தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் படி அக்டோபரில் 18 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதி கடிதத்தை பெற்ற பிறகே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் என நடைமுறை அமுலில் உள்ளது.

அதன் அடிப்படையில் இந்த அக்டோபர் மாதம் கிட்டதட்ட 18 படங்களை தேதி நிர்ணயித்து தயாரிப்பாளர் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் படங்களின் விபரம் வருமாறு

அக்டோபர்: 96

அக்டோபர்: ராட்சசன், நோட்டா

அக்டோபர் 12 : ஆண் தேவதை, கூத்தன், மரகதகாடு, முகம், நட்புன்னா என்னனு தெரியுமா, காட்டுப்புறா

அக்டோபர் 17 : வடசென்னை,

அக்டோபர் 18 : சண்டக்கோழி 2, எழுமின், அண்டாவ காணோம், திருப்பதி சாமி குடும்பம்,

அக்டோபர் 26 : உத்தரவு மகாராஜா, வாண்டு, மாணிக், ஜருகண்டி

தயாரிப்பாளர் கில்டு உறுப்பினர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது. எனவே அந்த சங்கத்தின் விதிப்படி அந்த உறுப்பினர்கள் தயாரித்துள்ள படங்களும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

பேட்ட சூட்டிங்கில் ரஜினியிடம் பேசுவதை தவிர்க்கும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, த்ரிஷா இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 96 படம் அக். 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இவர்கள் இருவரும் பேட்ட படத்திலும் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்சேதுபதியின் அண்மை பேட்டியில் ரஜினியுடன் நடித்தது பற்றி தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் நடிப்பதே மகிழ்ச்சி தான் அது எந்த வேடமாக இருந்தாலும்.

அவருடன் வில்லனாக நடித்தது வருத்தம் இல்லை

40 வருடமாக சினிமாவில் இருக்கிறார் ரஜினிகாந்த். கார்த்திக் சுப்பராஜின் குடும்பமே ரஜினியின் விசிறிதான். இருந்தபோதிலும் டைரக்டர் சார் என்றே அழைக்கிறார் ரஜினி.

நேற்று தான் சினிமாவிற்கு வந்தது போல வேலை பார்க்கிறார். செட்டில் அவருடன் பேசும்போது பயம் இருக்கும்.

அவரிடம் பேசினால் நம்மையும் மீறி ரஜினி ஸ்டைல் நமக்கும் வந்து விடுகிறது. அதனால் அவரிடம் பேசுவதை கொஞ்சம் குறைத்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

என்ஜிகே அப்டேட்ஸ்: குரு பெயர்ச்சிக்கு பிறகு குணமா வாயால சொல்லனும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் என்ஜிகே.

இப்படம் 2018 தீபாவளி வெளியீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு பின்னர் தள்ளிபோனது.

செப்டம்பரில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த படம் எப்போது வெளியாகும் என அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

எனவே சூர்யா ரசிகர்கள் செம கடுப்பில் உள்ளனர்.

இந்நிலையில் அக்டோபரில் கண்டிப்பாக என்ஜிகே பற்றி அப்டேட் இருக்கும் என தகவல்கள் வந்துள்ளது.

மேலும், குரு பெயர்ச்சிக்கு அப்புறம் எல்லாரும் குணமா வாயால சொல்லனும் முருகா” என்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ அவதாரம் எடுக்கிறார் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி.யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு சாம்பியன் பட்டம் வென்றர் செந்தில் கணேஷ்.

இவருக்கு தற்போது சினிமாவில் பின்னணி பாட வாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

இதுவரை சீமராஜா, சார்லி சாப்ளின் உள்ளிட்ட ஓரிரு படங்களில் பாடியும் விட்டார்.

இந்நிலையில் தற்போது கரிமுகன் என்ற திரைப்படத்தில் முழு ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பாடல்களை அவரே பாடுவதாக கூறப்படுகிறது.

