ஒரே நேரத்தில் விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்தார் விவேக்

ஒரே நேரத்தில் விஜய்-சூர்யா-சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்தார் விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivek penning lyrics for Vijay Suriya and Sivakarthikeyan movies at same timeவிஜய் நடித்த மெர்சல், தற்போது நடித்து வரும் சர்கார் ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏஆர். ரஹ்மான் தான் இசை.

இந்த இரண்டு படங்களில் இடம் பெற்ற/பெறும் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார்.

மேலும் ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கும் இவர்தான் பாடல் எழுதுகிறார்.

இதை அவரே உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கும் இவர்தான் பாடல் எழுதுகிறாராம்.

இப்படத்திற்கு ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

சூர்யா தயாரித்த 36 வயதினிலே படம் தனக்கு திருப்புமுனையாக அமைந்த்து. தற்போது முதன்முறையாக சூர்யா படத்திற்கு பாடல் எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளதாக விவேக் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Vivek penning lyrics for Vijay Suriya and Sivakarthikeyan movies at same time

Vivek Lyricist‏ @Lyricist_Vivek

Great to b penning for d Inspiring @Suriya_offl Sir for the 1st time.
Part of #Suriya38 2D s 36V gave me my 1st big break. Its always exciting 2 associate with @2D_ENTPVTLTD @gvprakash bro has given me a lovely tune.
Tks 2 him n #Sudha mam for dis movie. Wish She achieves Big

காலா இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குதிரை வால்

காலா இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படம் குதிரை வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala director Ranjith next movie titled Kuthirai Vaalசூப்பர் ஸ்டாரின் கால்ஷீட்டுக்காக பலர் பல வருடங்களாக காத்திருக்க, கபாலி மற்றும் காலா என ரஜினியின் அடுத்தடுத்த படங்களை இயக்கி இந்திய சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் பா. ரஞ்சித்.

இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் படங்களை தயாரித்து வருகிறார்.

தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக படங்கள், நாடகங்கள் உள்ளிட்டவையும் தயாரித்து வருகிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதன் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் இவர்.

இப்படத்திற்கு குதிரை வால் என்ற பெயரையும் பதிவு செய்துள்ளார்.

ஆனால் இது வழக்கமான கதைக்களமாக இல்லாமல் 5 கதைகளை 5 இயக்குநர்களைக் கொண்டு இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதில் ஒரு கதையை மட்டும் ரஞ்சித்தே இயக்குவார் என கூறப்படுகிறது.

Kaala director Ranjith next movie titled Kuthirai Vaal

*ஆண் தேவதை* படத்தின் சென்னை-தமிழக உரிமைகளை கைப்பற்றிய பிரபலங்கள்

*ஆண் தேவதை* படத்தின் சென்னை-தமிழக உரிமைகளை கைப்பற்றிய பிரபலங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aan Dhevathai movie Chennai theatrical rights bagged by SPI Cinemasஒரு படம் ‘மாஸ்டர் பீஸ்’, ‘ஆர்ட் ஃபிலிம்’ அல்லது ‘பிலிம் ஃபெஸ்டிவல் திரைப்படம்’ என்று மட்டுமே சொல்லப்பட்ட காலங்கள் வழக்கொழிந்து போய்விட்டன.

சமகால பார்வையாளர்கள் “ஆண் தேவதை’ போன்ற யதார்த்தமான திரைப்படங்களை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள்.

இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்களே பெரும் பாராட்டுக்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இப்போது “ஆண் தேவதை” தமிழ்நாடு திரையரங்க உரிமையை புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று கைப்பற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

“வழக்கமான கமெர்சியல் விஷயங்கள் இன்றி நல்ல தரமான திரைப்படங்களை தயாரிப்பது அல்லது வெளியிடுவது என்பது வெறும் சுய திருப்திக்காக செய்த காலங்கள் உண்டு.

ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. ரசிகர்கள் இந்த மாதிரி படங்களுக்கு வரவேற்பு கொடுப்பதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெறச் செய்கிறார்கள்” என்கிறார் “ஆண் தேவதை” தமிழ்நாடு உரிமையை வாங்கியுள்ள New RSM ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் எம். மாரிமுத்து.

