ஜாதி வன்மம் இல்லாத உலகத்தில் என் மகள்.. நானும் இறந்து விட்டேன்..; விஜய் ஆண்டனி அறிக்கை

ஜாதி வன்மம் இல்லாத உலகத்தில் என் மகள்.. நானும் இறந்து விட்டேன்..; விஜய் ஆண்டனி அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா என்பவர் தற்கொலை செய்து கொண்டு கொண்டார்.

இவர் 12 வகுப்பு படித்து வருகிறார். தற்கொலைக்கான காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அந்த அறையில் மீரா எழுதியதாக ஒரு கடிதம் சிக்கியது.

அதில் ஐ லவ் யூ ஆல் ஐ மிஸ் யூ ஆல் உள்ளிட்ட சில ஆங்கில வார்த்தைகளை அவர் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடிதம் தொடர்பாக விசாரணையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்று செப்டம்பர் 21ஆம் தேதி இரவு விஜய் ஆண்டனி உருக்கமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…

என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள்.

என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.

நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். உங்கள்

விஜய் ஆண்டணி,.

என்று அந்த அறிக்கையில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டணி

Vijayantony emotional statement about her daughter death

சினிமா ஏமாற்று வேலை.; ரஜினி விஜய் அஜித் செய்றாங்க.. தெலுங்குல செய்றதில்லை – பேரரசு

சினிமா ஏமாற்று வேலை.; ரஜினி விஜய் அஜித் செய்றாங்க.. தெலுங்குல செய்றதில்லை – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் ‘ஐமா’ படத்தில் யூனஸ் , எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத் தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநர் பேரரசு பேசும்போது…

”இந்த ஐமா படத்தில் பத்து பாடல்கள் என்ற போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதைப் படத்தில் சரிவர வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் கதாநாயகன் பேசும்போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் நிஜமாகவே நடித்தேன் என்றார். சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.

உண்மை போல நம்ப வைக்க வேண்டும் அவ்வளவுதான். கத்தியால் குத்தும் காட்சி என்றால் நிஜமாகவே குத்தி விட முடியுமா? அப்படி எல்லாம் அபாயகரமான காட்சிகளில் நடிக்கக் கூடாது.

அப்படி டூப் இல்லாமல் அபாயகரமான காட்சியில் நடித்துவிட்டு என்னுயிர்த் தோழன் பாபு தன் 30 ஆண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இப்போது இறந்து விட்டார்.

இதை நாம் கவனிக்க வேண்டும்.எப்படி வேண்டுமானாலும் இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளில் எடுக்க முடியும். எவ்வளவோ படங்களில் எதார்த்தம் மீறி காட்சிகள் வருகின்றன. சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்.தெருவில் கழைக் கூத்தாடி செய்யும் ரிஸ்கைக் கூட சினிமாவில் பெரிய கதாநாயகர்கள் கூட செய்வதில்லை.

அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வசதிகள் வந்து விட்டன. மெதுவாக நடந்து வருவதைக் கூட ஓடி வருவது போல் எடுக்க முடியும்.

தமிழ்த் திரைப்படங்கள் பெரிய பெரிய கதாநாயகன் நடிக்கும் படங்கள் கூட செட் போட்டு வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.

அந்தந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். நம் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. எங்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம்.

இது பற்றி இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது ஆதங்கத்தை வெளியிட்ட போது அதைத் திரித்து திசை திருப்பி விட்டார்கள்.

ரஜினி விஜய் அஜித் சூர்யா படங்கள் ஹைதராபாத்தில் செட்டு போட்டு படமாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு நடிகரின் படங்களும் அங்கேதான் செட்டு போடப்படுகிறது. தெலுங்கு சினிமாக்கள் செட்டுகளை தமிழ்நாட்டில் போடவில்லை. ஆனால் தமிழ் நடிகர்கள் தெலுங்கில் செட்டு போடுகிறார்கள். இதனால் நம் தொழிலாளர்களுக்கு உரிய வேலை கிடைப்பதில்லை. இதைத் தவறாகச் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.

இந்த படம் ஐமா வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் கேபிள் சங்கர் பேசும்போது…

” சிறு முதலீட்டுப் படங்களுக்கு ஆக்சன் ரியாக்சன் விநியோகஸ்தர் ஜெனிஷ் மிகவும் உதவியாக இருக்கிறார் .சிறு முதலீட்டுப் படங்களை வெளியிட்டு பெரிய நிறுவனமாக அவர் உயர்ந்திருக்கிறார். வளர்ந்த பிறகும் அவர் எப்போதும் தனது பணியைத் தொடர வேண்டும் “என்றார்.

இவ்விழாவில் படத்தின் கதாநாயகன் யூனஸ், நாயகி எவ்லின் ஜூலியட் இசையமைப்பாளர் கே. ஆர். ராகுல், ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணன் உள்ளிட்ட படக்குழுவினரும் பேசினார்கள்.

Director Perarasu speech at Aaima press meet

ரஜினிக்கு இதான் நிலைமை.; ‘ஐமா’ மீட்டிங்கில் வெளுத்துக் கட்டிய கே.ராஜன்

ரஜினிக்கு இதான் நிலைமை.; ‘ஐமா’ மீட்டிங்கில் வெளுத்துக் கட்டிய கே.ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஐமா ‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த ‘ஐமா’ படத்தில் யூனஸ் , எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு மனோகரன், படத்தைத் தயாரித்துள்ள சண்முகம் ராமசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ராகுல் ஆர் .கிருஷ்ணா இயக்கி உள்ளார்.ஒளிப்பதிவு விஷ்ணு கண்ணன், எடிட்டிங் அருண் ராகவ், இசை கே .ஆர். ராகுல்.பாடல்கள் அருண் மணியன். தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films ) நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி

விழாவில் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி பேசும்போது,

‘நான் ஐடி துறையில் இருந்தவன்.எனக்கு சினிமாவின் மீது ஆர்வமுண்டு. நடிப்பின் மீது மோகம் இருந்தது. ஒரு நடிகராக நான் யாரிடமும் போய் வாய்ப்பு கேட்க முடியாது. அது எப்படி என்று எனக்குத் தெரியாது. எனவே நானே ஒரு படத்தைத் தயாரித்து அதில் நடிப்பதாக முடிவு எடுத்தேன். அப்படித்தான் இந்த ‘ஐமா’ படம் உருவானது.

இதில் இயக்குநர் சொன்ன கதை எனக்குப் பிடித்திருந்ததால் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்கள் பணிகளைச் சிறப்பாக செய்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

இந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். இன்று திரைப்படம் எடுப்பதை விட வெளியிடுவது சிரமமாக உள்ளது. படத்தைப் போட்டுக் காட்ட அழைத்தால்கூட யாரும் படம் பார்க்க வருவதில்லை.

இப்படிப்பட்ட இந்த நிலைமை சீரடைய வேண்டும் .ஊடகங்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்” என்றார்.

இந்தப் படத்தை வெளியிடும் ‘ஆக்சன் ரியாக்ஷன்’ விநியோக நிறுவனத்தின் ஜெனிஷ் பேசும்போது…

” சிறு முதலீட்டுப் படங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் .ஊடகங்கள் என்றும் சிறு முதலீட்டுப் படங்களையும் நல்ல முயற்சிகளையும் கைவிட்டதில்லை. அந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை வெளியிடுகிறோம்” என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசும் போது,

“சிறு முதலீட்டுப் படங்கள் தான் திரையுலகை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் தோராயமாக 320 படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றில் 100 முதல் 150 படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் சுமார் 70 படங்கள் தான் சிரமப்பட்டு வெளி வந்திருக்கின்றன.

வெளியான பல படங்களின் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். மீதமுள்ள 250 லிருந்து 300 படங்கள் வெளி வராமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன. இந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இந்தப் படங்களில் முடங்கி உள்ளது.

நான் நிதி உதவி செய்த ஒரு படத்திற்கு 12 கோடி செலவானது . ஆனால் அதன் வெளி மொழி உரிமை போன்றவை ஆறு கோடிக்கு விற்பனையானது. இருந்தாலும் கூட அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை. இதுதான் இன்றைய நிலைமை. சிறு முதலீட்டுப் படங்கள் சிரமம் இன்றி வெளிவர வேண்டும்.

அப்படி வெளிவந்தால் அந்தக் தயாரிப்பாளர் மீண்டும் படம் தான் எடுப்பார் .ஆனால் பெரிய படங்களின் மூலம் வரும் லாபம் மீண்டும் சினிமாக்கு வருமா என்றால்,தெரியாது.

இன்று ‘ஜெயிலர்’ படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது. ரஜினிகாந்த் பெரிய நட்சத்திர நடிகர்தான் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. இதுதான் இன்றைய ரஜினியின் நிலைமை

இப்படி இன்று சினிமா மாறி உள்ளது. இப்போதெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

Even Rajini needs other actors support fo movie success says KRajan

செல்வராகவனுடன் பிரபல நட்சத்திரங்கள் கூட்டணி.; ராஜீவ்மேனன் மகள் அறிமுகமாகிறார்

செல்வராகவனுடன் பிரபல நட்சத்திரங்கள் கூட்டணி.; ராஜீவ்மேனன் மகள் அறிமுகமாகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர்.