காயத்ரி ஐயர் என்பவர் நாயகியாக நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை செந்தில்கணேஷ் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பரபரப்பை ஏற்படுத்தி வரும் *PV 999* படம் நடிகை ஸ்ரீரெட்டியின் கதை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொதுவாக பெண்கள் பிரச்சினையை அணுகுவதாகக் கூறும் படங்கள் வணிக நோக்கில் பெண்களைக் கவர்ச்சியாகக் காட்டுவார்கள்.

ஆனால் நாட்டில் பற்றி எரியும் பாலியல் கொடுமை பற்றியும் தொழில்நுட்ப வளர்ச்சியால் நிகழும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்தும் பேசும் ஒரு படம் கண்ணியமாக துளியும் ஆபாசக் கலப்பின்றி உருவாகியுள்ளது.

அப்படம் ‘பென் விலை வெறும் ரூபாய் 999’. சுருக்கமாக ‘PV999 ‘.

இப்படத்தை அறிமுக இயக்குநர் வரதராஜ் இயக்கியுள்ளார். இவர் அடிப்படையில் ஒரு எடிட்டர்.

விளம்பரப் படங்கள் ஆவணப்படங்கள் என்று பணியாற்றியவர். ஒளிப்பதிவு சதீஷ்குமார் – மோகன் , இசை ஜூடோ சாண்டி, கலை ஜனார்த்தனம், நடனம் அர்ச்சனா, வசந்த் குமார்.

“சமூகத்தில் ஆணுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு உண்டு. ஆனால் பெண்களை ஒருபோதைப் பொருளாகேவே சமுதாயம் பார்க்கிறது.

ஆண்களிடம் பெண்கள் பற்றிய பார்வை மாறியுள்ளது. அவர்கைளைச் சக மனுஷியாக நினைக்க வேண்டும் ,மதிக்க வேண்டும். நட த்த வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது ” என்கிறார் இயக்குநர் வரதராஜ்.

இதில் நடித்த நடிகர் நடிகைகளை முண்ணணி நடிகர், நடிகையர் அறிமுகப்படுத்த உள்ளனர்.

அக்டோபரில் பாடல்கள் வெளியாகவுள்ளன. நவம்பரில் திரைக்கு வரவிருக்கும் இந்த ‘பென் விலை வெறும் ரூபாய் 999 மட்டுமே’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மாதர் சங்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதற்கு எதிராக கருத்துகளும் பரவின.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் மோஷன் போஸ்டரை வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

பெண்ணியம் பேசும் வரலட்சுமி தரப்பிலிருந்து வெளிவந்ததால் இது பெண் பாதுகாப்பு சம்பந்தமான படம் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இதற்கிடையில் சமீபத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் நடிகை ஶ்ரீரெட்டியின் கதை தான் இது என்றும் திரைத்துறை வட்டாரங்களில் பேச்சு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே ஶ்ரீரெட்டியின் கதை அவர் நடித்து தயாராக உள்ள நிலையில் இப்படமும் அதே |கதையாக இருக்குமோ என்கிற பரபரப்பும் நிலவுகிறது.

படத்தின் கதை தான் எது? என்றால் படம் வரட்டும் பாருங்கள் என்று கண் சிமிட்டுகிறார் இயக்குநர்.

படத்தை “ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்” – ஜெனீஷ் வெளியிடுகிறார்.படத்தை ரெயின்போ புரொடக்ஷன்ஸ் சார்பில் சங்கர் மற்றும் டீம் தயாரித்துள்ளனர்.

பல நட்சத்திரங்கள் மின்னிய செக்கச் சிவந்த வானம் பட வசூல் நிலவரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மின்னியது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் செமயான வரவேற்பை பெற்றுள்ளது.

நேற்றோடு இப்படம் வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ளது.

4 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ 51.02 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் ரூ. 27 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

மற்ற மாநிலங்களில் ரூ 9 கோடியும், வெளிநாடுகளில் ரூ 15.02 கோடி வசூல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows