விவேக் படத்தில் *எழடா.. எழடா…* பாடலை பாடிய தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில், நடிகர் தனுஷ் – நடிகர் விவேக் இணை குறிப்பிடத்தக்கது.

இருவரும் இணைந்து நடித்த “படிக்காதவன்”, “உத்தம புத்திரன்”, “மாப்பிள்ளை”, “வேலையில்லா பட்டதாரி 1&2” ஆகிய அத்தனையுமே வெற்றிப் படங்களாகவே அமைந்தன.

இதனால்தான் இந்த ஜோடி தமிழ் சினிமாவின் ராசியான ஜோடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த ராசியான ஜோடியை மீண்டும் ஒருமுறை இணைத்திருக்கிறார் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி. இவர் தற்போது உருவாக்கி வரும் “எழுமின்” திரைப்படத்தில் நடிகர் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பாடலை, தனுஷ் பாடிக் கொடுத்திருக்கிறார். பாடலாசிரியர் தமிழணங்கு வரிகளில் “எழடா.. எழடா” எனத் தொடங்கும் அந்த பாடலுக்கு கணேஷ் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார்.

நடிகர் விவேக், படத்தின் திரைக்கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் உத்வேகம் பொருந்திய இப்பாடலை, தனுஷ் பாடினால் தான் சரியாக அமையும் என பரிந்துரைத்திருக்கிறார்.

அதன்படியே தனுஷ் இந்தப்பாடலை பாடியதாக சொல்கிறார் இயக்குநர் V.P.விஜி.

மேலும், இந்த பாடலுக்கு மட்டுமல்லாமல், படத்திற்கும் தனுஷின் குரல் பலம் சேர்த்திருப்பதாக கூறுகிறார் அவர்.

தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

“வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிறார்.

கணேஷ் சந்திரசேகரன் என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.

Actor Dhanush sings for actor Viveks movie Ezhumin

*8 தோட்டாக்கள்* பட நாயகன் வெற்றி நடிக்கும் *ஜீவி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில நேரங்களில், ஒரு படத்தின் ஜானர் மாதிரியே படப்பிடிப்பும் மிக வேகமாக முடியும். 8 தோட்டாக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் ஜீவி படம் இதை திறம்பட நிரூபிக்கிறது.

ஒரு விறுவிறுப்பான திரில்லர் இந்த படத்திற்கேற்ப, படப்பிடிப்பும் அத்தனை வேகத்தில் ஒரே கட்டமாக முடிக்கப்பட்டிருக்கிறது.

“ஒருவேளை, படத்தின் ஜானரின் பாதிப்பு படப்பிடிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்” என்கிறார் தயாரிப்பாளர் எம்.வெள்ள பாண்டியன். அவர் கூறும்போது…

“எல்லா புகழும் இயக்குனர் வி.ஜே. கோபிநாத் அவர்களுக்கே.

அவர் ஒரு புதுமுக இயக்குனராக இருந்தாலும், அவரது சரியான திட்டமிடல் மற்றும் அதை சமாளித்த அவரது திறமை எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு அறிமுக இயக்குனர் வழக்கத்திற்கு மாறான கதையுடன் அல்லது சிறப்பான கதை சொல்லும் திறனால் ஒரு தயாரிப்பாளரை ஈர்க்கக் கூடும். ஆனால் குறித்த காலத்துக்குள் படத்தை முடித்து கொடுப்பது அரிது.

ஆனால் கோபிநாத் இத்தகைய திறன்களை நிரூபித்தது நினைத்து நான் மகிழ்கிறேன்” என்றார்.

இயக்குனர் வி.ஜே.கோபிநாத் கூறும்போது, “தயாரிப்பாளரின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை.

எனக்கு படைப்பு சுதந்திரத்தை வழங்குவதில் அவர் உண்மையாக செயல்பட்டது என் வேலையை மிகவும் எளிதாக்கியது.

மேலும், அத்தகைய குணங்களை கொண்ட ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது எந்தவொரு இயக்குனருக்கும் ஒரு வரம்.

