‘என் அண்ணன் ரஜினி பார்த்துப்பார்…’ கமல் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன் அண்மையில் காலமானார்.

அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது, இன்றைய இளம் நடிகர்கள் வைத்திருக்கும் பணம் கூட கமல்ஹாசனிடம் இல்லை என தெரிவித்தார்.

இதுவரை சந்திரஹாசன் கமலின் கணக்கு வழக்குகள் பார்த்துக் கொண்டார்.

இனி அடுத்த அண்ணன் சாருஹாசன்தான் கமலை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ரஜினியின் இந்த பேச்சு குறித்து கமல் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

‘அந்த அண்ணன் இல்லையென்றாலும், இன்னொரு அண்ணனாக ரஜினி இருக்கிறார். அவர் என்னை பார்த்துக்கொள்வார்’ என்றார்.

ஜோக்கர் சிறந்த படம்.. தேசிய விருதுகள் அறிவிப்பு முழு விவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெல்லியில் 64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது.

இயக்குனர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு இந்த படங்கள் இந்தாண்டுக்கு தேர்வு செய்துள்ளது.

தமிழில் சிறந்த படமாக ஜோக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான விருதுக்கு தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த பாடல் ஆசிரியாக வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். (தர்மதுரை படத்தில் உள்ள எந்தபக்கம் என்ற பாடல்)

சிறந்த ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசர் (சூர்யா நடித்த 24 படம்). மேலும் இதே படத்திற்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது கிடைத்துள்ளது.

சிறந்த பாடகருக்கான தேசிய விருது ஜோக்கர் படத்தின் ஜாஸ்மின் பாடலுக்காக சுந்தர அய்யருக்கு வழங்கப்படுகிறது

சிறந்த துணை நடிகை – ஜாய்ரா வாசிம் – டங்கல்

சிறந்த மலையாளத் திரைப்படம்: மகேஷிண்டே பிரதிகாரம்

சிறந்த தெலுங்கு திரைப்படம் – பெல்லி சூப்லு

சிறந்த ஹிந்தி திரைப்படம் – நீர்ஜா

சிறந்த திரைப்படம் கசாவ் (மராத்தி)

24 படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர்

சிறந்த நடிகர் –  ரஷ்டம் திரைப்படத்துக்காக அக்ஷய் குமார்

‘புலி முருகன்’ மலையாளத் திரைப்படத்துக்காக  பீட்டர் கெய்னுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளர் விருது.

தேசிய விருதுகள் பட்டியல்:

சிறந்த படம்: மராட்டிய மொழிப் படம் – காசவ்

சிறந்த இயக்குநர்: ராஜேஷ் மபுஸ்கா – மராட்டிய படம்- வென்டிலேட்டர்

சிறந்த நடிகை: சி.எம்.சுரபி – மலையாளப் படம் மினாமினுகு படத்தில் நடித்தமைக்காக

சிறந்த உறுதுணை நடிகை: ஜாய்ரா வாசிம் – தங்கல்

சிறந்த பாப்புலர் திரைப்படம் – சதாமனம் பவதி (தெலுங்கு)

சிறந்த குழந்தைகள் திரைப்படம் – தனக்

சிறந்த அனிமேஷன் திரைப்படம்- மஹோயோத ரானா (இந்தி)

சிறந்த சண்டை வடிவமைப்பு: பீட்டர் ஹெய்ன் (புலிமுருகன்)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அதீஷ் பிரவீன் (படம்: குஞ்சு தெய்வம்), சாஜ் (படம்: நூர் இஸ்லாம்), மனோகரா (படம்: ரயில்வே சில்ட்ரன்)

சிறந்த பின்னணி பாடகி: இமான் சக்ரபர்த்தி

சிறந்த பின்னணி பாடகர்: சுந்தரா ஐயர் (ஜோக்கர்)

சிறந்த திரைக்கதை (ஒரிஜினல்): ஷ்யாம் புஷ்கரன்

சிறந்த திரைக்கதை (தழுவல்): சஞ்சய் கிருஷ்ணஜி படேல்

சிறந்த நடன அமைப்பு: ராஜூ சுந்தரம் (ஜனதா கார்கே)

