கைத்தட்டல்களை கேட்டு வாங்குபவர்களுக்கு செருப்படி கொடுத்த அமீர்

கைத்தட்டல்களை கேட்டு வாங்குபவர்களுக்கு செருப்படி கொடுத்த அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We should not ask for applause says Director Ameerஆரி நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துப்பான்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், ஆர்.வி. உதயகுமார், அமீர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் அமீர் பேசியதாவது…

வாழ்க்கையில் 3 விஷயங்களை எப்போதும் நாம் கேட்டு பெறக் கூடாது. நன்றி.. வாழ்த்து.. கைத்தட்டல்.. இவை மூன்றும் தானாக கிடைக்க வேண்டும்.

பெரியவர்களிடம் வாழ்த்தை வேண்டுமானாலும் கேட்டு பெறலாம். அது கூட ஓகே. ஆனால் நன்றியை கேட்டு பெற கூடாது. அதுபோல் கைத்தட்டல்களை கேட்டு பெறவே கூடாது.

சினிமாவில் ஒரு காட்சி நன்றாக இருந்தால் மக்களே கைத்தட்டுவார்கள். இந்த காட்சிக்கு கைத்தட்டுங்க என்று வாசகம் வராது.

அதுபோல் மேடையில் நாம் பேசினால் நன்றாக இருந்தால் மக்களே கை தட்டுவார்கள்.

கை தட்டுங்க.. கை தட்டுங்க.. என்று நாம் கேட்க கூடாது. மக்களுக்கு எப்போ கை தட்டனும் என்று தெரியும்.
ஒருவேளை அவர்கள் கை தட்டவில்லை என்றால் நாம் சரியாக பேசவில்லை என்று அர்த்தம். அதை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்” என்றார் அமீர்.

We should not ask for applause says Director Ameer

கேரளா வெள்ளத்திற்கு உதவிய நடிகர் ரகுமான்

கேரளா வெள்ளத்திற்கு உதவிய நடிகர் ரகுமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)கடந்த சில நாட்களாக தொடரும் கனமழையால் கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலசரிவு ஏற்பட்டு வருகிறது. பல இடங்களில் வெள்ளப் பெருக்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் ரகுமான் தன் சொந்த ஊரான நிலம்பூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அறிந்து அங்கு விரைந்தார். அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த அவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களுக்கான உதவிகள் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்தது வருகிறார். மேலும் வெள்ள பாதிப்பு இடங்களை பார்வையிட்டார்.

MLA P.V அன்வர் அவர்களையும் மலப்புறம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா ஊராட்சியை சேர்ந்த
வெள்ளபாதிப்பில் உதவும் தன்னார்வலர்களையும் சந்தித்து மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கும் உதவிகளுக்குமான ஏற்பாடுகளை செய்தார்.

முன்னாள் அமைச்சரும் நிலம்பூர் சட்ட மன்ற உறுப்பினருமான ‘ஆர்யாடன் ‘
முகம்மது அவர்களை சந்தித்து மக்களின் பிரச்னைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி கேடறிந்தார். ரஹ்மான் மூன்று நாள் அங்கு முகாமிட்டு உள்ளார்.

அமீர்கான் படத்தில் தமிழனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

அமீர்கான் படத்தில் தமிழனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)ஹாலிவுட்டில் பிரபலமான ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.

இதில் ஹீரோவாக அமீர்கான் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘லால் சிங் சட்டா’ என்று தலைப்பிட்டுள்ளனர்.

இதில் அமீர் கானுடன் இணைந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இந்த படத்தில் உள்ள பப்பா என்ற கேரக்டர் தமிழராக உள்ளதால் அதில் விஜய் சேதுபதி நடிப்பார் எனத் தெரிகிறது.

‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி கேரக்டரில் அமீர்கான் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா

ஆச்சிரியப்படுத்திய பாப் சிங்கர் ஹிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectகலிபோர்னியாவில் புகழ் பெற்ற பாப் பாடகியான ஹிதா தன் இசையின் மூலம் கலிபோர்னிய மக்களை தன் வசம் வைத்துள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவரின் பூர்விகம் கர்நாடகம் ஆகும் . 14 வயதான இவருக்கு முக்கியமாக இவரின் குரலுக்கு கலிபோர்னிய மக்கள் அடிமை என்றே சொல்லலாம்.
இவரின் பாடல்களை வலைதளத்தில் கண்டு ரசித்த குவியம் மீடியா ஒர்க்ஸ் யோகேந்திரன் ஹிதாவை அணுகி சென்னையில் ஒரு பாப் இசை நிகழ்ச்சி நடத்தி தருமாறு கோரிக்கை வைக்தார்.அதை ஏற்று கொண்டு
இவர் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் மகேந்திர சிட்டி பின்னால் உள்ள மகரிஷி ஸ்கூல் கிரவுண்டில் தனது நிகழ்ச்சியை “INSPIRED BY HITHA “ என்ற பெயரில் நடத்தினார். இந்தியாவிற்கு அறிமுகமில்லாத இவரை ரசிகர்கள் எப்படி ஏற்கப்போகிறார்கள் என்று பெரிய சந்தேகமே இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நுழைவு கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மேலும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு இசை நிகழ்ச்சியை காண கூடி இருந்தனர். ஹிதா அறிமுகம் இல்லாதவர் என்றாலும் ரசிகர்கள் இவரது பாப் இசை பாடல்களுக்கு மயங்கினர்
மேலும் இவர் பாட ஆரம்பித்த முதல் பாடலில் இருந்து முடியும் வரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருந்தது குறிபபிடத்தக்கது. கடைசியாக பாடிய 4 பாடல்களுக்கு குழந்தைகள் ஆட்டம் போட தொடங்கிவிட்டனர்.

இவரின் நிகழ்ச்சி முடியும் தருவாயில் அனைவரும் எழுந்து நின்று கிட்ட தட்ட 10 நிமிடம் கைதட்டி கொண்டிருந்தது பாப் இசை கலைஞர் ஹிதாவை பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளரின் இசையில் பாட வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

விவேக்கை கமல்ஹாசனுடன் இணைத்து வைத்த ஷங்கர்

விவேக்கை கமல்ஹாசனுடன் இணைத்து வைத்த ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

For the first time ever Vivek team up with Kamal in Indian21987ஆம் ஆண்டு வெளியான சுஹாசினியின் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தில் காமெடி நடிகராக விவேக்கை அறிமுகப்படுத்தியர் கே. பாலசந்தர்.

ரஜினி முதல் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு வரை எல்லாருடனும் நடித்து விட்டார் விவேக்.

ஆனால் உலகநாயகன் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

அவருடன் நடிப்பது என் வாழ்நாள் கனவு என பலமுறை தெரிவித்திருக்கிறார் விவேக்.
தற்போது அவரைது கனவை நிறைவேற்றியுள்ளார் டைரக்டர் ஷங்கர்.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 என்ற படத்தில் விவேக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

For the first time ever Vivek team up with Kamal in Indian2

நிலச்சரிவில் சிக்கிய தனுஷ் பட நாயகி.; முதல்வர் உத்தரவால் மீட்பு!

நிலச்சரிவில் சிக்கிய தனுஷ் பட நாயகி.; முதல்வர் உத்தரவால் மீட்பு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushs Asuran movie heroine Manju Warrier stuck in floodகடந்த சில நாட்களாகவே வடமாநிலங்களை மழை அச்சுறுத்தி வருகிறது.

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெய்த கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

மேலும் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தொலை தொடர்பு சாதனங்கள் செயல் இழந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சத்ரா பகுதியில் கயாட்டம் என்ற மலையாள படக்குழுவைச் சேர்ந்த 30 பேர் சிக்கியுள்ளனர். இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

இவர் தான் தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் தனுஷை விட வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மஞ்சுவாரியர் சேட்டிலைட் தொலைபேசி மூலம் தனது சகோதரரை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினாராம்.

இதனையடுத்து அவரது சகோதரர் கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி முரளிதரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அவர் இமாச்சலப் பிரதேச முதல் மந்திரி ஜெய்ராம் தாகூருக்கு தகவல் கூற தற்போது படக் குழுவினரை மீட்டுள்ளனர்.

நிலைமை சீரானதை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

Dhanushs Asuran movie heroine Manju Warrier stuck in flood

More Articles
Follows