தில் ‘கனாக்காணும் காலங்கள் புகழ் பிரபு ரணவீரன் நாயகனாக நடிக்கிறார்.

ஆந்திராவில் இருந்து இறக்குமதியான ஷர்வியா நாயகியாக நடிக்க, ரவிமரியா, ஏ.வெங்கடேசன், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ்.

இப்படம் குறித்து இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கூறியதாவது…

‘இது பகிர்தல் தொடர்புடைய கதை. எனவேதான் ‘பகிரி’.

தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞன் ஒருவனை மையம் கொள்கிற கதை.

இக்கால இளைஞர்கள் தங்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? விருப்பம், வேலை எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறேன்.

நான் பகிரவேண்டிய செய்தியையும் முழுக்க காமெடியோடு பகிர்ந்திருக்கிறேன்” என்றார்.

வீரகுமார் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.

கிராமத்து மனிதர்களை கிண்டல் செய்த செல்வராகவன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல இயக்குனரும் தனுஷின் சகோதரருமான செல்வராகவன் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் பிஸியாக இருக்கிறார்.

இவர் இயக்கிவரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க, கௌதம் மேனன் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன் சிறுவயது நினைவுகளை பகிர்ந்து உள்ளார்.

அதில் தெரிவித்துள்ளதாவது…

“சிறு வயதில் கிராமத்தில் மதியம் உண்டு விட்டு மரத்தடியில் தூங்குபவர்களை பார்த்து நான் கிண்டல் செய்தது உண்டு. இப்பதான் சாமி அந்த அருமை புரியுது.” என்று பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் ரசிகராக மாறிய விஜய்சேதுபதி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வளரும் முன்னணி கலைஞர்கள் பட்டியலில் சிவகார்த்திகேயனுக்கும் விஜய்சேதுபதிக்கும் முக்கிய இடம் உண்டு.

இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறிவந்தாலும், இவர்களை போட்டியாளர்களாக கருதியே நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன.

இந்நிலையில் நாங்கள் நல்ல நண்பர்கள்தான் என்பதை தன் படத்தில் உள்ள ஒரு காட்சி மூலம் நிரூபிக்க இருக்கிறாராம் விஜய் சேதுபதி.

இவர் தற்போது நடித்து வரும் றெக்க படத்தின் ஒரு காட்சியில், சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு செல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த காட்சி அண்மையில் படமாக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டென்ஷன் ஆன ரஜினி ரசிகர்களை கூல் செய்யும் கபாலி டீம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதி… என்ற இந்த செய்தி இன்று காலை முதல் இணையதளம் மற்றும் ஊடகங்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்து ரஜினியின் மேலாளர் சுதாகர்… “தலைவர் ரஜினி நலமுடன் இருக்கிறார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ரஜினி குடும்பத்தார் மற்றும் ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் ஆகியோரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனால் உலகமெங்கும் உள்ள ரஜினி ரசிகர்கள் தவறான தகவலை வெளியிட்ட இணையதளம் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

அந்த இணையதளம் பற்றி கடுமையாக விமர்சித்து, நடவடிக்கை எடுக்க கூறி புகார் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கபாலி படத்தின் பாடல் டீசர் இன்று இரவு 8 மணியளவில் வெளியாகவுள்ளது.

இன்று இந்த பாடல் டீசர் வெளியாவதால், ஒரு அளவிற்கு ரஜினி ரசிகர்கள் சமாதானம் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாருக்கும் கிடைச்ச பெருமை தனுஷ்-சிம்புக்கு கிடைக்குமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எம்ஜிஆர்-சிவாஜி… இந்த ஜாம்பவான்களில் வரிசையில் அடுத்தடுத்து தலைமுறை நடிகர்களை ஒப்பிட்டு வருகின்றனர்.

அதன்பின்னர் ரஜினி-கமல் என்று ஆரம்பமானது. இவர்களைத் தொடர்ந்து விஜய்-அஜித், விக்ரம்-சூர்யா என தொடர்கிறது.

இவர்கள் அனைவரும் இந்திய சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் தயாரித்த படங்களில் பணியாற்றியுள்ளனர்.

கிட்டதட்ட 80 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சாதனை படைத்து வரும் இந்நிறுவனத்தில் பணியாற்றியதை இவர்கள் பெருமையாக கருதி வருகின்றனர்.

இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு அடுத்த தலைமுறை போட்டியளார்களாக கருதப்படும் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவருக்கும் இதுவரை கிடைக்கவில்லை.

அந்த பெருமை இவர்களுக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பறந்து செல்ல வா… கபாலி இயக்குனருடன் இணையும் கோபிநாத்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக அருமைச் சந்திரன் தயாரித்துள்ள படம் ‘பறந்து செல்ல வா’.

இப்படத்தில் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, பேராசிரியர் ஞானசம்பந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தனபால் பத்மநாபன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை ஜோஷ்வா ஶ்ரீதர்.

M.V. ராஜேஷ்குமார் எடிட்டிங் செய்ய, சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் சிங்கப்பூரில் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை வருகிற ஜூன் 18, சிங்கப்பூரில் நடத்தவுள்ளனர்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், நியமன உறுப்பினர் கணேஷ் ராஜாராம், முன்னாள் உறுப்பினர் இரா. தினகரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நீயா நானா கோபிநாத் இருவரும் கலந்து கொள்கின்றனர்.

More Articles
Follows