இணையத்தை நெளிய வைத்த விக்ரமின் ‘கோப்ரா’; இதான்டா பெஸ்ட் லுக்

இணையத்தை நெளிய வைத்த விக்ரமின் ‘கோப்ரா’; இதான்டா பெஸ்ட் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram fans says Cobra first look is best look டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து.

இவரின் 3வது படமாக உருவாகி வருகிறது ’கோப்ரா’.

இதில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஹார்ட் பத்திரம் பாஸ்.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் விமர்சனம் 4.25/5

இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் கோப்ரா பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

தீப்பொறி…. திரௌபதி விமர்சனம் 3.25/5

இந்த போஸ்டரில் விக்ரம் பல விதமான தோற்றங்களில் வருகிறார்.

இது ரசிகர்கள் பெருமளவில் கவர்ந்துள்ளது. முக்கியமாக விக்ரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எத்தனையோ பர்ஸ்ட் லுக்குகளை பார்த்துருக்கோம். இதான் பெஸ்ட் லுக் என்கின்றனர் அவர்கள்.

Vikram fans says Cobra first look is best look

cobra first look

6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்

6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil movie kayiruஉலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது.

ஆம், மதிப்பிற்குரிய இயக்குநர் ஃபாசிலிடம் உதவி இயக்குநராக இருந்த கணேஷ் இயக்கியுள்ள கயிறு திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 13 அன்று வெளியாகிறது. ஸ்கைவே பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் குணா (படத்தின் இணை தயாரிப்பாளரும் இவரே), காவ்யா மாதவ், கந்தசாமி, சேரன்ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரித்வி மற்றும் விஜய் ஆனந்த் இப்படத்துக்கு இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு ஜெயன் உன்னிதன், எடிட்டிங் கார்த்திக்.

இப்படம் அமெரிக்காவில் நடைபெற்ற தி கிரேட் சினிமா நவ் திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது, மெக்சிகோவில் நடந்த 7 கலர்ஸ் பேச்சிலர்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது உள்ளிட்ட 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற யூரேசியா சர்வதேச மாதாந்திர திரைப்பட விழா, கொலம்பியா சினிமே லேப் மற்றும் இரானில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான இறுதிப்பட்டியலிலும் கயிறு திரைப்படம் இடம்பெற்றது.

அதுமட்டுமல்ல. இங்கிலாந்து, நஜீரியா தொடங்கி அமெரிக்கா வரை, இப்படம் லண்டன் சர்வதேச திரை விருது விழா, மேற்கு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற மலபோ சர்வதேச இசை மற்றும் திரைப்பட விழா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற மாண்ட்கோமெரி சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட பெரும் திரைப்பட விழாக்களில் சிறந்த திரைப்படத்துக்கான அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பிடித்தது.

சுருக்கமாக, இப்படம் உலகம் முழுவதும் நடந்த 20 திரைப்பட விழாக்களில் தன்னுடைய முத்திரையை பதிவு செய்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் இதயங்களை ஆக்கிரமித்த பிறகு தற்போது அது யாருக்காக உருவாக்கப்பட்டதோ அந்த தமிழ் ரசிகர்களின் இதயங்களை வெல்ல வந்திருக்கிறது.

‘கயிறு’ இயக்குநர் கணேஷ் தமிழ் சினிமாவுக்கு புதியவர் அல்ல. விஜய் ஷாலினி நடிப்பில் வெளியான ப்ளாக்பஸ்டர் படமான ‘காதலுக்கு மரியாதை’ மற்றும் வினயன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘காசி’ ஆகிய படங்களின் இணை இயக்குநர். இது தவிர கண்ணுக்குள் நிலவு மற்றும் ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களின் இயக்கத்திலும் கணேஷ் பணியாற்றியுள்ளார்.

கயிறு திரைப்படம் இத்தனை விருதுகள் வாங்க காரணம் என்ன?