ஆனால் அதுவே போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளை முடிக்கவும் மற்றும் அவருக்கு உறுதியளித்தபடி முழு படத்தை சிறப்பாக வழங்கும் கூடுதல் பொறுப்பையும் என் தோள்களில் ஏற்றி உள்ளது” என்றார்.

தீவிரமான சஸ்பென்ஸ் விஷயங்களை கொண்ட இந்த ஜீவி, விஞ்ஞானம் மற்றும் உள்ளுணர்வுகளுக்கு இடையே உள்ள மனித உணர்வுகளை பற்றி பேசியிருக்கிறது.

8 தோட்டாக்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்த வெற்றி, வழக்கத்திற்கு மாறான நாயகன் கதாபாத்திரத்தில் மீண்டும் ஒரு முறை நடித்திருக்கிறார்.

மேலும் இயக்குனர் அஸ்வின் நாயகியாக நடித்திருக்கும் மோனிகாவுக்கும் நன்றி கூறுகிறார். “படத்தின் சில காட்சிகளில் இந்த கலைஞர்களிடம் இருந்து திறமையான நடிப்பு தேவைப்பட்டது.

குறித்த நேரத்துக்குள் முடிக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தாலும், அவர்கள் சிறந்த நடிப்பை கொடுத்தனர். மற்ற படங்களில் நடித்து வந்தாலும் நாங்கள் கேட்ட தேதிகளை ஒதுக்கி முழு ஆதரவு தந்தார் நடிகர் கருணாகரன் “என்கிறார் ஜீவி படத்தின் இயக்குனர் கோபிநாத்.

இறுதியாக, ஒளிப்பதிவாளர் பிரவீன் குமாருக்கு நன்றி சொல்லி பேசும்போது, “படப்பிடிப்பு முழுவதும் அவர் பிரதான ஆதரவு தூணாக இருந்தார்.

குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய அழுத்தத்தில் நாங்கள் இருந்தபோது, அவரது பங்களிப்பு தான் எங்களுக்கு சிறப்பாக படத்தை முடிக்க உதவியது” என்றார்.

தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் பிரவீன் கே எல் எடிட்டராக பணிபுரிவதும், சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைப்பதும்,படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும். பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் லைன் ப்ரொடுயூசராக முழு ஈடுபாட்டுடன் பணிபுரிவது படத்துக்கு பலம்.

பாபு தமிழ் எழுதிய திரைக்கதை மற்றும் வசனம் படத்தின் தரத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.

A Racy Thriller By Genre Jiivi movie wrapsup Shoot

பகலில் கஜினிகாந்த்; இரவில் முரட்டு குத்து… சந்தோஷை கலாய்த்த ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள கஜினிகாந்த் அடுத்த மாதம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து பட புகழ் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யா, சாயிஷா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

அப்போது ஆர்யா பேசும்போது…

ஞானவேல்ராஜா என்னிடம் கால்ஷீட் கேட்ட உடனே ஓகே சொல்லிவிட்டேன். அதன்பின்னர் யார் டைரக்டர் என்று கேட்டேன்? நம்ம சந்தோஷ்தான் என்றார்.

ஆனால் சந்தோஷ் அவர்களோ இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை அப்போது இயக்கி கொண்டிருந்தார். அவர் உடனே எப்படி கஜினிகாந்த் படத்தை தொடங்க முடியும் என்று கேட்டார்.

அதற்கு ஞானவேல்ராஜாவே.. அந்த படத்தை இரவில் சூட்டிங் செய். இந்த கஜினிகாந்த் படத்தை பகலில் சூட்டிங் செய் என்றார்.

அதுபோல் மாறி மாறி இரண்டு படங்களையும் சூட்டிங் செய்தார் சந்தோஷ்.

