விக்ரம் & இர்பான் பதான் இணைந்துள்ள ‘கோப்ரா’ படம் ஓடிடி ரிலீஸ்..?!

விக்ரம் & இர்பான் பதான் இணைந்துள்ள ‘கோப்ரா’ படம் ஓடிடி ரிலீஸ்..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான பல கெட்டப்புகளில் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

விக்ரம் ஜோடியாக ‘கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.

கடந்த வருடம் 2020 மே மாதமே இப்படம் ரிலீசாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போனது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது ‘கோப்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்… அது ஒரு பொய்யான தகவல்.. என ‘கோப்ரா’ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Vikrams Cobra movie in OTT release

நீட் தேர்வை ஏற்க முடியாது..; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

நீட் தேர்வை ஏற்க முடியாது..; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவிலுள்ள அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஏப்ரல் 10 காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இதில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது… “தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும் தமிழகத்திற்கு விலக்குத் தேவை எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து கடைபிடிப்போம் எனவும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும் விளக்கியுள்ளனர்.

இதனையடுத்து ஒரு எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

We cant not accept NEET exams in Tamilnadu says TN Govt

கொரோனாவில் இருந்து மீண்டு வர கமல் வாழ்த்து.. ஆனால் கொரோனாவே இல்லை என ராதிகா ட்வீட்..; என்ன கமல் சார் இப்படியாச்சே?!

கொரோனாவில் இருந்து மீண்டு வர கமல் வாழ்த்து.. ஆனால் கொரோனாவே இல்லை என ராதிகா ட்வீட்..; என்ன கமல் சார் இப்படியாச்சே?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தன் ட்விட்டரில்…

கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். (1/2)

முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன்.

நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட. (2/2)

இவ்வாறு கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார் ராதிகா.

அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் அவர் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் இதனை ராதிகா மறுத்துள்ளார்.

அவரின் ட்விட்டரில் இன்று…

‛‛எனக்கு கொரோனா இல்லை. இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போட்டேன். எனவே லேசான உடல் வலி உள்ளது.

என்னை பற்றி வரும் செய்திகள் பொய்யானவை . நீதிமன்றத்தில் நாங்கள் நீதியை பெற போராடி வருகிறோம்.

மீண்டும் எனது வழக்கமான பணியை தொடங்கி விட்டேன்” என பதிவிட்டுள்ளார் ராதிகா.

இதோ ராதிகாவின் ட்வீட்..

Thanks everyone for the love and affection, I am not down with corona virus, just body ache after second vaccine. On line press are just filing rubbish about health and case.We will fight it in higher courts. I am back at work, have a good day

என்னப்பா இங்க நடக்குது..??

சமக & மநீம ஒரே கூட்டணியில் தானே உள்ளது.

ராதிகாவை தோழி என்கிறார் கமல். ஆனால்… அவரிடமே கேட்டு ட்வீட் போட்டு இருக்கலாமே கமல் சார்.??!!

Actress Radika clarifies her health on social media

அஜித் பட ரீமேக் ரிலீஸ்.: தியேட்டரை அடித்து நொறுக்கிய பவர் ஸ்டார் ரசிகர்கள்

அஜித் பட ரீமேக் ரிலீஸ்.: தியேட்டரை அடித்து நொறுக்கிய பவர் ஸ்டார் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமிதாப் நடித்த ‘பிங்க்’ படம் தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படமானது.

தற்போது தெலுங்கு ரீமேக்கில் வக்கீல் சாப் ஆகியுள்ளது.

இதில் பவர் ஸ்டார் பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று வெளியானது.

இந்த நிலையில், தெலங்கானாவின் ஜகுலம்பா கத்வால் என்ற ஒரு பகுதியிலுள்ள தியேட்டர் ஒன்றில் படம் திரையிடப்பட்டது.

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பவர் ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள், தியேட்டரை அடித்து நொறுக்கினர்.

சில தினங்களுக்கு முன் ’வக்கீல் சாப்’ பட் ட்ரெய்லர் வெளியானது.

அப்போது வேறு ஒரு தியேட்டரின் கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் நுழைந்தனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Cinema theatre vandalised in Andhra as Pawan Kalyan’s ‘Vakeel Saab’ shows cancelled

கமல் அஜித்தால் ஆண்களிடம் ஏற்பட்ட கல்யாண பயம்..; உண்மையை உடைக்கும் குமார சம்பவம் இயக்குனர்

கமல் அஜித்தால் ஆண்களிடம் ஏற்பட்ட கல்யாண பயம்..; உண்மையை உடைக்கும் குமார சம்பவம் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Sai Sri Ramமுப்பது வருடங்களுக்கு மேலாக பரதக்கலையை தனது உயிர் மூச்சாக கொண்டு கலைச்சேவை செய்துவருபவர் இயக்குநர் கே.சாய்’ஸ்ரீராம்.