இது குறித்து இயக்குநர் கணேஷ் கூறியிருப்பதாவது:

தமிழ் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் அது போற்றி பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இப்படம் உணர்த்துக்கிறது. என் படத்தின் கதை தினமும் காலையில் ஒரு இளம் காளை மாட்டுடன் வீடு வீடாக சென்று குறி சொல்லும் ஒரு பூம் பூம் மாட்டுக்காரனை பற்றியது. அவனுக்கு ஒரு பெண் மீது காதல் ஏற்படுகிறது. அப்பெண்ணை திருமணம் செய்யவேண்டுமென்றால் தன்னுடைய தொழிலை விடவேண்டும் என்கிற சூழலுக்கு அவன் தள்ளப்படுகிறான். தான் மிகவும் விரும்பும் காளை மாட்டையும் அவன் இழக்க வேண்டும். இழக்கவேண்டியது அவன் தொழிலை மட்டுமல்ல, தன் தந்தை வழியாக தன்னிடம் வந்த பாரம்பரியத்தையும் தான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் நம் கலாச்சாரத்தின் ஒரு பழக்கவழக்கத்தை விட வேண்டும். இவை அனைத்தும் அவனை ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளுகிறது. அதன் பிறகு அவன் என்ன செய்கிறான் என்பதே கதை. இப்படம் நம் கலாச்சாரத்தை போற்றி பாதுகாப்பதை பற்றி மட்டும் பேசவில்லை. மாறாக விலங்குகளிடம் அன்பாக இருப்பதன் தேவை குறித்தும் பேசுகிறது.

என் படம் மூலமாக சில பொருத்தமான விஷயங்களை பதிவு செய்திருக்கிறேன். நமது கலாச்சாரம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பொக்கிஷம் என்பதை அழுத்தமாக கூறியுள்ளேன். அதை போற்றி பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை மாற்றவேண்டும் என்பதையும்ம் இப்படம் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறது. மிக முக்கியமாக விலங்குகளும் பறவைகளும் தாங்கள் உயிர்பிழைத்திருக்க மனிதர்களை சார்ந்திருக்கிறது. நாம் அவற்றை துன்புறுத்த கூடாது. மாறாக, நாம் அவற்றின் மீது அன்பையும் கனிவையும் காட்டவேண்டும்.

இப்படம் பல்வேறு சமூக கருத்துக்களை தன்னுள் கொண்டிருக்கிறது, அனைத்து வகையான ரசிகர்களும் ரசிக்கும்படியான படமாகவும் இது இருக்கும். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மார்ச் 1- அன்று கனடாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மார்ச் 13 இப்படம் வெளியாகும்.

“அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு !

“அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக் – ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anbulla Ghilliசமீபத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பில் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்து வருகின்றனர்.

இது குறித்து இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் கூறியதாவது…

“அன்புள்ள கில்லி” படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில் அனைவருமே செல்லப்பிராணி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வு தான் இந்தக்கதை. ஃபர்ஸ்ட் லுக் வெளிடுவது குறித்து வரும்போது எங்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அதனை வெளியிட்ட திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் செல்லப்பிராணி வளர்ப்பவர் என்பது தான். அவர் மட்டுமல்ல அவர் வீட்டில் அனைவருமே செல்லப்பிராணி மீது காதல் கொண்டவர்கள். உதயநிதியின் கடும் வேலை நேரங்களில் அவரது செல்லப்பிரானியுடன் வரலாற்று நாயகர் திரு கருணாநிதி அவர்கள், கொஞ்சி விளையாடிய சில இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டின் போது எங்களிடம் நேரம் ஒதுக்கி படம் பற்றி, படப்பிடிப்பு பற்றி, பல விசயங்களை கேட்டறிந்து, அனைவரும் வெற்றி பெற வாழ்த்தினார். அவரது எளிமையும் பண்பும் இயல் வாழ்வில் செல்லப்பிராணி மீது அவரது காதலும் எங்களை பிரமிக்க செய்தது. நேர்மறை பாராட்டுகள் கடந்து பலர் செல்லப்பிராணி காதலர்களாக மாறுவது எனக்கு பெரு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. “அன்புல்ல கில்லி” நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக இருக்கும். முக்கியமாக அனைவரும் குடும்பத்துடன் தியேட்டரில் ரசித்து பார்க்கும் படமாக எங்கள் படம் இருக்கும். குறிப்பாக குழந்தைகள் இப்படத்தை கொண்டாடுவார்கள். எனவே இப்படத்தை வரும் கோடை கால விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இசை மற்றும் டிரெயலர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்

