அஜித்-விஜய்-சூர்யா-சிம்பு வரிசையில் இணையும் விஷால்

அஜித்-விஜய்-சூர்யா-சிம்பு வரிசையில் இணையும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal plays First time Triple role on Naalai Namadhe movieவரலாறு படத்தில் அஜித், 24 படத்தில் சூர்யா ஆகியோர் 3 வேடங்களில் நடித்திருந்தனர்.

தற்போது அட்லி இயக்கும் தளபதி 61 படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுபோல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு 3க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்து விஷாலும் இந்த வரிசையில் இணையவுள்ளார்.

இப்படத்தை அறிமுக இயக்குனரும் பொன்ராமின் உதவியாளருமான வெங்கடேசன் இயக்கவிருக்கிறாராம்.

தயாரிப்பாளர் சிவி குமார் தயாரிக்கும் இந்த 20வது படத்திற்கு நாளை நமதே எனப் பெயரிட்டுள்ளனர்.

இது எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் எம்ஜிஆர் படத்தின் ரீமேக்கா அல்லது புதிய படமா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
இதில் பிரபல காமெடியன் சதீஷ் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

Vishal plays First time Triple role on Naalai Namadhe movie

அஜித் பிறந்த நாளுக்கு முன்பே அசத்திய விஜய் ரசிகர்கள்

அஜித் பிறந்த நாளுக்கு முன்பே அசத்திய விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay fans making trends with his favorite stillsஅஜித்தின் பிறந்தநாள் வருகிற மே 1ஆம் தேதி வருகிறது.

இதனை கொண்டாட அஜித் இந்தியாவில் இருக்கிறாரோ இல்லையோ. அதனை கொண்டாட அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இது தொடர்பான பழைய நினைவுகளையும் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இளைய தளபதி ரசிகர்கள் விஜய் படத்தை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

ஒவ்வொரு விஜய் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த விஜய் போட்டோவை பகிர்ந்து, #MyFavouriteVijayPic என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி, அதை ட்ரெண்டாக்கினர்.

இதில் விஜய்யுடன் நடித்த சதீஷ் உள்ளிட்ட பிரபலங்களும் அவர்களுக்கு பிடித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

அஜித் ரசிகர்களும் #4DaysToAJITHBdayCarnival என்ற பெயரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் படத்தை பாடமாக படிக்கப் போகும் மாணவர்கள்

விஜய் படத்தை பாடமாக படிக்கப் போகும் மாணவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay and Shankar combo Nanban movie will be a subject for Delhi University Studentsபிரபல நாவல் எழுத்தாளர் சேத்தக் பகத்.

இவர் எழுதியுள்ள நாவல்களில் சில நாவல்கள் படமாக உருவாக்கப்பட்டது.

சமீபத்தில் இவர் எழுதிய Half Girlfriend என்ற புத்தகம் அர்ஜுன் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிக்க அதே பெயரிலேயே படமாக்கப்பட்டது.

வருகிற மே 19ம் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இவர் எழுதிய மற்றொரு நாவலான Five Point Someone என்ற கதை தற்போது டெல்லி யூனிவர்சிட்டியில் இலக்கிய பாடமாக அமையவுள்ளதாம்.

இதே நாவல்தான் அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் என்ற பெயரில் உருவானது.

மேலும் இந்த படத்தை நண்பன் என்ற பெயரில் விஜய் நடிக்க, ஷங்கர் ரீமேக் செய்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Vijay and Shankar combo Nanban movie will be a subject for Delhi University Students

‘ஜெயா ஆவி தெர்மாகோல்; சரவணா ஸ்டோர் ஓனர்…’ கலாய்த்த ராதாரவி

‘ஜெயா ஆவி தெர்மாகோல்; சரவணா ஸ்டோர் ஓனர்…’ கலாய்த்த ராதாரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Radharavi funny speech about Thermocol and Saravana Store Ownerஅட்லி தயாரிப்பில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ராதிகா சரத்குமார், சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’.

இப்படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரன், ஐக் இயக்கியுள்ளார்.

இதன் பாடல் வெளியீட்டு விழா கலந்துக் கொண்ட ராதாரவி வழக்கம்போல கலாய்த்து பேச ஆரம்பித்தார்.

அவர் பேசியதாவது…

‘கமல் இங்கே பேசும்போது ஆவி படங்கள் மற்றும் தெர்மாகோலை பற்றி பேசினார். அவர் சொன்னதை நானும் நினைச்சேன்.

