துரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திட்டமிட்ட படியே படப்பிடிப்பை துரித வேகத்தில் நடத்துவதும், முடிப்பதும் இன்றைய காலக் கட்டத்தில் ஒரு மறைந்து போன திறமையாகவே ஆகி விட்டது என பல தயாரிப்பாளர்கள் ஆதங்கதோடு தங்கள் வலியை உணர்த்தி இருக்கிறார்கள். ஆதி நடிப்பில் உருவாகும் “க்ளாப்” முற்றிலும் மாறுபட்ட செய்தியை கொண்டு இருக்கிறது..

பிக் பிரிண்ட் pictures சார்பில் I B கார்த்திகேயன் தயாரிக்க, ஆதி நடிப்பில், பிருதிவி ஆதித்யா இயக்கத்தில்,உருவாகும் “க்ளாப்” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்ததை பற்றி தயாரிப்பாளர் I B கார்த்திகேயன் பெருமிதத்தோடு கூறுகிறார்.
” எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. இதன் மூலம் இந்த படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்ட படியே , துரித வேகத்தில் இதை செய்து முடித்ததற்கு இயக்குனர் பிருதிவி ஆதித்யா , மற்றும் அவரது குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவருக்கு சிறப்பாக ஒத்துழைத்த கதாநாயகன் ஆதி, கதாநாயகி அகன்ஷா சிங், கிருஷ்ணா குரூப்,நாசர் சார்,பிரகாஷ் ராஜ் சார், முனீஸ்காந்த், mime கோபி , மற்றும் எல்லோரும் இந்த பாராட்டுக்கு உரியவர்கள்..
அறிமுக இயக்குனர்கள் எல்லோருமே கதை சொல்லும் விதத்திலும், அதை நேர்த்தியாக படமாக்குவதிலும் திறமையானவர்களாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அதை திட்டமிட்டு, தரம் கெடாமல்.துரித நேரத்தில் முடிப்பது மட்டுமே அந்த இயக்குனரின் முழுமையான திறமை ஆகும். அந்த வகையில் இயக்குனர் பிரித்திவியை அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் என்கிற முறையில் எனக்கு பெருமையே. நான், படமாக்கிய சில பகுதிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். செப்டம்பர் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக, ஏராளமான பொருட்செலவில் ஒரு தடகள ஸ்டேடியம் உருவாக, அங்கே தொடங்குகிறது. ஒரு கட்ட படப்பிபடிப்பு மட்டுமே முடிந்த நிலையில் எல்லோரையும் பாராட்டுவது மிகையாக தோன்றினாலும் அந்த பாராட்டுக்கு உரியவர்கள் இந்தப் படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் .இசை ஞானி இளைய ராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பதே மிக மிக பெருமை” என்றுக் கூறினார்.

பிரவீன் குமார் ஒளிப்பதிவில், ராகுல் படத்தொகுப்பில், வைர பாலன் கலை வண்ணத்தில் , தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் “க்ளாப்” இந்த வருடத்தின் மிக மிக எதிர்பார்க்க படும் படம் என்றால் மிகை ஆகாது.

அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், மற்றும் சிறந்த திரைகதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்று சாதனை படைத்து, அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் மெல்பர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய திரைப்பட விழாவில் பங்குபெற்று, சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.
ஏற்கெனவே, தியாகராஜன் ஸ்ரீராம் ராகவனின் ஜானி கத்தார் திரைப்படத்தை ஜானி என்ற பெயரில் பிரஷாந்த் நாயகனாக நடிக்க ரீமேக் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தியாகராஜன் பேசுகையில், ‘அந்தாதுன் கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. நடிகர் பிரஷாந்த் லண்டன் டிரினிடி இசைக் கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைத்தேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இந்த கதாபாத்திரம் அவருக்கு கைவந்த கலையாக இருக்கும்’ என்றார்.
தமிழ் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ள இப்படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்றாலும் இயக்குனர், பிற நடிகர்கள், தொழிட்நுட்ப வல்லுனர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படக்குழு முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பும் துவங்கவிருக்கிறது.