ஹீரோக்கள் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கலாம். ஆனால் ஒரு டைரக்டர் எப்படி இரண்டு படங்களை ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

நானே எப்படிடா? இப்படி செய்கிறாய்? என்று கேட்டேன். அவன் வாட்ஸ் அப் இருக்கிறது. பக்கா ப்ளான் இருக்கிறது. செய்கிறேன் என்றான்.

அப்படி ஒரு திட்டமிட்டு எல்லாத்தையும் செய்கிறான்.

சாயிஷா நடனத்தில் செம. நான் இரண்டு மணி நேரம் பயிற்சி செய்வேன். அவர் அசால்ட்டாக 5 நிமிடத்தில் செய்துவிடுவார்.

மாஸ்டர் பாபா பாஸ்கர் சார் என்னை ஆட வைக்க சிரமப்பட்டார். நான் என்னைப் போல் சாயிஷாவை ஆட சொல்லுங்கள்” என்றேன்.

ரஜினி ரசிகருக்கு அம்மாவாக நடிக்கனும்; இம்சை அரசி சித்ரா காஜலின் ஆசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாட்ஸ் அப்பால் பலர் வாழ்க்கையை இழந்தாலும் சிலருக்கு அதுவே வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறது.

அதாவது ஜிமிக்கி கம்மல், பிரியா வாரியர், பிஜிலி ரமேஷ் என பலர் இதனால் பிரபலமாகியுள்ளனர்.

அதுபோல் சமீபகாலமாக இளைஞர்கள், இளம் பெண்களின் இம்சை அரசியாக மாறியிருப்பவர் சித்ரா காஜல்.

டப்ஸ் மாஸ் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகை என கூறியிருக்கிறார்.

மேலும் விஜய், விஜய் சேதுபதியை மிகவும் பிடிக்குமாம்.

இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசையாம்.

அத்துடன் ராகவா லாரன்ஸ்க்கு அம்மாவாக ஒரு முறையாவது நடிக்க வேண்டும்.

அடுத்த ஜென்மத்தில் அவர் எனக்கு பிள்ளையாக பிறக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

நடிகர் லாரன்ஸ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

*அடங்காதே* பட டப்பிங்கை தொடங்கிய சரத்குமார்-ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அடங்காதே’.

இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார்.

மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது டப்பிங் பணியை இன்று தொடங்கி இருக்கிறார்கள்.

இதில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் சரத்குமார் தங்களது காட்சிக்கான டப்பிங்கை பேசியுள்ளனர்.

ஸ்ரீ கிரீன் புரோடக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாகவும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகவும் உருவாக்கி இருக்கிறார்கள்

மம்முட்டிக்கு மகனாக நடிப்பாரா கார்த்தி..? காத்திருக்கும் *யாத்ரா* குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக பிரபலங்கள் வாழ்க்கை வரலாறு நிகழ்வுகள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.

அதுபோல் ஆந்திர முன்னாள் முதல்வரான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதை தெலுங்கில் யாத்ரா என்ற பெயரில் படமாக உருவாகி வருகிறது.

இதில் ஒய்.எஸ்.ஆர். வேடத்தில் நடிக்கிறார் மம்முட்டி.

மகி. வி. ராகவ் இயக்கிவரும் இப்படத்தை அடுத்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட உள்ளனர்.

ஒய்.எஸ்.ஆரின் மகனான ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் வேடத்தில் நடிக்க இதுவரை எவரும் முன்வரவில்லை.

ஜெகன் கேரக்டர் கார்த்திக்கு பொருத்தமாக இருக்கும் அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இதுவரை கார்த்தியிடம் இருந்து பதில் வரவில்லை என்பதால் யாத்ரா யூனிட் காத்திருக்கிறதாம்.

தெலுங்கு சினிமாவில் கார்த்திக்கு நல்ல பெயர் உள்ளதால் அவர் ஒப்புக் கொள்வார் என ஒரு தரப்பு கூறினாலும், இது அரசியல் சார்ந்த படம் என்பதால் அவர் மறுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Will Karthi teams up with Mammootty in Yatra movie

More Articles
Follows