சிறந்த இசையமைப்பு: பாபு பத்மநாபா (அலமா)

சிறந்த ஒப்பனை: எம்.கே.ராமகிருஷ்ணா

சிறந்த எடிட்டிங்: ராமேஷ்வர் – வென்டிலேட்டர்

சிறந்த ஒப்பனை: சைக்கிள் திரைப்படத்துக்காக சச்சின் லவேல்கர்

சிறந்த ஒலி வடிவமைப்பு: காடு பூக்கும் நேரம் – ஜெயதேவன் சக்கா தத்

சிறந்த துணை நடிகர்: தசாகிரியா – மராத்தி

சுற்றுச்சூழல் நலன் பேணும் சிறந்த திரைப்படம் – தி டைகர் வூ கிராஸ்ட் தி லேன் (The Tiger who crossed the lane)

சமூக பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படம் – அமிதாப் பச்சனின் ‘பிங்க்’

தேசிய ஒறுமைப்பாட்டை பறைசாற்றியதற்காக நர்கீஸ் தத் விருது பெறும் திரைப்படம்: திக்சோவ் பனாத்

அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது பெறும் சிறந்த திரைப்படம்: அலிபா (வங்கமொழி) இயக்குநர்- தீப் சவுத்ரி

சினிமா துறைக்கு இணக்கமான மாநிலம்: உத்தரப் பிரதேசம்.

காற்று வெளியிடை விமர்சனம்; பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் தயாரித்து இயக்கியுள்ள, காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஜோடியாக நடித்துள்ளார்.

ஏஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

விரைவில் நமது விமர்சனம் வெளியாகும்.

இதுவரை பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள். இதோ…

What a joy it was to watch, feel and get immersed in #ManiRatnam magic again! Each frame, camera move, look, location #kaatruveliyidai

— Prasanna PRSN (@prasannaprsn) April 7, 2017

#kaatruveliyidai bit of alayaipayuthe and Roja … but well made … with ARR bgm movie has fine tuning. Worth watch
— KASILINGAM (@kasilingam_e) April 7, 2017

#KaatruVeliyidai wow lovely movie @Karthi_Offl awesome acting @aditiraohydari very cute watch & feel the magic
— Madurai king bala (@Maduraikingbala) April 7, 2017

#kaatruveliyidai 1st half awesome! Romance, Music, Visuals and performance of @aditiraohydari
— Venkatesh (CRV) (@crvgalatta) April 7, 2017

watching #KaatruVeliyidai Really superb started…@Karthi_Offl screen presence semaa, @ThenandalFilms @MadrasTalkies_
— karthick (@karthicknew) April 7, 2017

FDFS #KaatruVeliyidai. Mindblowing performance by @Karthi_Offl,great cinematography.Mani sir we expected more.
— karthik Ramachandran (@karthikchandran) April 7, 2017

50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பட்டைய கிளப்பிய பைரவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது.

இப்படம் வெளியாவதற்கு முன்பே, இப்படத்தின் டீசர், பாடல்கள் பட்டைய கிளப்பியது.

தற்போது வரை 85 நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படம் ஒரு சாதனை படைத்துள்ளது.

அதாவது. இப்படம் தொடர்பான வீடியோ பாடல்கள், வரிகள் அடங்கிய பாடல் வீடியோ, எல்லா படங்களும் அடங்கிய ஜீக் பாக்ஸ் ஆகியவற்றை சேர்த்து இதுவரை 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம்.

Vijays Bairavaa movie received 50 million views in You tube

‘நல்லது செய்ய மட்டுமே பதவிக்கு வந்தேன்..’ மண்டியிட்டு உருகிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கான பதவியேற்பு விழா, ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது.

தலைவராக பொறுப்பேற்றவுடன் விஷால் பேசியது…

“இது ஒரு மிகப்பெரிய குடும்பம். அதனால் தான் அனைத்து சங்கங்களும் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். மாற்றம் வேண்டும் என்ற நம்பிக்கையால் நாங்கள் வந்துள்ளோம்.

தாணு சார், கேயார் சார், எஸ்.ஏ.சி சார் உட்பட அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி. தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் பிறந்துவிட்டது.