“சீறு” திரைப்படத்தின் first look வெளியீடு-விஜய் சேதுபதி வெளியிட்டார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெகு சில நடிகர்களே எல்லா வகையான கதாபாத்திரங்களை ஏற்று பெயரையும் புகழையும் ஈட்டிக் கொள்வர். அந்த வரிசையில் முதன்மையான நடிகர் ஒருவர் என்றால் ” ஜீவா” என்றால் மிகை ஆகாது. இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் , வேல்ஸ் பிலிம் international சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், உருவாகும் “சீறு” ஜீவாவின் நடிப்பு திறமைக்கு ஏற்ப அமைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது. ஒரு மாஸ் நடிகராக ஜீவா அவதரிக்கும் இந்தப் படம் ஜீவாவை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் மாதம் வெளி வர உள்ள “சீறு” படத்தில் ஜீவாவுக்கு இணையாக புதுமுகம் ரியா சுமன் நடிக்க, நவதீப் வில்லனாக நடிக்கிறார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில், கே சம்பத் திலக் கலை வண்ணத்தில், கே கணேஷ் குமார் சண்டை காட்சி அமைக்க, ராஜு சுந்தரம் நடனம் அமைக்க, விவேகா பாடல் இயற்ற , ஏராளமான பொருட் செலவில் உருவாகும் “சீறு” இந்த வருடத்தின் முக்கியமான படமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கைகொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக சாதனை ஓவியம் ஒன்றை உருவாக்கினர்.

இந்த சாதனை ஓவியத்தை துவக்கி வைத்தவர் திரையுலக கலைஞன் மக்கள் செல்வன் திரு. விஜய் சேதுபதி அவர்கள்.

இந்திய ஜனநாயக நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றிய டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவப்படத்தை 7000 சதுர அடியில் 100 திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஓவியமாக வரைந்து Wonder Book of உலக சாதனை படைத்தது.

இது குறித்து பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ‘டாக்டர் அம்பேத்கர் அவர்களின் படத்தை வரைய காரணம், பாலின சமத்துவத்தை பற்றி பேசிய ஒரே சுதந்திர போராட்ட வீரர் அண்ணல் ஒருவரே ஆவார். ஆகவே, அவரின் உருவப்படத்தை வரைவதில் எங்களுக்கு பெருமையான தருணமாகவே எண்ணுகிறோம்.

திருநங்கைகளை கேலி கிண்டலுக்கும் உருவாக்கும் அந்த சமூக மக்களுக்கு பாலின சமத்துவத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வரும் விதத்தில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், இந்த சாதனை நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு எங்களது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

BREAKING கலைஞானத்திற்கு அரசு சலுகை வேண்டாம்; நான் பாத்துகிறேன்.. ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1970 முதல் 1990 வரை வெளியான பல தமிழ் படங்களுக்கு கதாசிரியராகவும் பல படங்களின் திரைக்கதைகளிலும் பங்காற்றியவர் கலைஞானம்.

பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், பாக்யராஜ் என அனைவரின் படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

இவர்தான் ரஜினி முதன்முறையாக ஹீரோவாக நடித்த பைரவி படத்தை தயாரித்தார்.

இவர் திரையுலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இன்று ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாராட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு பேசினார்.

நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் ஆசைப்பட்டதில்லை. ஒரு பைக், வீடு என சந்தோஷமாக இருக்கவே நினைத்தேன்.

வில்லனாக நடித்துக்கொண்டிருந்த போது திடீரென ஹீரோவாக நடிக்க அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன்.

பைரவி படத்தில்தான் எனக்கு முதன்முதலில் கிரேட் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

நான் வேண்டவே வேண்டாம் என கூறினேன். கிரேட் என்ற வார்த்தையை வேண்டுமானால் எடுப்பேன். ஆனால் சூப்பர் ஸ்டார் பட்டத்தை எடுக்க மாட்டேன் என மறுத்தார் கலைஞானம்.

அதன்பின் அவர் என்னை வைத்து படம் எடுக்கவில்லை. அவரும் கேட்கவில்லை. நானும் கேட்கவில்லை.
பின்னர் அருணாச்சலம் பட லாபத்தில் ஒரு பங்கை கொடுத்தேன்.

படம் முடிவடைந்த பிறகு இயக்குனர், தயாரிப்பாளர் பெயர்களை டைட்டில் போடும்போது கதாசிரியரின் பெயரையும் போட வேண்டும் என தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

என்னுடைய சூப்பர் ஹிட்டான பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களின் கதாசிரியர் யார்? என்பது கூட பல பேருக்கு தெரியாது.

கதாசிரியர் கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கும் தகவல் இப்போதுதான் எனக்கு தெரிகிறது.