பாக்யராஜ் நடிப்பு இயக்கத்தில் 90களில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் பான்-இந்தியா கதையம்சம் கொண்டவை என்பதால் அவை மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அந்த மொழிகளிலும் வெற்றி பெற்றன. அப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட திரைப்படமாக இது அமையும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன் இப்படத்தின் கதையை வெகுவாக ரசித்து இதில் நடிக்க சம்மதித்தார்.

யோகி பாபு, ‘புஷ்பா’ மற்றும் ‘ஜெயிலர்’ புகழ் சுனில், ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன்…

“விறுவிறுப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம்.

கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி,” என்று கூறினார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகில் சுமார் 1000 துணை நடிகர்கள் பங்களிப்போடு நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்தார்.

இத்திரைப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு டி பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். நிர்வாக தயாரிப்பாளர்: சதீஷ் சுந்தர்ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர்.

Telugu and Malayalam stars joins with Selvaraghavan

சினிமாக்காரன் வீடு மடமா.? துக்கம் கேலிச் சித்திரமா.? மீடியாக்களை கண்டிக்கும் பாரதிராஜா குழு

சினிமாக்காரன் வீடு மடமா.? துக்கம் கேலிச் சித்திரமா.? மீடியாக்களை கண்டிக்கும் பாரதிராஜா குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிறப்பு இறப்பு இரண்டுமே அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது.. இதில் இறப்பு என்பது ஒரு குடும்பத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இதில் சினிமாக்காரர்களும் விதிவிலக்கல்ல.

பிரபலங்கள் வீட்டில் மரணம் நடைபெற்றால் அதை செய்தியாக வெளியிடுவது தவறில்லை. ஆனால் சமீப காலமாக யூடியூப் சேனல்களின் அதிகப்படியான வருகையால் செய்தி சேனல்களின் பொறாமை நிறைந்த போட்டிகளால் அளவுக்கு மீறி நடைபெற்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நடிகை மீனாவின் கணவர் மரணத்தின் போது அவரது உடல் எரிக்கப்படும் வரை மீடியாக்கள் நுழைந்து அதனை படம் பிடித்து காட்டிய போது மீனா வருத்தமுற்றார்.

மேலும் நடிகர் அஜித்தின் தந்தை மரணம் அடைந்த போதும் இதே போன்றே நடைபெற்றது. அதுபோல சமீப காலமாக மனோபாலா, மாரிமுத்து, விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் மீடியாக்களின் வரம்பு மீறிய படப்பிடித்தலை காண்கிறோம்.

இதை ஒரு சில நபர்கள் கண்டித்த நிலையில் தற்போது நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..

செப்டம்பர் 21, 2023:

மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது.

அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள்..உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும்.

அந்நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது.

உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீபகால மீடியாக்களின் செயல். புகழ்பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது.

வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது. அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது.

முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது. எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று.

இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது ஊடகங்கள். மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன. நம் அனுமதி இல்லாமல் இரக்கமற்று நம் கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா?? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா?

நேற்றும்..இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது.

குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரீகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன. இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது.

ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால்… காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்கான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தயாரிப்பாளர்கள்… மற்றும் சினிமா சார்ந்த அனைவரின் முக்கிய கடமையாகும்.

அப்போதுதான் நம் வீட்டு நிகழ்வுகளில் அநாகரீகங்கள் தடுக்கப்படும்.

ஒரு மூத்த கலைஞனாகவும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்ற முறையிலும் ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல்துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்.

நன்றி

பாரதிராஜா
தலைவர்,
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

Bharathiraja team condemns Media at death funerals

‘விடாமுயற்சி’ அப்டேட் : அஜித்துடன் இணையும் விஜய்யின் ‘லியோ’ வில்லன்

‘விடாமுயற்சி’ அப்டேட் : அஜித்துடன் இணையும் விஜய்யின் ‘லியோ’ வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் ‘துணிவு’ படத்திற்குப் பிறகு புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.

‘விடாமுயற்சி’ என பெயரிடப்பட்ட இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதை அடுத்து மகிழ் திருமேனி இயக்குவார் என லைக்கா நிறுவனம் அறிவித்தது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இம்மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் த்ரிஷா, ஹூமா குரேஷி என இரண்டு நாயகிகள் நடிக்க இருக்கின்றனர்.

இதில் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், துபாயில் சஞ்சய் தத்தும் அஜித்தும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.

இதனால் இந்தப் படத்தில் சஞ்சய் தத்தும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது.

மேலும், விஜய்யின் ‘லியோ’ படத்திலும் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடாமுயற்சி

Sanjay dutt to be villain in ajith kumar’s vidamuyarchi

More Articles
Follows