பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தொகுப்பாளர் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மை காலமாக தனியார் விளம்பரங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.

இதனைத் தொடர்ந்து முதன்முறையாக ஒரு தொகுப்பாளராக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகிறார்.
இது பற்றி கமல் கூறுகையில்…

‘என் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறது.

தற்போது, எதிர்மறையாக நான் மற்றவர்களின் அசைவுகளை கண்காணிக்கப் போகிறேன்.

யார் 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்கி இந்த சவால்களை வென்று வெற்றிப் பெற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

நிகழ்ச்சி விதிமுறைகள்…
இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் நூறு நாள்கள் தங்க வேண்டும். போன், இணையம், கடிகாரம், நாளிதழ்கள் இப்படி எந்த தொலைத்தொடர்பு சாதனங்களும் அந்த வீட்டில் இருக்காது.

வீட்டின் கழிவறை, குளியலறை தவிர அனைத்து இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். யார் நூறு நாள்கள் தங்கி இந்தப் போட்டியில் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது தான் போட்டியின் கான்செப்ட்.

இந்த நிகழ்ச்சி ஜீன் 18முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணி

சனி மற்றும் ஞாயிறு இரவு 8.30 மணி

அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை… பிரபாஸ் செய்த பாக்கியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் எத்தனையோ நட்சத்திரங்கள் ஜொலித்தாலும், பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார் பிரபாஸ்.

ஆனால் இப்படத்திற்காக ஐந்து வருடங்களாக இவர் உழைத்த உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற Madame Tussauds மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் பிரபாஸ் அவர்களுக்கு பிரத்யேக சிலை ஒன்றை வைத்துள்ளனர்.

இந்த அருங்காட்சியத்திற்கு வரும் அனைவரும் அதனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

பாகுபலியில் நடித்த பாக்கியம் என்பதை விட வேறென்ன சொல்ல முடியும்தானே.

அஜித்தின் ‘விவேகம்’ இவ்வளவு விலை போக காரணமான மற்றொருவர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இதன் டீசர் மே 18ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இதன் ஹிந்தி சினிமா சாட்டிலைட் உரிமையை GoldMine என்ற நிறுவனம் சார்பில் மனேஷ் பெற்று இருக்கிறார்.

அஜித் படம் பாலிவுட்டில் இதுவரை இந்த விலைக்கு போனதில்லையாம்.

இதற்கு வில்லன் வேடத்தில் நடித்துள்ள விவேக் ஓபராயும் மற்றொரு காரணம் என பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Vivegam movie bollywood rights sold to huge price

தனுஷை நெருங்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் பிரபலமாக உள்ள போதே பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.

மேலும் படங்களை தயாரித்து வந்த இவர் முதன்முறையாக கதை, திரைக்கதை எழுதி பவர் பாண்டி படத்தை இயக்கினார்.

இவரது வழியில் தற்போது விஜய்சேதுபதி தொடர்ந்து வருகிறார்.

இவரும் விரைவில் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில், தனது அடுத்த கட்டமாக ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதவிருக்கிறாராம்.

இப்படத்தை பிஜூ விஸ்வநாத் இயக்க, இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி.

இதற்கு முன்பே, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்காக இயக்குனர் பிஜூ விஸ்வநாத்துடன் இவர் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

விரைவில் தனுஷைப் போல விஜய்சேதுபதியும் இயக்குனர் ஆவார் என்றே எதிர்பார்க்கலாம்.

இவையில்லாமல், ‘புரியாத புதிர்’, ‘மாமனிதன்’, ‘சீதக்காதி’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, ’96’ , ‘அநீதி கண்கள்’, ‘கருப்பன்’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிறது என்பது கவனிக்கத்தக்கது.

Vijay Sethupathi going to write script for new movie

100 பேருக்கு தங்க செயினை சொந்த செலவில் வழங்கிய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகாயுதா சார்பில் தமிழ்த் தேசிய சலனப்படம் 100வது ஆண்டை ஒட்டி 100 மூத்த திரைப்பட தொழிலாளர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கும் விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இதற்கான மொத்த செலவையும் நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டார். மொத்தம் 100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

அதில் முதல் பதக்கத்தை நடிகர் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய இயக்குனர் சீனு ராமசாமிக்கு விஜய் சேதுபதியின் தாயார் வழங்கி கவுரவப்படுத்தினார்.

33 துறைகளை சார்ந்த 99 தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வழங்கினர்.

ஆயிரத்தில் ஒருவன் உட்பட 50 படங்களுக்கு வசனம் எழுதிய வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம் விருது வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டார். விருது வழங்க வந்த அவருக்கும் ஒரு விருதை வழங்கி சிறப்பித்தனர் விழாக்குழுவினர்.