சிவகுமார் மூலமாக அதை தெரியப்படுத்திய ஆண்டவனுக்கு நன்றி.

கலைஞானத்திற்கு வீடு வழங்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறிய அமைச்சருக்கு நன்றி.

அந்த சிரமத்தை அரசுக்கு கொடுக்கவிரும்பவில்லை. நானே கலைஞானத்திற்கு வீடு வாங்கித் தருகிறேன்.

பாரதிராஜா நீங்கள் ஒரு வீடு பாருங்கள். கலைஞானத்தின் கடைசி மூச்சு என் வீட்டில்தான் போக வேண்டும்” என பேசினார் நடிகர் ரஜினிகாந்த்.

Rajinikanth speech at Kalaignanam 50th function held in chennai

கின்னஸ் சாதனை செய்து தமிழருக்கு பெருமை சேர்த்த ஆர்கே.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹேர் ‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்கு தீர்வு காணும் விதமாக, அதற்கு மாற்றாக எளிமையாக பயன்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது விஐபி ஹேர் கலர் ஷாம்பூ.

இந்த புதிய தயாரிப்பை கண்டுபடித்தது சாட்சாத் ஒரு சினிமா நடிகர் என்றால் நம்ப முடிகிறதா..? ஆம்.. எல்லாம் அவன் செயல் படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆர்கே தான் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.

இவரது புதிய கண்டுபிடிப்பான விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை உலக மார்க்கெட்டில் சந்தைப்படுத்துவதற்காக இதன் நம்பகத்தன்மையை உலக அரங்கில் நிரூபிப்பதற்காக மிகப்பெரிய கின்னஸ் சாதனையை இந்த சுதந்திர தினத்தன்று (ஆக-15) சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள EVP பிலிம் சிட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

சரியாக 1014 நபர்களை ஒரே இடத்தில் ஒன்று கூட்டி ஒரே சமயத்தில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை அவர்களைப் பயன்படுத்தச் செய்து, அதன்மூலம் இதன் தரத்தை உறுதி செய்வது என்பதுதான் இந்த சாதனையின் நோக்கம்.

இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை வெறும் கையால் தொட்டு பயன்படுத்திவரும் 1014 பயன்பாட்டாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை மேற்பார்வை செய்த ஆறு நடுவர்களில் இரண்டு பேர் லண்டனில் இருந்து வருகை தந்திருந்தனர்.

மீதி நான்கு நடுவர்களும் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய பிரபலங்கள்.. அந்தவகையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கரீஷ்மா கபூரும் கலந்துகொண்டார்.

இந்த கின்னஸ் சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பயன்பாட்டாளர்களும் இதில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் தானா என்று நடுவர்கள் குழுவின் நீண்ட சோதனைகளுக்குப் பின்னரே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் நடிகர் ஆர்.கே.விடம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 1014 பேருக்கும் இந்த கின்னஸ் சான்றிதழ் தனித்தனியாக வழங்கப்படும்..

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் இந்த கின்னஸ் சாதனை நிகழ்வு பற்றி பேசிய நடிகை கரிஷ்மா கபூர், “இந்த சுதந்திர தின நாளில் ரக்சா பந்தன் கொண்டாட்டத்தில் சென்னை வந்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சி தருகிறது.

மேலும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் உபயோகித்து கின்னஸ் சாதனை செய்த இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து வியந்துபோனேன்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இந்த ஷாம்பூவை உபயோகித்து தங்கள் கைகளில் எதுவும் கறை எதுவும் படியவில்லை என கைகளை உயர்த்திக் காண்பித்தபோது நிஜமாகவே பிரமித்துப் போனேன்.

இப்படி ஒரு செயலை ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்” என்றார்.

நடிகர் ஆர்கே பேசும்போது, ‘வெளிநாட்டில் இருந்து எத்தனையோ தயாரிப்புகள் வந்துள்ளன.. இந்தியாவில் ஒரு புதிய டெக்னாலஜியுடன் ஒரு தயாரிப்பைக் கண்டுபிடித்து, உலகம் முழுவதும் பிரஷ், பவுடர் பயன்படுத்தி டை அடித்துக் கொண்டு இருந்தவர்களை ஹேர் கலர் ஷாம்பூ என்கிற எளிய பயன்பாட்டிற்கு அழைத்து வந்ததில் பெரிய சாதனை படைத்துள்ளோம்.