தற்போது முழுக்க முழுக்க பரதக்கலையை மையமாக வைத்து ‘குமார சம்பவம்’ என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், நடனம், தயாரிப்பு, இயக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

படத்தில் என்னோடு நிகிதா மேனன், சாய் அக்‌ஷிதா, மீனாட்சி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

வெஸ்டர்ன், ராப் என இளசுகள் கவனம் திரும்பி கிடக்க, இந்தசமயத்தில் பரதத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தனது மனக்குமுறல்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் சாய்ஸ்ரீராம்..

“நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டியத்துறையில் இருக்கிறேன். என்னுடைய அப்பா பி.கே.முத்து பரதக்கலைஞராக இருந்தவர்.

ஏழைபடும்பாடு, சுதர்ஸன், மக்களைப் பெற்ற மகராசி, மாங்கல்யம் போன்ற படங்களில் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார். சிவாஜிக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்திருக்கிறார். நானும் இதே துறைக்கு வந்து விட்டேன்.

கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் பரத நாட்டியத்தை மிகவும் மோசமாக சித்தரிக்கிறார்கள்.

குறிப்பாக ஆண்கள் பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்து விடும் என்ற தவறான ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ‘வரலாறு’ படத்தில், நாயகன் அஜித் பரதம் கற்றுக்கொண்டதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என ஒரு காரணம் சொல்வார்.

அதே போல ‘விஸ்வரூபம்’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாட்டியக்கலைஞராக இருப்பதால், குறிப்பாக பெண் தன்மை கொண்டவராக இருப்பதால், அவரது மனைவி அவரை புறக்கணிப்பதாக காட்டப்பட்டிருக்கும்.

நன்றாக பரதம் தெரிந்த ஜெயம் ரவியே கூட, டண்டணக்கா என்கிற பாடலில் அதை அவமதிக்கும் விதமாகத்தானே ஆடியிருந்தார்

பரதம் என்பது புனிதமான விஷயம். அதை இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவது பற்றி யாருமே கவலைப் படவில்லை. என்னிடம் பரதம் கற்க விரும்புபவர்கள் எல்லாம் கேட்கும் முதல் கேள்வி, இதை கற்றுக்கொண்டால் நமக்கு பெண் தன்மை வந்துவிடுமா, திருமணத்திற்கு பெண் தர மாட்டார்களா என்கிற சந்தேகத்துடனேயே கேட்கிறார்கள்..

அந்தவகையில் இந்த விஷயத்தில் கமலும், அஜித்தும் பரதக்கலைக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்றே சொல்வேன்.

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் இதுபற்றிய உண்மையையும் எனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியபோது, அது அறியாமல் நடந்துவிட்ட தவறு என பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார்.

அதேபோல நடிகர் அஜித்தாவது அதுபற்றி தெரியாமல் யாரோ சொல்லிக்கொடுத்ததை செய்தார் என்று வைத்துக்கொள்ளலாம்…

ஆனால் கமல் பரதம் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும், ஆண் பரத கலைஞர்களை அவமதித்து விட்டார். அவர் ஜாம்பவான் என்பதற்காக தவறை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா..?

இப்படி ஒவ்வொரு படத்திலும் பரதக்கலையையும் ஆண் பரத கலைஞர்களையும் தவறாக சித்தரிப்பதை இனியேனும் தடுக்க வேண்டும்.. அதேசமயம் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக போய் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என்பதால் தான், தற்போது பரதத்தை மையப்படுத்தி ‘குமார சம்பவம்’ என்ற படத்தை நானே எடுத்து முடித்திருக்கிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு பரதத்தை இனிமேல் யாரும் தவறாக காட்டக்கூடாது.. அதேபோல ஆண்கள் பரதம் கற்றுக்கொண்டால் பெண் தன்மை வந்துவிடும் என்கிற பொய்யான கருத்தும் இனி பரவக்கூடாது.. ஆண்களும் பரதம் கற்றுக்கொள்ள ஆர்வமாக முன் வரவேண்டும்…. அதுதான் என்னுடைய நோக்கம்” என கூறினார்.

இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார் இயக்குனர் சாய்ஸ்ரீராம்.

Kumara Sambavam director slams Kamal and Ajith

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரஜினி-கமலின் ரீல் மகள்..; இப்போ நலமா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரஜினி-கமலின் ரீல் மகள்..; இப்போ நலமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nivetha Thomas‘நவீன சரஸ்வதி சபதம்’ என்ற படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நிவேதா தாமஸ்.

இவர் ‘ஜில்லா’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாகவும் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு மகளாகவும் நடித்திருந்தார்.

தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் இல்லை என்பதால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

தற்போது பவன் கல்யாண் & அஞ்சலியுடன் ‘வக்கீல் சாப்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்று ஏப்ரல் 9ல் ரிலீசாகிறது.

இவர் சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

வீட்டில் தன்னைத் தானே தனிமை படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிப்படுத்தும் விதத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நிவேதா தாமஸ்.

“தன் பெட்டில் சிரித்தபடி படுத்திருக்கும் நிவேதா ஒவ்வொரு நாளும் வந்து போகிறது, நான் நலமாக இருக்கிறன் என கூறியுள்ளார்.

விரைவில் நிவேதா தாமஸ் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Nivetha Thomas opens up about her health

More Articles
Follows