ரஜினி-ஷங்கரின் ‘2.0’ படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது லைக்கா நிறுவனம்.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இணையங்களில் ட்ரெண்ட் ஆனது.

இப்படத்தின் மீதமுள்ள காட்சிகளை ஜனவரி 30 தேதி முதல் படமாக்க இருக்கிறாராம் ஷங்கர்.

மார்ச் மாதம் முடிவடைவதற்குள் இதன் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

இதனையடுத்து கிட்டதட்ட 6 மாதங்களுக்கு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற உள்ளது.

2017 அக்டோபர் 19ஆம் தேதி தீபாவளி வெளியீடாக படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2point0 movie post production updates

கீர்த்தி சுரேஷால் ஸ்ரீ திவ்யாவுக்கு வந்த நிலைமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இதனையடுத்து விரைவில் சூர்யாவுடன் டூயட் பாடவிருக்கிறார்.

மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கிளாமரே காட்டாமல், தன் அழகான நடிப்பால் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.

இவரது வளர்ச்சி ஸ்ரீதிவ்யாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே கிளாமர் ரூட்டுக்கு மாறலாமா என யோசித்து வருகிறாராம் ஸ்ரீ திவ்யா.

ஜெயம் ரவி-ஜெய் உடன் மோதும் நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி, அர்விந்த் சாமி நடித்துள்ள போகன் படம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகிறது.

இதே நாளில் மகேந்திரன் ராஜா மணி இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படங்களுடன் மோத தயாராகிவிட்டார் நயன்தாரா.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள டோரா படத்தில் இடம்பெற்றுள்ள ரா ரா ரா என்ற பாடலை பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்களாம்.

விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இப்பாடலை அனிருத் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சற்குணம் தயாரித்துள்ள இப்படத்தை தாஸ் ராமசாமி இயக்கியுள்ளார்.

Nayantharas Dora Single track clash with Jayam Ravi and Jai movies

’எம்ஜிஆருக்கும் பாக்யராஜீக்கும் உள்ள ஒற்றுமைகள்..’ – பேரரசு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜிப்ஸி ராஜ்குமார் இயக்கத்தில் பாக்யராஜ், பொன்வண்ணன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் அய்யனார் வீதி.

சாட்டை யுவன் நாயகனாகவும், ஷாரா ரெட்டி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சிங்கம்புலி, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

யு.கே.முரளி இசையமைக்க சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீசாய் சண்முகா பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் ஐகோர்ட் நீதிபதி, நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குனர் பேரரசு, தயாரிப்பாளர்கள் தானு, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இதில் கலந்துக் கொண்ட இயக்குனர் பேரரசு பேசும்போது…

“எம்ஜிஆருக்கும் பாக்யராஜ்க்கும் சில ஒற்றுமைகள் உண்டு.

இருவரையுமே பெண்களுக்கு அதிகம் பிடிக்கும்.

பாக்யராஜை எம்ஜிஆர் தன் திரையுலக வாரிசாக அறிவித்தார்.

இதற்கு மற்றொரு காரணமும் இருக்கும் என நம்புகிறேன்.

எம்ஜிஆர் தன் படங்களில் தாயை உயர்வாக சித்திரித்து இருப்பார். அவரது பெரும்பாலான படங்களின் தலைப்புகளில் தாய் என்ற வார்த்தை இருக்கும்.

அதுபோல் பாக்யராஜ் தன் படங்களில் தந்தையை உயர்வாக சித்தரித்து இருப்பார். இதுவும் ஒரு காரணம் என நான் நம்புகிறேன்.” என்று பேசினார்.

Perarasu speech about MGR and Bhagyaraj at Ayyanar Veethi press meet

ஏப்ரல் மோதலுக்கு தயாராகும் சிம்பு-தனுஷ்-கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் காற்று வெளியிடை.

இதன் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இத்துடன் மோத அடுத்த வாரமே சிம்பு, தனுஷ் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (ஏஏஏ) படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிய வந்துள்ளது.

இதே நாளில் தனுஷ் இயக்கி தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படமும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

எனவே விடுமுறை தொடங்கியது முதல், ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

Karthi Simbu Dhanush movies release in April 2017

ரஜினி படத்தயாரிப்பாளருடன் இணையும் மோகன்லால்-விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியாகி கேரளாவை அதிர வைத்த படம் புலி முருகன்.

ரூ. 30 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் 150 கோடி வரை வசூலித்துள்ளது.

இதனையடுத்து, உன்னி கிருஷ்ணன் என்பவர் இயக்கும் புதுப்படத்தில் நடிக்கவிருக்கிறார் மோகன்லால்.

இதில் விஷால் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறாராம்.

இதன் மூலம் இவர் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை ரஜினியின் லிங்கா படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறாராம்.

Vishal malayalam debut movie with Mohanlal

More Articles
Follows