“அன்புள்ள கில்லி” திரைப்படம் இதுவரை உருவாகியிருக்கும் மனிதன், நாய் உறவு சம்பந்தமான கதைகளிலிருந்து மாறுபட்டு தனிச்சிறப்பான அம்சத்தை கொண்டிருக்கிறது. மேலும் நாயின் மனகுரலில் கதை நகருவதாய் வெளிவரும் முதல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா இப்படத்தின் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, இவருடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது.

Rise East Entertainment Pvt Ltd மற்றும் Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், E. மாலா இப்படத்தினை தயாரிக்கிறார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, கொடைக்கானலில் அழகிய வண்ணமயமான பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்தியன் 2 விபத்தில் உயிர் இழந்த குடும்பத்துக்கு 1 கோடி நிதியுதவி அளிக்கும் ஷங்கர்

இந்தியன் 2 விபத்தில் உயிர் இழந்த குடும்பத்துக்கு 1 கோடி நிதியுதவி அளிக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankarஇந்தியன் – 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை… மீள முயன்று கொண்டிருக்கிறேன்.
ஒரு மாதம் முன்புதான் என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்த கிருஷ்ணாவின் மறைவு என்னை உலுக்கிவிட்டது. நல்ல உதவி இயக்குனர் அமைவது மிகவும் கடினம். இவ்வளவு பெரிய project-ஐ சேர்ந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டு, களமிறங்கி மிகச் சிறப்பாக பணியாற்றினார் கிருஷ்ணா.
ஒரு சரியான உதவி இயக்குனர் அமைந்துவிட்டார் என்ற என் சந்தோஷம் நீடிக்காதது என் துரதிர்ஷ்டம். அன்று கிருஷ்ணாவின் இல்லத்திற்கு சென்றிருந்த போது அவரின் தாயார் என்னிடம் கதறி அழுதது என் கண்ணுக்குள்ளேயே நின்று என்னை இம்சிக்கிறது.
எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, தண்ணீர், பிஸ்கெட் என்று எது கேட்டாலும் என் அருகிலேயே நின்று உடனுக்குடன் கொடுத்து உதவிய production boy மதுவை அன்று mortuary-ல் பார்த்ததும் உடைந்துவிட்டேன்.
Art Department சந்திரன், இந்தியன்-2 செட்டில் ஒரு மாதம் வேலை இருக்கிறது என்று விரும்பி வந்து, இந்த schedule-ல் தான் வேலைக்கு சேர்ந்தார் என்று கேள்விப்பட்ட போது துக்கம் தாளவில்லை.
எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் சற்றும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.

மயிரிழையில் நான் உயிர் பிழைத்தேன் என்ற உணர்வை விட, அவர்கள் உயிர் இழந்து விட்டார்களே என்ற வேதனை தான் என்னை வாட்டி எடுக்கிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர், அங்கு பணிபுரிந்தவர்கள் என்று அந்த விபத்து சம்பந்தப்பட்ட அனைவரும் படும் துயரங்களையும், கஷ்டங்களையும் பார்க்கும் போது, அந்த கிரேன் என் மேல் விழுந்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது.
கிருஷ்ணாவின் பெற்றோருக்கும், அவரின் மனைவிக்கும் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், மதுவின் குடும்பத்தினருக்கும், திரு சந்திரனின் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன உதவி செய்தாலும் இழந்த உயிருக்கு ஈடாகாது. இருப்பினும் அவர்களின் குடும்பத்துக்கு ஏதோ ஒரு வகையில் சிறு உதவியாக இருக்கும் என்று எண்ணி ஒரு கோடி ரூபாயை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்கள் இந்த துயரத்திலிருந்து விரைவில் மீள வேண்டுமென்று மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

