தனுஷின் ‘கர்ணன்’ படத்தை பார்த்த விஜய்சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை பார்த்த விஜய்சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ’கர்ணன்’.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பட பாடல்களும் ’கர்ணன்’ டீசரும் பெரும் வரவேற்பை பெற்றது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் படம் ரிலீசாவதால் ‘கர்ணன்’ படத்திற்கு ஏதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், ‘கர்ணன்’ படம் நேற்று ஏப்ரல் 9ல் ரிலீசானது.

கர்ணனை பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் எப்போதும் ஜாதியை வைத்து படம் எடுப்பதே இவர்களின் வேலை என திட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று படம் பார்த்த நடிகர் விஜய் சேதுபதி “கர்ணன் எக்ஸலண்ட் படம். பார்க்கத் தவறாதீர்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தன் விமர்சன கருத்தை தெரிவித்து பாராட்டியுள்ளார்.

vijay Sethupathis appreciation for Karnan movie

யோகிபாபுவின் ‘மண்டேலா’ படத்தை டிவியில் ஒளிப்பரப்ப தடை விதிக்க கோரிக்கை

யோகிபாபுவின் ‘மண்டேலா’ படத்தை டிவியில் ஒளிப்பரப்ப தடை விதிக்க கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோனா அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி முருகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் ‘மண்டேலா’.

இதில் முடிதிருத்தும் தொழிலாளியாக யோகிபாபு நடித்து இருந்தார்.

இந்த படம் தியேட்டரில் ரிலீசாகாமல் கடந்த ஏப்ரல் 4 அன்று தனியார் டிவியில் நேரடியாக வெளியானது மண்டேலா.

ஒய் நாட் ஸ்டுடியோ இப்படத்தை தயாரித்திருந்தது.

இந்த நிலையில் மண்டேலா படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மேலும் இப்படத்தை டிவியில் தொடர்ந்து ஒளிபரப்ப நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் யோகிபாபு, டைரக்டர் மடோனா அஸ்வின் மற்றும் ஒய்நாட் ஸ்டியோ நிறுவனம் மீதும் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளனர்.

Mandela should be banned Case filed against movie team

விக்ரம் & இர்பான் பதான் இணைந்துள்ள ‘கோப்ரா’ படம் ஓடிடி ரிலீஸ்..?!

விக்ரம் & இர்பான் பதான் இணைந்துள்ள ‘கோப்ரா’ படம் ஓடிடி ரிலீஸ்..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் வித்தியாசமான பல கெட்டப்புகளில் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

விக்ரம் ஜோடியாக ‘கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார்.

கடந்த வருடம் 2020 மே மாதமே இப்படம் ரிலீசாக இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி போனது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது ‘கோப்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில்… அது ஒரு பொய்யான தகவல்.. என ‘கோப்ரா’ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Vikrams Cobra movie in OTT release

நீட் தேர்வை ஏற்க முடியாது..; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

நீட் தேர்வை ஏற்க முடியாது..; மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவிலுள்ள அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஏப்ரல் 10 காணொலி வாயிலாக நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

இதில் தமிழக அரசு சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மற்றும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் சாந்தி மலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது… “தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும் தமிழகத்திற்கு விலக்குத் தேவை எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரக்கூடிய இட ஒதுக்கீட்டு முறையை தொடர்ந்து கடைபிடிப்போம் எனவும், பொருளாதாரத்தில் நலிந்த முற்பட்ட பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பில்லை எனவும் விளக்கியுள்ளனர்.

இதனையடுத்து ஒரு எழுத்துப்பூர்வமான அறிக்கையை ஒரு வாரத்தில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

We cant not accept NEET exams in Tamilnadu says TN Govt

கொரோனாவில் இருந்து மீண்டு வர கமல் வாழ்த்து.. ஆனால் கொரோனாவே இல்லை என ராதிகா ட்வீட்..; என்ன கமல் சார் இப்படியாச்சே?!

கொரோனாவில் இருந்து மீண்டு வர கமல் வாழ்த்து.. ஆனால் கொரோனாவே இல்லை என ராதிகா ட்வீட்..; என்ன கமல் சார் இப்படியாச்சே?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தன் ட்விட்டரில்…

கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். (1/2)

முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன்.

நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட. (2/2)

இவ்வாறு கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் செக் மோசடி வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார் ராதிகா.

அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என கூறப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் அவர் ஆஜராகவில்லை என கூறப்பட்டது.

இந்நிலையில் இதனை ராதிகா மறுத்துள்ளார்.

அவரின் ட்விட்டரில் இன்று…

‛‛எனக்கு கொரோனா இல்லை. இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போட்டேன். எனவே லேசான உடல் வலி உள்ளது.

என்னை பற்றி வரும் செய்திகள் பொய்யானவை . நீதிமன்றத்தில் நாங்கள் நீதியை பெற போராடி வருகிறோம்.

மீண்டும் எனது வழக்கமான பணியை தொடங்கி விட்டேன்” என பதிவிட்டுள்ளார் ராதிகா.

இதோ ராதிகாவின் ட்வீட்..

Thanks everyone for the love and affection, I am not down with corona virus, just body ache after second vaccine. On line press are just filing rubbish about health and case.We will fight it in higher courts. I am back at work, have a good day

என்னப்பா இங்க நடக்குது..??

சமக & மநீம ஒரே கூட்டணியில் தானே உள்ளது.

ராதிகாவை தோழி என்கிறார் கமல். ஆனால்… அவரிடமே கேட்டு ட்வீட் போட்டு இருக்கலாமே கமல் சார்.??!!

Actress Radika clarifies her health on social media

அஜித் பட ரீமேக் ரிலீஸ்.: தியேட்டரை அடித்து நொறுக்கிய பவர் ஸ்டார் ரசிகர்கள்

அஜித் பட ரீமேக் ரிலீஸ்.: தியேட்டரை அடித்து நொறுக்கிய பவர் ஸ்டார் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அமிதாப் நடித்த ‘பிங்க்’ படம் தமிழில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படமானது.

தற்போது தெலுங்கு ரீமேக்கில் வக்கீல் சாப் ஆகியுள்ளது.

இதில் பவர் ஸ்டார் பவன் கல்யாண், அஞ்சலி, நிவேதா தாமஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று வெளியானது.

இந்த நிலையில், தெலங்கானாவின் ஜகுலம்பா கத்வால் என்ற ஒரு பகுதியிலுள்ள தியேட்டர் ஒன்றில் படம் திரையிடப்பட்டது.

அப்போது திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பவர் ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள், தியேட்டரை அடித்து நொறுக்கினர்.

சில தினங்களுக்கு முன் ’வக்கீல் சாப்’ பட் ட்ரெய்லர் வெளியானது.

அப்போது வேறு ஒரு தியேட்டரின் கண்ணாடி கதவுகளை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் நுழைந்தனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Cinema theatre vandalised in Andhra as Pawan Kalyan’s ‘Vakeel Saab’ shows cancelled

More Articles
Follows