யார் வந்தாலும் நல்லது செய்ய வேண்டும் என்று உழைக்கிறோம். இன்றைக்கு முதல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தயாரிப்பாளர்கள் என்ற முதலாளியை எப்படி காப்பாற்றுவது என்று பேசினோம். நலிந்த என்ற வார்த்தையே இருக்க கூடாது. எங்களுடைய அணி 24 மணி நேரம் உழைக்கப் போகிறது.

உறுப்பினர்களுக்கு பென்சன் தொகையை முதலில் செயல்படுத்தவுள்ளோம்.

தலைப்பு, சென்சார், வரிச்சலுக்கை உள்ளிட்ட அனைத்து விஷயங்களும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொதுவானதாக செயல்படும். திருட்டு விசிடிக்கு எதிராக ஒரு நல்ல விஷயம் நடைபெறவுள்ளது.

அது குறித்த முறையான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

இந்த ஒற்றுமையை வைத்து நிறைய விஷயம் செய்யலாம். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களுக்காக உழைப்பேன்.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணைந்து ஒரு பிரம்மாண்டமான விருது விழா நடத்தவுள்ளோம். இந்தாண்டே அவ்விழா நடத்தி 10 கோடி வரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.

ஒட்டு மொத்த இந்திய திரையுலகம் ஒன்றிணைந்து இளையராஜா சார் நிகழ்ச்சிக்கு ‘இசைவோம்’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தவுள்ளோம்.

இவ்விரண்டு நிகழ்ச்சிகள் மூலமாக சுமார் 15 கோடி வரை இந்தாண்டுக்குள் தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டுவோம்.

அனைத்து சங்கங்கள் இணைந்து செயல்பட்டால் ஆகஸ்ட் மாதத்துக்குள் திருட்டு விசிடி இருக்காது. படம் செய்ய எண்ணம் உள்ள தயாரிப்பாளர் அனைவருக்கும் படம் பூஜைப் போடப்பட்டதிலிருந்து படம் வெளியாகும் வரை என்ன பிரச்சினை என்றாலும் உடன் இருப்போம்.

மானியம் தொடர்பாக பேச தமிழக முதலமைச்சரிடம் நேரம் கேட்போம். 10 ஆண்டுகளாக மானியம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவர் நேரம் கொடுக்கும் போது நேரில் பேசி வலியுறுத்திவோம்.

விஷால் என்பவர் ஏன் போட்டியில் நிற்கவேண்டும். ஏன் 2 பதவிக்கு எனக் கேட்டார்கள். நானும் நிறைய தயாரிப்பாளரிடம் போய் தலைவருக்கு நில்லுங்கள் என்று கேட்டேன்.

ஆனால், இறுதியில் நானே நிற்கவேண்டிய சூழல் வந்துவிட்டது. உங்கள் அனைவருக்கும்…. ” என்று கூறிவிட்டு மேடையில் முட்டிப் போட்டு வணங்கிவிட்டு “சத்தியமாக நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்தேன்” என்று கண்கலங்கி தெரிவித்தார்.

Vishal speech at Tamilnadu Film Producer Council Ceremony

ஒரு சினிமா டிக்கெட்டில் ஒரு ரூபாய்; விவசாயிகளுக்கு உதவ விஷால் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது.

இதில் விஷால் தலைமையில் போட்டியிட்ட ‘நம்ம அணி’ பெருவாரியாக வெற்றி பெற்றதையடுத்து விஷால் சங்கத் தலைவர் ஆனார்.

இதனையடுத்து வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு உதவ விஷால் அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்.

அதன்படி ஒரு சினிமா டிக்கெட் விலையில் தயாரிப்பாளர் பங்கில் இருந்து ஒரு ரூபாய் வழங்கப்பட உள்ளது.

அதாவது, ஒரு நாள், தமிழகத்தில் திரையிடப்படும் அனைத்து திரைப்படம், அனைத்து காட்சி, அனைத்து தியேட்டர் டிக்கெட் விலையில் ஒரு ரூபாய் பெற்று, அதை விவசாயிகளுக்கு கொடுக்க இருக்கிறார்களாம்.

இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுக்கு பல கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From each cinema ticket 1 rupee will spend for Tamilnadu farmers says Vishal

More Articles
Follows