அவர் மேலும் கூறும்போது, “ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, அல்லது நல்ல சமூக கருத்துக்களை பேசும் படங்களில் பங்கு பெறுவது என சமுத்திரகனியின் முயற்சிகளை பார்த்து எப்போதும் வியப்புடன் இருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திலும் அவர் வெளிப்படுத்தும் ‘நல்ல குடும்பத்தின் வெளிப்பாடு தான் நல்ல சமூகம்’ என்ற அவருடைய குறிக்கோளை நான் பாராட்டுகிறேன்.

வருங்கால தலைமுறை எவ்வாறு வளர வேண்டும் என அவர் வெளிப்படுத்தும் விஷயங்கள் தான் இன்றைய முக்கிய தேவை. ‘ஆண் தேவதை’ படத்தில் இயக்குனர் தாமிரா உருவாக்கிய நல்ல கருத்து, சமுத்திரகனியின் சிறப்பான நடிப்பால் கொண்டு சேர்க்கப்படும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

மேலும் அவர் சிகரம் சினிமாஸ், தயாரிப்பாளர் பக்ருதீனை முழு மனதுடன் பாராட்டுகிறார். “புகழ்பெற்ற இயக்குனரான கே.பாலசந்தர் சாரின் உருவப்படத்துடன் உள்ள ‘சிகரம்’ ஸ்டுடியோ, வலுவான ஒரு திரைப்படத்தை உருவாக்குவதை விட மிகச்சிறந்த மரியாதையை அவருக்கு தர முடியாது” என முடிக்கிறார் மாரிமுத்து.

ரம்யா பாண்டியன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், மேலும் சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

‘உணர்வுப்பூர்வமான’ இசையை வழங்குவதில் பிரபலமான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சென்னை நகர உரிமையை SPI சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும்.

Aan Dhevathai movie Chennai theatrical rights bagged by SPI Cinemas

வஞ்சகர் உலகத்திற்கு யுவனை அழைத்து வந்த சாம். சி.எஸ்

வஞ்சகர் உலகத்திற்கு யுவனை அழைத்து வந்த சாம். சி.எஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yuvan shankar raja croon for Vanjargar Ulagam in Sam CS musicதமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இசை அமைக்கும் இசை அமைப்பாளர்கள் ஒரு சிலரே அந்த வரிசையில் சாம் சிஸ் அவர்கள் மிக முக்கியமானவர்.

புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களை தொடர்ந்து இவர் இசையமைக்கும் படம் வஞ்சகர் உலகம்.

வித்தியாசமான கேங்க்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளிவர இருக்கிறது.

இந்த படத்தில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை அணுகியுள்ளார்.

யுவனும் ஓகே சொல்ல அந்த ரொமான்டிக் மெலோடியை தன் இசையில் யுவனை பாட வைத்துள்ளார்.

விரைவில் வெளிவரும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Yuvan shankar raja croon for Vanjargar Ulagam in Sam CS music

*சிவ சிவா* படத்தில் 16 புது முகங்களை அறிமுகப்படுத்தும் ரமா

*சிவ சிவா* படத்தில் 16 புது முகங்களை அறிமுகப்படுத்தும் ரமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

16 New artist will be introduced in Shiva Shivaaமுற்றிலும் புதியவர்களின் பங்கேற்பில் உருவாகிற படம் ‘சிவ சிவா’ . இப்படத்தை ரமா இயக்குகிறார்.

சினிமாவை வெறும் வணிக ஊடகமாகக் கருதாமல் நல்லவை செய்யும் கருவியாக எண்ணிக் களத்துக்கு வரும் இவர், கதையோடு சிந்தனையைத் தூண்டும் அம்சங்களும் இணைந்த படைப்பாக ‘சிவ சிவா’வை உருவாக்கவுள்ளார்.

சினிமாவுக்குத் தேவையான காதல், நட்பு, நகைச்சுவை ஆகிய மசாலா மணத்துடன் சிந்தனைக் தூவல்களைக் கலந்து உருவாகவுள்ளது சிவ சிவா.