ஷங்கர்

துணை முதல்வர் போஸ்ட் கொடுங்க; சூப்பர் ஸ்டாருக்கு பவர் ஸ்டார் வேண்டுகோள்

துணை முதல்வர் போஸ்ட் கொடுங்க; சூப்பர் ஸ்டாருக்கு பவர் ஸ்டார் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Power Star Srinivasan request to Super Star Rajiniசிவகாமி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் கடம்பூர் ராஜீ உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கலந்துக் கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் கலந்துக் கொள்ளவில்லை.

இந்த படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக ராதாரவி மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியதாவது…

நான் நடிகனாக ஆவதற்கு முன்பே ராதாரவியை சந்தித்து என் ஆசையை கூறினேன். அவர் வேண்டாம் என அப்போவே தடுத்தார்.
ஒருவேளை பொறாமையால் சொல்கிறார் என படத்தில் நடிக்க தொடங்கினேன்.

நான் சிரித்தால் திரைப்படம் உருவாக முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான் – இயக்குநர் ராணா

லத்திகா, மற்றும் அன்பு தொல்லை படங்களில் நடித்தேன்.

எல்லாரும் பிறக்கிறோம்.. எல்லாரும் இறக்கிறோம். ஆனால் பேர் புகழ் வேண்டும் என நினைத்தேன்.

அதன்படி சினிமாவில் நடித்தேன். அதற்காக ரூ. 40 கோடி வரை செலவழித்து விட்டேன்.

ரஜினி சாருக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரம் கட்சி ஆரம்பிக்க சார். எனக்கு துணை முதல்வர் போஸ்ட் கொடுங்க.

இல்லேன்னா நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்க வாங்க” இன்னும் நிறைய பேச வேண்டும். மற்றொரு மேடையில் விரைவில் பேசுகிறேன்”

என பேசினார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

Power Star Srinivasan request to Super Star Rajini

sivagami audio launch

பிப்ரவரி 28ல் மோதும் துல்கர் ரிச்சர்ட் ஸ்ரீகாந்த் த்ரிஷா படங்கள்

பிப்ரவரி 28ல் மோதும் துல்கர் ரிச்சர்ட் ஸ்ரீகாந்த் த்ரிஷா படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamil films 2020ஞாயிற்றுக்கிழமை வந்தால் எல்லாம் தரப்பினருக்கும் மகிழ்ச்சிதான். அது விடுமுறை தினம் என்பதால் இருக்கலாம்.

அதுபோல் வெள்ளிக்கிழமை வந்தாலே சினிமா ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் கொண்டாட்டம்தான். அன்றைய தினம் புதுப்படங்கள் ரிலீசாகும்.

நாளை பிப்ரவரி 28ல் வெளியாகவுள்ள படங்கள் பற்றிய ஓர் பார்வை இதோ…

முன்னணி நடிகர்கள் நடித்துள்ள படங்கள் வந்தாலும் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய திரௌபதி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட், ஷீலா இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்ரீகாந்த் நடித்துள்ள உன் காதல் இருந்தால், திரிஷா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள பரமபதம் விளையாட்டு, துல்கர் சல்மான் நடித்துள்ள கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படங்கள் வெளியாகவுள்ளன.

இத்துடன் கல்தா (அரசியல் பழகு), கட்டு மரமாய், இரும்பு மனிதன் படங்களும் திரைக்கு வருகின்றன.

பின் குறிப்பு… த்ரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் நாளை வெளியாகவில்லை. மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

More Articles
Follows