அந்த தெர்மாகோலை அந்த அம்மா (ஜெயலலிதா) மேல போட்டிருந்தா, அவங்க ஆவி போயிருக்காது. அந்த ஆவி தப்பிச்சிருக்கும்ல.

இந்த ஐடியா அமைச்சர் செல்லூர் ராஜூக்கு ஏன் அப்பவே தோனலை.?

இதை நான் சொல்ல காரணம். நான் அந்த அம்மாவை நம்பிதான் இருந்தேன்.

அரசியல் சினிமா போல இப்ப எல்லாம் வாரிசு சீசன்தான்.

விளம்பரத்துல சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் ஆடும்போதே அவர் சினிமாவுக்கு வருவார்ன்னு நினைச்சேன்.

ஹ்ம்… இப்போ சினிமா கெட்டுப்போச்சி.

நான் இப்படி பேசினா, அவராலதான் சினிமா கெட்டுப்போச்சுன்னு ராதாரவி சொன்னார்னு தலைப்பு செய்தியில போட்டுருவாங்க.

அவரு குறைஞ்ச விலையில பொருள் கொடுத்துட்டு வர்றாரு. அதை கெடுத்துடாதீங்க’ என்றார்.

குறிப்பு : சினிமாவில் சரவணா ஸ்டோர் ஓனர் நடிக்கவில்லை என அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ராதாரவி இப்படி கிண்டலடித்து பேசியதால், அவர் சீக்கிரமே சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியத்திற்கில்லை.

Radharavi funny speech about Thermocol and Saravana Store Owner

பவர் பாண்டிக்கு முன்பே தனுஷ் இயக்கிய படங்கள்

பவர் பாண்டிக்கு முன்பே தனுஷ் இயக்கிய படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush art facesநடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என வெற்றி பவனி வந்தாலும், தனுஷ் இயக்கிய முதல் படம் பவர் பாண்டி என சொல்லப்பட்டது.

ஆனால் பவர் பாண்டிக்கு முன்பே கிட்டதட்ட 14 குறும்படங்களை இயக்கிவிட்டாராம் தனுஷ்.

இதை சமீபத்திய பேட்டியில் தனுஷ் உறுதி செய்துள்ளார்.

இந்த குறும்படங்களை இயக்கி, பெற்ற அனுபவம் மூலமே பவர் பாண்டி படத்தை தன்னால் இயக்க முடிந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Before Power Paandi movie Dhanush directed 14 short films

மத்திய-மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்க கோரிக்கைகள்

மத்திய-மாநில அரசுகளுக்கு தயாரிப்பாளர் சங்க கோரிக்கைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil Film Producer Council demands to Central and State Governmentsதென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து விஷால் பல்வேறு திட்டங்கள் அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் பத்திரிகையாளர்களை சந்தித்து, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அவை பின்வருமாறு…

மத்திய அரசுக்கு நம் வேண்டுகோள் மற்றும் கோரிக்கைகள்

1.) GST என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது எங்கள் திரைப்பட துறையே.

2.) திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும் போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச வரி விதிப்பாக 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமே GST யாக இருக்க வேண்டும்.

3.) திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்.

4.) மத்திய அரசு புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

5.) புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் GST மற்றும் பலவித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.

6.) திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் மரியாதையையும் அளிக்க வேண்டும். இது எங்கள் 75 வருட கோரிக்கை.

மாநில அரசுக்கு எங்கள் வேண்டுகோள்

1.) திரையரங்கு கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் இது.
திரையரங்குகளின் தன்மை, இருக்கும் இடம், ரசிகர்களுக்கு தரும் வசதிகள், பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

2.) திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1௦௦௦ நபர் கொண்ட டீம் அமைக்க பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட டீம் போதவில்லை.

3.) திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

4.) அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் மற்றும் சில தனியார் கேபிள் டிவி தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும், பாடல் காட்சிகளாகவும் 24மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.

5.) உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

6.) ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை “ Multiplex” என்ற பெயரிலேயே கருத வேண்டும்.

7.) ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உரிமையாளர்களுக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.

8.) இந்த துரையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் ( மினி தியேட்டர் ) மாநிலம் முழுவதும் கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும்.

மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுபித்து கொள்ளவும் அனுமதி , விண்ணப்பம் 6௦ நாட்களில் வழங்கப்பட வேண்டும். (தெலுங்கானா அரசு இதனை சிறப்பாக அமுல்படுத்தியுள்ளது.)

Tamil Film Producer Council demands to Central and State Governments

Tamil Film Producer Council demands to Central and State Governments

More Articles
Follows