வெளிநாட்டிற்கு இந்த புதிய கண்டுபிடிப்புகள் சென்றபோது இந்தியாவில் கண்டுபிடித்ததா, அதுவும் தமிழ்நாட்டில் கண்டுபிடித்ததா, கைகளில் ஒட்டாதா என எதையும் நம்பாமல் சந்தேகத்துடனேயே கேட்டனர்.

இதுவரை அவர்கள் தாங்கள் கடினமாக உபயோகித்து வந்த முறைக்கு மாற்றாக, எளிமையான ஒரு விஷயத்துடன் வியாபாரத்தில் நாங்கள் குதிப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனாலேயே சந்தேகப்பட்டார்கள். எல்லாரும் கேள்வி கேட்கிறார்கள்.

அவர்களின் சந்தேகத்தை போக்குவதற்காகவே என்ன செய்யலாம் என நினைத்தபோது, உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த கின்னஸ் சாதனையை முயற்சிக்கலாமே என்கிற எண்ணம் தோன்றியது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெறும் கைகளில் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவை எடுத்து தங்கள் நரை முடி உள்ள இடங்களில் தடவி, தங்கள் முடி கருப்பானதையும், கைகளில் கறை படியாததையும் காட்டியதன் மூலம் இந்த கின்னஸ் சாதனை வெற்றி பெற்றுள்ளது.

உலக அளவில் சுமார் 40 நாடுகளில், ஒரு தமிழனுடைய தயாரிப்பால் அங்கு உள்ளவர்களின் தலைமுடியை கருப்பாக மாற்றுவதற்கு என்னால் ஏற்றுமதி செய்ய முடியும், அந்த வியாபாரத்தை இந்தியாவிற்கு எடுத்து வரமுடியும் என்கிற மிகப்பெரிய போராட்டத்தினுடைய ஒரு மைல்கல் தான் இந்த சாதனை.

கைகளில் கிளவுஸ் அணியாமல் இப்படி ஹேர் டை பயன்படுத்துகிறீர்களே, இது சரியானதா என்று என்னிடம் கேட்டார்கள். மிகவும் சென்சிட்டிவான பகுதியான தாடி மற்றும் மீசை அமைந்துள்ள உதட்டு பகுதியில் அதிக அளவில் கெமிக்கல் கலந்த டையைத்தான் இதுவரை பயன்படுத்தி வந்துள்ளோம் கைகளுக்கு கையுறை அணியவில்லையா என்று கேட்கும் நீங்கள் உதடுகளுக்கு எந்த கிளவுஸ் போடுவீர்கள்,..?

அப்படி சில ஹேர் கலர் டை உதடுகளில் பட்டு இறந்தவர்கள் எத்தனை பேர் என அவர்களிடம் கேட்டேன்.இந்தியனாய், தமிழனாய் ஒரு புதிய தயாரிப்பை எடுத்துக்கொண்டு போகும்போது, அதை சரி என்று நிரூபிப்பதற்கு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து ஒரு தயாரிப்பை இந்தியாவில் கொண்டு வந்து விற்கும்போது அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே நாம் கேட்டுக்கொள்கிறோம்..

ஆனால் நாம் இங்கிருந்து தயாரிப்புகளை எடுத்துச்செல்லும்போது எண்ணற்ற கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்/ அமெரிக்காவில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் இந்தியாவிற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் இந்தியாவில் இருக்கின்ற செருப்பு தொழில் செய்து கொண்டிருக்கிற ஒரு தொழிலதிபர் வெளிநாட்டிற்கு செல்வது என்பது கடினமாக இருக்கிறது.. இதுதான் உண்மை.

இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்துவதற்கு இந்த தேதியை (ஆக-15) நான் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் வெள்ளையனே வெளியேறு என்ற சுதந்திரத்திற்காக போராடியது போல், நம் தலையில் இருந்து நிரந்தரமாக வெள்ளைக்காரர்கள் போல ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த வெள்ளை முடிகளையும் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளோம்.

இந்த சாதனை இந்தியாவின் சாதனை.. இந்த உலக நாடுகளில் எங்களுடைய உழைப்பையும் எங்களுடைய வியர்வையையும் எடுத்துச்சென்று, தமிழன் தலை நிமிர்ந்து நிற்பான் என்பதற்கு உதாரணமாக இந்த படைப்பை கொண்டு செல்கிறோம்” என்கிறார் ஆர்கே பெருமையுடன்.

Actor Rkay made Guinness World Record in VIP Hair color shampoo

More Articles
Follows