படத்துக்கு ஒளிப்பதிவு ஹரிகாந்த், வசனம் ‘வீடியோ ஜாக்கி ‘மொக்க மகி.

இப்படத்தை எஸ்.ஆர். ஜி ரிதம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ஆர். குணா தயாரிக்கிறார்.

இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க விழா இன்று ஐயப்பன் தாங்கலில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர் ‘ராட்டினம்’ கே.எஸ். தங்கசாமி, நடிகர் சந்தோஷ் பிரதாப் , நடிகை எலிசபெத் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

16 New artist will be introduced in Shiva Shivaa

16 new faces

குடும்பத்தோட படம் பார்க்க அழைக்கிறார் *முரட்டு குத்து* டைரக்டர்

குடும்பத்தோட படம் பார்க்க அழைக்கிறார் *முரட்டு குத்து* டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghajinikanth movie will be pakka family entertainer says Santhosh P Jeyakumarஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்…

‘ தென்னிந்தியாவில் அதிக திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி நிறுவனம் ஸ்டூடியோ கிரீன். தாங்கள் தயாரிக்கம் ஒவ்வொரு படங்களும் விநியோகஸ்தர் முதல் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை தரமாக தயாரித்து வருகிறார்கள்.

அவர்களின் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம் ’ ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருவதைப் போல் கஜினிகாந்த்தும் வெற்றிப் பெறும். ஏனெனில் கஜினிகாந்த் பேமிலி எண்டர்டெயினர் படம்.’ என்றார்.

நடிகை உமா பத்மநாபன் பேசுகையில்..

‘இயக்குநர் சந்தோஷ், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களின் எந்த காட்சியை ரசிக்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து கதைகளையும் காட்சிகளையும் உருவாக்கி வருகிறார் என்பதை என்னுடைய சிறிய அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்.

அதனால் தான் அவர் முதல் இரண்டு படங்களில் என்ன கொடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதைக் கொடுத்தார்.

இந்த படத்தில் எதனை ரசிக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதை கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படம் வெற்றிப் பெறும்.’ என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் பேசுகையில்.. ‘ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு நான் இயக்கும் முதல் படம் இது. என் மீது நம்பிக்கை வைத்ததற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்தவுடன், ஆர்யாவிடம் பேசி இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

அவர் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாது. நாயகி சயீஷா, இந்த படத்தில் அவர் தான் என்னிடம் வேலை வாங்கினார். வசனங்களை கேட்பார். அதை படித்து, பொருள் தெரிந்துகொண்டு காட்சிகளில் சிறப்பாக நடித்தார்.

என்னுடைய முதல் இரண்டு படங்களும் அடல்ட் ஹாரர் காமெடி படங்கள். குடும்பத்துடன் பார்க்கமுடியுமா? என கேள்வி கேட்டு, இதற்கு விமர்சகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை எழுந்தது.

ஆனால் என்னைப் பொறுத்தவரை தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற படங்களை பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்கமுடியும்.

அவர்கள் அந்த படங்களை யாருடன் பார்க்கவேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். இதை தெரிந்தவர்கள் யாரும் இது குறித்து விமர்சனம் செய்திருக்கமாட்டார்கள்.

ஆனால் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம். ஏனெனில் துளி கூட ஆபாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறோம்.

இந்த படத்தில் ஒரு குடும்பத்தினர் தங்களின் பிள்ளையின் காதலுக்காக எந்த எல்லை வரைக்கும் பயணிப்பார்கள் என்பதையும், தங்கள் வீட்டு பெண்ணிற்கு எந்த மாதிரியான மாப்பிள்ளையை தேர்வு செய்வோம் என்பதையும் பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாக்கியிருக்கிறேன்.

கடைக்குட்டி சிங்கம் போல் கிராமிய பின்னணியில் இல்லாமல், நகரத்தின் பின்னணியில் தயாராகியிருக்கும் கஜினிகாந்திற்கும் ஆதரவு தரவேண்டும்.’ என்றார்.

Ghajinikanth movie will be pakka family entertainer says Santhosh P Jeyakumar

Ghajinikanth PressMeet Stills (18)

More Articles
Follows