விருது வாங்கிய பின் ஆர்.கே.சண்முகம் பேசும்போது, “எனக்கு வயது 87, மனதளவில் எனக்கு வயது வெறும் 27 தான். அதனால் இங்குள்ளவர்களிலேயே நான் தான் இளைஞன். தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் எதுவும் இப்போது வருவதில்லை.

ஆனால் அதில் ஜனநாதன் விதிவிலக்கு. அவர் ஒரு புரட்சி இயக்குனர். அவரின் பேராண்மை படத்தை நான் ஐந்து முறை பார்த்து ரசித்திருக்கிறேன், நல்ல படங்கள் நிறைய வர வேண்டும்” என்றார்.

பணம் இருப்பனிடம் குணம் இருக்காது, குணம் இருப்பவனிடம் பணம் இருக்காது. இந்த இரண்டும் விஜய் சேதுபதியிடம் இருக்கிறது.

ஜனநாதனிடம் குணம் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை.
பணம் சேர்க்கும் நோக்கமும் இல்லை.

ஜாக்கி சான், அர்னால்டு, ரஜினி, கமல், விஜய், அஜித் பலரும் கலந்து கொண்ட விழாக்கள் சென்னையில் நடந்துள்ளன. அதை விட இந்த விழாவை முக்கியமான விழாவாக நான் கருதுகிறேன். இந்த அரங்கம் நிறையவில்லை என்றாலும் இங்கு வந்துள்ள அனைவரின் மனமும் நிறைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கத்தில் பெரிதாக என்ன வாங்கி விட முடியும் என நினைக்கலாம். அது இத்தனை காலம் சினிமாவில் உழைத்தவர்களுக்கான அங்கீகாரம் என்றார் இயக்குனர் அமீர்.

100 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கும் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசும்போது, “நான் பெரிதாக எதையும் கொடுத்து விடவில்லை.

சினிமா எனக்கு கொடுத்ததில் இருந்து கொஞ்சம் எடுத்து, சினிமாவிற்கு கொடுக்கிறேன். சினிமா தான் என்னை அங்கீகரித்தது. சினிமா தான் எனக்கு எல்லாம். ஒரு ஹீரோவாக நான் நடித்த முதல் படத்திலேயே எனக்கு சினிமா தொழிலாளர்கள் கொடுத்த மரியாதை என்னை ரொம்பவே நெகிழ வைத்து விட்டது.

என்னை கவுரவித்த என் இயக்குனர் ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்கிறேன். இதை கூட அவர் உபயோகப்படுத்த மாட்டார். வேறு யாருக்காவது தான் இந்த தங்கமும் பயன்படும்.

எல்லா கலைஞர்களும் சந்தித்து கொண்ட ஒரு விழாவாக தான் இதை நான் பார்க்கிறேன். இனி வரும் ஆண்டுகளிலும் இது தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்றார்.

விழாவில் மூத்த பத்திரிக்கையாளர்கள் தேவி மணி, கலைப்பூங்கா ராவணன், மாலி, நெல்லை பாரதி ஆகியோரும் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அப்போது பேசிய நெல்லை பாரதி, “ஏற்பது இகழ்ச்சி என்பர், ஆனால் ஏற்பது மகிழ்ச்சி என உணர்கிறேன்” என்றார்.

70 ஆண்டுகளை சினிமாவில் நான் சினிமாவில் நிறைவு செய்திருக்கிறேன் என பெருமிதத்துடன் கூறினார் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன். எடிட்டர் மோகன் தன்னுடைய ஆரம்ப கால சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எடிட்டர் லெனின், வினியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, நடிகை கஸ்தூரி, இயக்குனர் விக்ரமன், இயக்குனர் சீனு ராமசாமி, சுசீந்திரன், இயக்குனர் சேரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் கண்ணன், கன்னட திரையுலகின் சார்பில் கிரிஷ் துவாரகீஷ், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், இயக்குனர் பேரரசு, நடிகை ரோகிணி, தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், நடிகர் ராஜேஷ், இயக்குனர் வி.சேகர், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகர் அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.

பாகுபலி2 படத்தில் நடித்தவர்களின் சம்பளம் முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி2 படம் இந்திய பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது.
இப்படம் பல சாதனைகளை படைத்து, ரூ. 1000 கோடி கிளப்பில் விரைவில் இணையவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்களின் சம்பள விவரம் கிடைத்துள்ளது.
அவை பின்வருமாறு….
பிரபாஸ் ரூ. 50 கோடி
ராணா டக்குபதி ரூ. 25 கோடி
அனுஷ்கா ரூ. 14 கோடி
தமன்னா ரூ. 9 கோடி
சத்யராஜ் ரூ. 4 கோடி
ரம்யா கிருஷ்ணன் ரூ. 3 கோடி
நாசர் ரூ. 1.5 கோடி
இவர்களின் சம்பளமே இத்தனை கோடிகள் என்றால் படத்தின் கேப்டன் டைரக்டர் ராஜமௌலியின் சம்பளம் எவ்வளவு இருந்திருக்கும்? என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

More Articles
Follows